“பெண்கள்
யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. எந்தச் சூழலிலும் ‘தாங்களாகவே’ இருக்கவேண்டும்.
அனைவரும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். நீங்கள் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும் நேர்மையாகப் பணியாற்றி உங்கள் கனவுகளை முழு மனதுடன் நனவாக்கவேண்டும். மாணவர்களின் கனவுகளை நனவாக்க நேர்மை அவசியம். மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத முன்வர வேண்டும். மாணவர்கள் நேர்மையாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். ஒருவர் செல்வத்தை இழக்கலாம், ஆரோக்கியத்தை இழக்கலாம்; ஆனால், குணத்தை இழந்தால் தன்னையே இழந்ததுபோல் ஆகும்.”
திருமிகு. இஷா
சிங்,
டெல்லி
வடக்கு
மாவட்டக்
கூடுதல்
துணை
காவல்
ஆணையர்
“ஓர்
அறிவுசார்ந்த பொருளாதாரமாக இந்தியா உருவாக வேண்டுமானால், உயர்கல்வியும் ஆராய்ச்சியும் மிக வலுவாக வளர வேண்டியது அவசியம். அந்த வகையில், உயர்கல்வித்துறையில் முக்கியப் பிரச்சினையாக இருப்பது பேராசிரியர் காலிப் பணியிடங்கள்தான். நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும்
50 விழுக்காட்டிற்கும்
மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், கல்வித் தரமும், ஆராய்ச்சி முன்னேற்றமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு
வசதிகள் சரியாக இல்லை. ஆய்வகங்கள், ஆராய்ச்சி வசதிகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, உலகளவில் போட்டியிடக்கூடிய தரமான ஆராய்ச்சியை உருவாக்கப் பல நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.”
திருமிகு. இ.
பாலகுருசாமி,
மேனாள்
துணைவேந்தர்
“ஒரு
நாட்டின் தலைவர் கொலை செய்யப்படும்போது, அந்த நாடும் உலகமும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கும்? நாடுகளின் தலைவர்கள் மிரட்டப்படும்போது, உலகில் அமைதி நிலவாது. உலகளாவிய சட்டங்களை அமெரிக்கா மீறி வருகிறது. டிரம்ப்பைப் பிரதமர் மோடி ‘நண்பர்’ என்று அழைக்கிறார். இந்தியா இரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்தது. ஆனால், டிரம்ப் கொள்முதல் செய்யக்கூடாது அல்லது வரி விதிப்பேன் என்றார். டிரம்ப் ஒரு சர்வாதிகாரி. பிரதமர் மோடி அவருடைய சொல்படி கேட்கிறார். நாட்டை நிர்வகிக்க மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தனர். அதை விடுத்து, நாடு முழுவதும் பயணிக்கும் பிரதமர், தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நீண்ட காலத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத சூழலில், அதன் தலைவர்களை குறிவைத்துப் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்டமைத்த நாட்டை மோடி அழித்து வருகிறார்.”
திருமிகு. மல்லிகார்ஜூன்
கார்கே,
காங்கிரஸ்
தேசியத்
தலைவர்