news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் யூபிலி நிறைவு விழா: 5,000 தன்னார்வலர்களின் நெகிழ்ச்சியான இறுதிப் பயணம்!

யூபிலி ஆண்டின்  (Jubilee Year) நிறைவை முன்னிட்டு, வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் 5,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற புனிதக் கதவு நோக்கிய இறுதிப் பயணம் உணர்ச்சிகரமாக நடைபெற்றது. ஓராண்டு காலமாக 33 மில் லியனுக்கும் அதிகமான புனிதப் பயணிகளுக்குப் பணியாற்றிய தன்னார்வலர்கள், பச்சை நிற மேலங்கி அணிந்து பாடல்கள் மற்றும் செபங்களுடன் புனிதக் கதவைக் கடந்தனர். இந்தச் சேவை பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவமான சூழலில் நடைபெற்றதாகப் பேராயர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை லியோ இந்தக் கதவுகளை மூடிய பிறகு, மீண்டும் 2033-ஆம் ஆண்டு மீட்பின் யூபிலிக்காகவே இவை திறக்கப்படும் எனக் கூறப்பட்டது. பேராலயத்தின் மையத்தில் நடைபெற்ற நிறைவு வழிபாட்டில் பேசிய பேராயர், “நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றாது; நீங்கள் திரு அவையின் வாழும் கற்களாகத் திகழவேண்டும்எனத் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
கொல்கத்தா மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் முதல் பெண் இயக்குநர்

கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இளைஞர் பணிக்குழுவின் இயக்குநராக திருமதி. ஆஞ்சலா பெர்ரிஸை நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு பொதுநிலையினர் அதிலும் குறிப்பாக, ஒரு பொதுநிலைப் பெண், மறைமாவட்ட இளைஞர் பணியை வழிநடத்த நியமிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். கொல்கத்தா உயர்மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் இயக்குநராக கடந்த ஒன்பது ஆண்டுகள் அருள்தந்தை சந்தீப் மைக்கேல் பிஸ்வாஸ் பணியாற்றி வந்தார். அவரின் பணி மாற்றத்தைத் தொடர்ந்து, உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு எலியாஸ் ஃபிராங் அவர்கள் இந்தியாவின் முதல் பொதுநிலையினர் பெண் மறைமாவட்ட இளைஞர் இயக்குநராக இவரை நியமித்துள்ளார்.

திருமதி. ஆஞ்சலா பெர்ரிஸ் இந்தியக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தில் (ICYM) நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தவர். இவருடைய அருள்பணி ரீதியான நுண்ணறிவு, அமைப்பு ரீதியான அனுபவம், மேலும் இளைஞர் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவத்தில் இவரின் பங்களிப்பு இவற்றால் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இந்த நியமனம், இந்தியாவில் பல்வேறு மறைமாவட்டங்களுக்கும் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூட்டியக்கப் பண்பைச் (Synodality) செயல்படுத்துவதற்கு இந்நிகழ்வு தூண்டுதலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

news
வத்திக்கான் செய்திகள்
“ஏழைகள் வழியாகக் கடவுள் நம்முடன் தொடர்ந்து பேசுகிறார்” - திருத்தந்தை

கிறிஸ்து பிறப்பு விழாக் காலங்களில் ஆண்டுதோறும் வத்திக்கானில் நடைபெறும்  ஏழைகளுடன் இசைஎன்னும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களைத் திருத்தந்தை லியோ அண்மையில் சந்தித்தார். திருத்தந்தை பிரான்சிஸின் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியைஅழகான பாரம்பரியம்என்று நினைவுகூர்ந்த அவர், கிறிஸ்துவின் மானுடலேற்பு தந்தையாம் கடவுள் நம் ஒவ்வொருவர் மீதும் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். “மாண்பினை இழந்து துயருறும் மனிதகுலத்தில் தொலைந்துபோன ஆடுகளைத் தேடிச் செல்லும் கடவுளின் தெய்வீகச் செயல்பாடே, கிறிஸ்துவின் பிறப்பில் வியத்தகு முறையில் பொருள்படுகிறதுஎனும் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்டின்  (Deus Caritas Est) கூற்றை மேற்கோள் காட்டிய திருத்தந்தை லியோ, “இது வெறும் இசை நிகழ்வு மட்டுமல்ல; மாறாக, ஏழைகள் மற்றும் மிகவும் தேவையில் இருப்பவர்களில் கிறிஸ்துவை அடையாளம் காணக்கூடியதாக அமையவேண்டும்எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் வெளிவந்த தனதுDilexe Te (‘நான் உன்னை அன்பு செய்கிறேன்) என்னும் திருத்தூது ஊக்கவுரையிலிருந்து மேற்கோள் காட்டிய திருத்தந்தை, “இது வெறும் மனிதக் கருணையின் செயல் அல்ல; மாறாக, ஒரு தெய்வீக வெளிப்பாடு. ஏழைகள் வழியாக அவர் தொடர்ந்து நம்மிடம் பேசுகிறார்; ஆகவே, மனித மாண்பு, உடைமைகளைச் சார்ந்தது அல்ல; நாம் வெறும் பொருள்கள் அல்ல; மாறாக, கடவுளால் நேசிக்கப்படும் அன்புக் குழந்தைகள். இந்தப் பார்வையில் இசை நிகழ்ச்சி மிகவும் பின்தங்கிய ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அமையட்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
தென்கிழக்கு ஆசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திருத்தந்தையின் இறைவேண்டல்!

தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்காக இறைவேண்டல் செய்துள்ளதாகத் திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 1500 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்காகத் திருத்தந்தை லியோ சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி இறைவேண்டல் செய்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், அண்மைக்காலமாக நிலவி வரும் இயற்கைப் பேரழிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் தான் நெருக்கமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், அவர்களுக்காக உதவி வழங்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்காகவும் தான் இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உலகளாவிய சமூகமும், நல்லெண்ணம் கொண்ட அனைவரும் அந்த வட்டாரங்களில் உள்ள நமது சகோதர-சகோதரிகளுக்குப் பக்க பலமாக துணை நிற்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“இல்லாதவர்களுக்காக நாம் குரல் கொடுக்கவேண்டும்”- திருத்தந்தை லியோ

வாராந்திர பொதுப்பார்வையாளர் சந்திப்பின் போது, தேவைப்படுபவர்களுக்கு உதவவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நாம் குரல் கொடுக்க வேண்டும் எனத் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

பாதையை மாற்றவும்புதிய வரலாறு  படைக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். நாம் கிறித்தவ நம்பிக்கையின் விதையாகப்  பலனளிக்கவும், நம் இதயங்களைப் பயன்படுத்தவும், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முயலவேண்டும்என்ற திருத்தந்தை, மேலும், ‘தோட்டத்தின் பாதுகாவலராக இல்லாவிட்டால், மனிதன் அதை அழிப்பவனாக மாறுகிறான்என்ற மேனாள் திருத்தந்தை பிரான்சிஸின் கூற்றை மேற்கோள்காட்டி, “கிறித்தவ நம்பிக்கை இன்று மனிதகுலம் முழுவதும் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதிலளிக்கிறது. சிலுவையில் அறையப்பட்டவர் விதையாக வைக்கப்பட்ட தோட்டத்தில் நாம் வாழ்வதன் மூலம், மீண்டும் உயிர்த்தெழுந்து அதிகப் பலன்களைத் தருகிறோம்என்று தெரிவித்துள்ளார்.

இதயத்தில் தொடங்கி ஆன்மிக ரீதியான இத்தகைய சிந்தனை, வரலாற்றை மாற்ற நம்மைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்துகிறது. மேய்ப்பனின் பெயரிலும் ஆற்றலிலும் திரு அவையின் குழந்தைகள் ஒவ்வொருவரும் குறிப்பாக, பல  இலட்சக்கணக்கான   இளைஞர்களும், ஏழைகளின் அழுகையையும், பூமியின் கதறலையும்  கேட்ட நல்லெண்ணம் கொண்ட பிற ஆண்களையும் பெண்களையும் சந்திக்க வேண்டும்அதுவே அவர்களின் இதயங்களைத் தொடும்எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும்”- திருத்தந்தை லியோ

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் தேசியக் கத்தோலிக்க இளைஞர் மாநாடு (NCYC) நடைபெற்றது. இந்நிகழ்வில் காணொளி வாயிலாகப் பங்கேற்ற திருத்தந்தை லியோ, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் நட்பில் வளரவும், தங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்த தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்தவும், அரசியல் உத்திகளைத் திரு அவையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் வேண்டும். நாம் கடவுளின் இரக்கத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர் நம்மை மன்னிக்கிறார்; அவர் மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையவில்லை; நாம்தான் அதை அவரிடம் கேட்பதில் சோர்வடைகிறோம்என்று திருத்தந்தை பிரான்சிஸின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.

மேலும், “கடவுளின் இதயம், நம்முடைய இதயத்தைவிட மாறுபட்டது. ஏனெனில், அவர் தொலைந்துபோன ஆடுகளைத் தேடுவதில் ஒருபோதும் சோர்வடையவில்லை. அனைவரும் இயேசுவுடன் ஆழமான உறவுக்குத் தங்களை அர்ப்பணிக்கவேண்டும். வாழ்க்கை குழப்பமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும்போது  இயேசுவைத் தேடவேண்டும்என அவர் அறிவுறுத்தினார்.

அதேபோல், தொழில்நுட்பத்தால் ஏற்படும் நம்பிக்கையின் விளைவுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள மக்களை இணைக்க நவீனக் கருவிகள் பயன்படுகின்றன. தொழில்நுட்பம் பல காரியங்களை வெற்றிகரமாகச் செய்ய நமக்கு உதவுகின்றனஎனவும் கூறினார்மேலும்நமது கிறித்தவ நம்பிக்கையை வாழவும் குறிப்பாக, இது செபம், திருவிவிலியம் படிப்பது மற்றும் நாம் நம்பிக்கைகொள்வதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கும் அற்புதமான  கருவிகளையும் நமக்கு வழங்குகிறது. ஆயினும், உண்மையான நேரடி உறவுகள் மற்றும் நற்கருணையில் பங்கேற்பதை ஒருபோதும் தொழில்நுட்பம் மாற்ற முடியாதுஎன்றும் அவர் குறிப்பிட்டார்.