news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (30.08.2026)

இசை என்பது திருவழிபாட்டை அலங்கரிக்கும் ஒன்றல்ல; மாறாக, திருவழிபாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இறைவேண்டலின் வெளிப்பாடாகவும் உள்ளது.”

ஆகஸ்டு 19, புதன் பொது மறைக்கல்வி உரை, வத்திக்கான்

இன்று மரியாவில் நாம் மகிழ்ச்சியுடன் காணும் வாழ்வின் நிறைவு, காலத்தின் முடிவில் நமக்கும் காத்திருக்கிறது.”

ஆகஸ்டு 15, சனிக்கிழமை, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

உண்மையான அழகு அன்பிலும் தூய்மையிலும் வெளிப்படுகிறது. மரியாவின் விண்ணேற்பு மனிதகுலத்தின் விண்ணக அழைப்பை எடுத்துக்காட்டுகிறது.”

ஆகஸ்டு 15, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா திருப்பலி,

புனித தோமா வில்லனோவா திருத்தலக் காஸ்தல் கந்தோல்போ

lex orandi, lex credendi அதாவது, நாம் எவ்வாறு செபிக்கிறோமோ, அவ்வாறே நாம் நம்புகிறோம். அதாவது, இறைவேண்டலின் சட்டமே நம்பிக்கையின் சட்டமாகவும் அமைகிறது.”

ஆகஸ்டு 19, புதன் பொது மறைக்கல்வி உரை,

புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான்

இறைவனின் அருள்விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. இறைவனின் பிள்ளைகள் எவரும் புறக்கணிக்கப்படவோ, வெறும் சிறு துணுக்குகளுடன் விடப்படவோ கூடாது என்பதையும் கற்றுத்தருகிறது கானானியப் பெண்ணின் ஆழமான நம்பிக்கை.”

ஆகஸ்டு 16, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை,

காஸ்தல் கந்தோல்போ

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (16.08.2026)

இசை மனித இதயங்களை இறைவனை நோக்கி உயர்த்தும் ஓர் அருள்கொடை. இசையின் அழகு, மனிதரை அழகின் முழுமையான ஆதாரமாகிய இறைவனைச் சந்திக்கச் செய்கின்றது.”

ஜூலை 29,  காஸ்தல் கந்தோல்போவில் உள்ள திருத்தந்தையரின் தோட்டத்தில்  ‘அமைதியின் புகழ்ப்பாடல்என்ற செப நிகழ்வு

நற்செய்தியால் ஒளியூட்டப்பட்ட மனச்சாட்சியை எந்தச் சங்கிலியாலும் சிறைப்படுத்த முடியாது. ஆண்டவர் தம் பிள்ளைகளுக்காக ஆயத்தப்படுத்தும் விடியலை எந்த இரவும் தடுக்க முடியாது, இறைவனின் அன்பிலிருந்து எவரையும் எந்தச் சிறையும் பிரிக்க முடியாது.”

ஜூலை 31 அன்று 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற 97 வயதான கர்தினால் எர்னெஸ்ட் சிமோனி அவர்களுக்கு அனுப்பிய செய்தி

மனிதனின் உடல் பசியை மட்டுமல்ல, உண்மை மற்றும் வாழ்விற்கான ஆழ்ந்த ஆன்மிக ஏக்கத்தையும் கிறிஸ்துவே உண்மையாக நிறைவு செய்கிறார்.”

ஆகஸ்டு 2 ஞாயிறன்று  புனித பேதுரு பெருங்கோவில் வத்திக்கான் செய்தி

ஆண்டவரின் அழைப்பைக் கேட்டு உறுதியுடனும் துணிவுடனும் அவரைப் பின்பற்றுங்கள். இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் அனுபவம் நம் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. அது அவரது அன்பிற்கும் இரக்கத்திற்கும் சாட்சிகளாக வாழும் வலிமையை நமக்குத் தருகிறது.”

ஆகஸ்டு 3,  தேசிய இளையோர் தினத்திற்கு அனுப்பிய காணொளிச் செய்தி

செபம் இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல் மற்றும் அருளடையாளங்கள் ஆகியவை ஆண்டவருடனான தனிப்பட்ட சந்திப்பிற்கு வழிவகுக்கின்றன.”

பன்னாட்டு இளையோர் விழா தொடக்க நிகழ்வை முன்னிட்டு  அனுப்பிய செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (09.08.2026)

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் எப்போதும் உண்மை, மனித மாண்பு மற்றும் பொதுநலனுக்குச் சேவை செய்யவேண்டும்.”

ஜூலை 27, சிலி நாட்டின் சாண்டியாகோவில் நடைபெற்ற திரு அவை தகவல் தொடர்பு குறித்த உலகளாவிய கருத்தரங்கு 

முதியவர்கள் சுமை அல்ல; பேணிப் பாதுகாக்கவேண்டிய இறைவனின் கொடை! முதுமை என்பது ஆன்மிக ஓய்வுக்காலம் அல்ல; அது இறைவன் அளிக்கும் ஓர் அழைப்பு.”

ஜூலை 26, வத்திக்கானில் நடைபெற்ற 6-வது உலக தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோர் நாள்  செய்தி

இளைஞர்களின் உற்சாகம் அனைவரிடமும் புதிய மறைப்பணி உணர்வைத் தூண்டுகிறது. கிறிஸ்து இல்லாத வாழ்க்கை அருளற்ற வாழ்க்கை.”

ஜூலை 25, ‘அல்லேலூயாகத்தோலிக்க இசை விழாவை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தி

கிறித்தவ ஒருமைப்பாடு கிறிஸ்துவின் மறைபொருளில் வேரூன்றி உள்ளது. அருள்சாதனங்கள், குறிப்பாக நற்கருணை மூலம் அது ஊட்டமளிக்கப்படுகிறது.”

ஜூலை 24, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டம்

அணு ஆயுதங்கள் அமைதியை உருவாக்குவதில்லை; மாறாக, ஆயுதக் குறைப்பே நிலையான அமைதியை உருவாக்கும்.”

22 ஜூலை, திருத்தந்தையின் புத்தகம்ஆயுதமற்றதும் ஆயுதங்களை அகற்றுவதுமானது: அமைதி ஒரு கொடை.’

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (02.08.2026)

இறையாட்சி, அதிகாரத்தாலும் வல்லமையாலும் அல்ல; மாறாக, தாழ்மை, பொறுமை மற்றும் அன்பின் வழியே அமைதியாக வளர்கிறது.” 

ஜூலை 19, மூவேளைச்  செப உரை

அழகு, இசை மற்றும் கலை மனிதர்களின் பார்வையை விண்ணகத்தை நோக்கி உயர்த்தி, துன்பங்கள் நிறைந்த உலகில் நம்பிக்கையை அளிக்கின்றன.”

ஜூலை 18, அல்பானோ மறைமாவட்டம்  இசைக் கச்சேரியில் சிறப்பு உரை

இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதில் தங்கள் கைகளில் கறைபடும் என்ற அச்சமின்றி, ஆயர்களும் நம்பிக்கையாளர்களும் துணிவுடன் செயல்படவேண்டும்.”

ஜூலை 13,  ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவுச் செய்தி

இயேசு கிறிஸ்துவே தந்தையால் உலகில் விதைக்கப்படும் உயிருள்ள விதையே. மனிதரின் மீட்பிற்காகத் தம் உயிரை அர்ப்பணித்து, பலன்தரும் விதையாக இன்றும் உலகில் தொடர்ந்து செயல்படுகிறார்.”

ஜூலை 12,  நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

வன்முறை, வெறுப்பு மற்றும் பாகுபாடுகளால் சிதைந்திருக்கும் இன்றைய உலகில் ஒற்றுமை, ஒருவரையொருவர் அரவணைக்கும் மனப்பான்மை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்

ஜூலை 11, போர்கோ லவுதாத்தோ சி (Borgo Laudato si\') வளாக நிகழ்வு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (26.07.2026)

அனைத்துலகச் சமூகம் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக் கூடாது; மிகவும் சவாலான சூழல்களிலும், இறைமக்கள் நம்பிக்கையின் ஒளியை அணையவிடாமல் காத்து வாழவேண்டும்.”

 ஜூலை 14,   மூவேளைச் செப உரை

திரு அவை பாபேல் கோபுரத்தைக் கட்டும் கட்டடக் கலைஞர்களாக இல்லாமல், ஒன்றிப்பை உருவாக்குபவர்களாக உருவாக வேண்டும்.”

ஜூலை 13, ஆசிய ஆயர் பேரவை கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவுச் செய்தி

இறைவார்த்தையைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளும்போது, தூய ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வளர்ந்து, உலகையும் மாற்றும் வல்லமையுடையவையாக அமையும் 

ஜூலை 12, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

இறைவார்த்தை, தினசரி செபம், ஒப்புரவு அருளடையாளங்கள் மற்றும் நற்கருணை ஆகியவற்றின் வழியாகக் கிறிஸ்துவுடன் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.”

ஜூலை 10,  ஈராக்கில் நடைபெற்ற இளைஞர் சந்திப்புக் காணொளிச் செய்தி

செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்காலத்தில் மனிதகுலத்தின் மாண்பையும் பொதுநலனையும் பாதுகாக்கும் வகையில், புதிய பாதைகளைத் தேட அனைவரும் ஒன்றிணைந்து செயல்ப        டவேண்டும்.”

ஜூலை 9,    ஜெனீவாவில் நடைபெறும் AI for Good Global Summitமாநாட்டை முன்னிட்டு அனுப்பிய செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (19.07.2026)

போர்களும் மோதல்களும் நிறைந்த உலகில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, இறை இரக்கத்தையும் மனமாற்றத்தையும் நாடவேண்டும்.”

ஜூலை 7,  லோடி மறைமாவட்டத்தில் 27-வது புனித கொலம்பானுஸ் விழா செய்தி

அனைத்து நம்பிக்கையாளர்களும் தங்களது பங்குச் சமூகங்களில் ஆழமான நற்கருணை வாழ்வை வளர்த்தெடுத்து, தங்கள் வாழ்க்கையை இறைவனின் அன்பான திருவுளத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கவேண்டும்.”

ஜூலை 6, அமெரிக்கா 2026 தேசிய நற்கருணை திருப்பயணத்தின் நிறைவு காணொளிச் செய்தி

இயேசுவின் சிலுவை மனிதரை ஒடுக்கும் சுமை அல்ல; மாறாக, அவர் நம்மோடு சேர்ந்து சுமக்கும் அன்பின் நுகம்.”

ஜூலை 5, மூவேளை இறைவேண்டல் செப உரை

இறைவனை நேசிப்பதும், அயலானை நேசிப்பதும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவை. பிறரின் வேதனையைக் கண்டு அவர்களுக்கு உதவுவது வழியாகவே நாம் இறைவனின் அன்பில் பங்கெடுக்கிறோம்.”

ஜூலை 04, லம்பேதூசா தீவின் சலினா - ‘அரேனாவிளையாட்டு மைதானத்தில் திருப்பலிச் செய்தி

திரு அவை வாழ்வின் நற்செய்திக்கு உயிரோட்டமான சாட்சியாக இருந்து, ஒவ்வோர் உயிரும் வரவேற்கப்பட்டு மதிக்கப்படும் இல்லமாக விளங்கவேண்டும்.”

ஜூலை 02, ஜூலை மாத இறைவேண்டல் செய்தி