news
தமிழக செய்திகள்
“பாராட்டத்தக்க அர்ப்பணிப்பு!”

அன்பார்ந்த நண்பர் அருள்தந்தை இராஜசேகரன் அவர்களே,

மிகுந்த ஆர்வத்துடன்நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கம் தொடங்கியநம் வாழ்வுஇணைய தினசரி இதழின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்பான வாழ்த்துகள்! ஒரு வருடமாக தமிழ் கத்தோலிக்கச் சமூகத்திற்கு உண்மை, நம்பிக்கை மற்றும் திரு அவையின் குரலை உண்மையுடன் எடுத்துச் சென்ற உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இது வெறும் ஒரு மைல்கல் மட்டுமல்ல; செய்தி, நம்பிக்கை, சத்தியம் என்ற மூன்று அடிப்படைகளின் மூலம் தமிழ் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களை இணைத்த ஒரு பணியின் தொடக்கமும் ஆகும்.

அன்னை மரியாவும், தூய ஆவியானவரும் உங்கள் இந்தத் திருப்பணியைத் தொடர்ந்து வழிநடத்தி, வளர்ச்சியடைய அருள்பாலிக்கட்டும். இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள சேவையாற்ற இறைவன் உங்கள் குழுவினருக்கு ஆசி வழங்குவாராக! ‘நம் வாழ்வுதலைவர் ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும், ‘நம் வாழ்வுவாசகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.

முனைவர் ரபி பெர்னார்ட், நாடாளுமன்ற மாநிலங்களவை மேனாள் உறுப்பினர்

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்ட்

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக பிரபல ஊடகவியலாளரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கத்தோலிக்கரான திரு. பெலிக்ஸ், சென்னை இலயோலோ கல்லூரியில் பயின்றவர். தமிழ்நாட்டில் பலராலும் அறியப்பட்ட ஊடகவியலாளர். ‘சன், ‘சத்தியம்தொலைக்காட்சி சேனல்களில் செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், ’ரெட் பிக்ஸ்என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த துயர நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊடகத் துறையிலிருந்து விலகி .வெ.. கட்சியில் இணைந்த இவர், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கட்சியின் கருத்துகளை முன்வைத்து வந்தார்.

.வெ.. தலைவர் விஜய்யின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது சிறுபான்மையினர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட இவரது நியமனம், சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு ஒரு புதிய தீர்வைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சிறுபான்மை சமூக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் முழு கவனத்துடன் உழைப்பதாக உறுதி அளித்துள்ள இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

news
தமிழக செய்திகள்
திண்டுக்கல் மறைமாவட்டத் திருத்தூதரக நிர்வாகியாக மதுரைப் பேராயர் மேதகு அந்தோணிசாமி சவரிமுத்து நியமனம்!

திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு பி. தாமஸ் பால்சாமி அவர்களின் பணி ஓய்வு விண்ணப்பத்தைத் திருத்தந்தை 14-ஆம் லியோ ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்தியாவிற்கான திருத்தூதரக நிர்வாகம் திரு அவைச் சட்ட விதி 401, 1-இன்படி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் திருத்தூதரக நிர்வாகியாக (apostolic administrator) மதுரை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு முனைவர் அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களைத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். இது குறித்து ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாகப் பொறுப்பேற்கும் பேராயர் அந்தோணிசாமி அவர்களின் பணி சிறக்கத் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும், தனது ஆயர் பணியின்போது முழு ஒத்துழைப்பு நல்கிய மறைமாவட்டக் குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டுச் செயல்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக உபயோகிக்கவேண்டும். இதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். குறிப்பாக, இத்திட்டங்களைச் செயல்படுத்தும் துறைகளின் மாதாந்திரச் செலவீன விவரம், பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் பயனாளிகளின் விவரத்தை wwwadtwdap.tn.gov.in வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள தடைகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான பரிந்துரைகளைத் தெரிவிக்கவேண்டும். அதற்கான புதிய திட்டங்களை அனைத்துத் துறைச் செயலர்கள் உருவாக்கவேண்டும்.”

மாண்புமிகு. ஜோசப் விஜய், தமிழ்நாடு முதல்வர்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது வகைகளைஆன்லைன்மூலம் முன்பதிவு செய்வது நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காகத் தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4,048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன; அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். இது மது வணிகத்தையும், மதுப்பழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது அரசுக்குப் பெருமை சேர்க்காது. மதுப்பழக்கத்தை அதிகரிக்கவே செய்யும். மது முன்பதிவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும்.”

திருமிகு. அன்புமணி, பா... தலைவர்

கீழடி அகழாய்வில் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் எழுதப் படிக்க அறிந்து இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குழந்தைகளைத் தினந்தோறும் புத்தகம் வாசிக்க பெற்றோர் ஊக்குவிக்கவேண்டும். புத்தக வாசிப்புடன் மாமல்லபுரம், கீழடி, பொருநை போன்ற அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகள் தமிழர்களின் கலை நுணுக்கங்களை, வாழ்வியலை அறிந்துகொள்ள முடியும். நவீன உலகத்தைக் குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையில் நூல்களை, கட்டுரைகளை எழுத்தாளர்கள் படைக்கவேண்டும்.”

திருமிகு. ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

மின்வாரிய அதிகாரிகளில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் குளறுபடிகளால் மக்களுக்குத் தவறான கட்டணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது .வெ.. அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது. எனவே, மின் கணக்கீட்டுப் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

திருமிகு. நயினார் நாகேந்திரன், பா... மாநிலத் தலைவர்

தமிழ்நாடு அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் ரூ.1.5 இலட்சம் கோடி வேளாண்மை மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். குறுவைச் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 சிறப்பு மானியம் வழங்கவேண்டும். பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவேண்டும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆக உயர்த்தப்படவேண்டும். அனைத்து வேளாண்மைப் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும். நெல் கொள்முதல் கிடங்குகள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படவேண்டும்.”

திருமிகு. அன்புமணி, பா... தலைவர்

இன்றைய சமூகத்தில் சாலை விபத்துகள், சைபர் மோசடிகள், போதைப் பழக்கம் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. தமிழ்நாட்டில் தினமும் ரூ.13 கோடி முதல் ரூ.15 கோடி வரை சைபர் மோசடிகளால் பொதுமக்கள் பணத்தை இழக்கின்றனர். எனவே, ஆன்லைன் மோசடிகள் குறித்து அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். போதைப்பொருள் மட்டுமின்றி, மதுப்பழக்கமும் போதைதான். போதைப்பழக்கம் ஒருவரின் எதிர்காலத்தை மட்டுமல்ல; குடும்பத்தை, சமூகத்தைச் சீரழிக்கும். எனவே, சாலை விபத்து, சைபர் குற்றம், போதைப்பழக்கம் ஆகிய மூன்று ஆபத்துகளிலிருந்தும் மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, போதையற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கவேண்டும்.”

திருமிகு. . அமல்ராஜ், சென்னை காவல் ஆணையர்

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்வி நிலையங்களும் மாணவர்களுக்கு நவீனத்துடன் கலாச்சாரம், பாரம்பரிய உணர்வையும் புகட்டவேண்டும். நவீனத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும்போதுதான் சமநிலையான வளர்ச்சியைப் பேணமுடியும். நாட்டின் மக்கள்தொகையில் 65% இளையோர் உள்ளனர். எனவே, இந்தியாவைஇளைஞர்கள் நாடுஎன்றே கூறலாம். வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதும் பிரதான அமைப்பு முறையில் அவர்களை இணைப்பதும் முக்கியமானது. நவீன வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்க நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். எதையும் சாதிக்கக்கூடிய, அசைக்க முடியாத துணிச்சல் கொண்ட நமது இளைஞர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமுள்ளன.”

உயர்மிகு. திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்க, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் அவர்களைப் பணியமர்த்துவது சமூகநீதிக் கொள்கைக்கு முரணானதாகும். முந்தைய ஆட்சியாளர்கள் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்கக்கூடாது என்ற கோரிக்கையைப் புறக்கணித்தனர். இச்சூழலில் புதிய அரசு தனியார்மயமாக்கலுக்கு முடிவு கட்டவேண்டும். மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்கும் முயற்சியை உடனடியாக அரசு கைவிடவேண்டும். மேலும், தற்காலிக முறை, ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்கவேண்டும்.”

உயர்மிகு. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்

விவசாயிகள் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் என எல்லா இடங்களிலும் கடன் வாங்கி விவசாயம் செய்கிறார்கள். 2021 முதல் 2023 - ஆம் ஆண்டு வரை, 1,968 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு நாளைக்கு இரு விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டிலும் கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.”

திருமதி. சௌமியா அன்புமணி, பா... சட்டமன்ற உறுப்பினர்