news
சிறுகதை
பிறந்த நாளுக்கு அழைப்பு - காவல் அன்னை 17 (தொடர் கதை)

டாக்டர் சேவியர், அண்ணா பூங்காவில் நடைப் பயிற்சியில் நடந்து கொண்டிருந்தார். சில நாள்கள் இப்படிக் காலையில் நடப்பதுண்டு. அப்போது டாக்டர் யாழினியின் தந்தை கருணாகரன் நடந்து வந்தார்.

வாங்க டாக்டர் வாங்க, என்ன இப்படி பார்க்கிற்கு வந்திருக்கீங்க?” என்றார் சிரித்தபடி கருணாகரன்.

வாரத்தில் ஓரிரு நாள்கள் வருவதுண்டு. மற்றபடி இப்படி வர நேரம் கிடைப்பதில்லைஎன்றார் சேவியர்.

நான் தினமும் வந்திருவேன். வயசாயிருச்சில டாக்டர். இப்படி நடந்தால் நல்லதுன்னு வந்திருவேன். உங்களைப் பார்த்ததில் ரெட்டிப்பு சந்தோசம்என்றார் கருணாகரன்.

என்ன ரெட்டிப்பு சந்தோசம்?” என்று கேட்டார் சேவியர்.

வேற ஒண்ணுமில்லே, என்னோட பையன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கான். அவனோட பேரு முத்தரசன்என்றார் கருணாகரன்.

அப்படியா! யாழினிக்குத் தம்பி இருக்கிறதாச் சொன்னதில்லையே?” என்றார் சேவியர்.

இவன் கலிபோர்னியாவில் சாப்ட்வேர் இன்ஜினியராய் வேலை செய்றான். வருசத்திற்கு ஒரு தடவ வந்து இருபதுநாள் இருந்திட்டுப் போவான்என்றார் கருணாகரன்.

ரொம்ப சந்தோசம். ஒரு நாளைக்குச் சந்திக்கிறேன்என்றார் சேவியர்.

அதைத்தான் இப்பச் சொல்ல வந்தேன். இவனுக்குக் கல்யாணம் முடிக்க பெண் பார்த்துக்கிட்டு இருக்கோம். இன்னும் முடிவாகலேஎன்றார் கருணாகரன்.

நல்லது. காலாகாலத்தில் கல்யாணம் முடிங்க. இல்லைன்னா அங்கேயே யாரையாவது லவ் பண்ணி கட்டிடப் போறார். அப்புறம் உங்களுக்குக் கல்யாண வேலை இல்லாமல் போய்விடும்என்று சிரித்தார் சேவியர்.

இப்ப நான் சொல்ல வந்தது, நாளைக்கு யாழினிக்கு பிறந்த நாள். இதைகிரீன் பார்க்ஹோட்டலில் நடத்தலாம்னு இருக்கோம். வேற ஒண்ணுமில்லே. மதியம் ஒரு விருந்துதான். நீங்க உங்க அம்மா, தங்கச்சியோட கட்டாயம் வரணும்என்றார் சேவியர்.

கட்டாயம்  வர்ரோம். நாளை லீவ் நாள்தானேஎன்றார் சேவியர்.

டாக்டர் இஸ்மாயில் குடும்பத்தையும் யாழினிட்டே கூப்பிடச் சொன்னேன். அவங்களும் வருவாங்கஎன்றார் கருணாகரன்.

சரி, நான் பாத்திமா சர்ச் பாதரைப் பார்க்கப் போகணும், வரட்டுமா?” என்று விடைபெற்றார் சேவியர்.

வாங்க டாக்டர், என்ன விசேசம்? எப்படி இருக்கீங்க?” என்றார் பாதர் அந்தோணிசாமி.

பாதர், இந்தச் செக்கை வெச்சுக்கோங்க. சர்ச் காரியத்திற்குப் பயன்படுத்திக்கோங்கஎன்று ஒரு செக்கை நீட்டினார் சேவியர்.

பரவாயில்லை டாக்டர். மாதா மாதம் பதிமூன்றாம் தேதி மாதாவுக்குச் சிறப்பு நவநாள் நடத்தி மக்க ளுக்கு மதிய விருந்து தருவோம். அதற்கு இதைப் பயன்படுத்துறேன்என்று சிரித்தார் அந்தோணிசாமி.

அப்போது அருகிலுள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளி தலைமைச் சகோதரி ப்ளோரா வந்தார்.

வணக்கம் டாக்டர்! எங்களோட பள்ளியிலே ஒரு நாள் மருத்துவக் கேம்ப் நடத்தணும். எங்க மாணவிகளைச் செக்கப் பண்ணி மருந்து மாத்திரை குடுக்கணும்என்றார்.

ஒருநாள் எங்க ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் இஸ்மாயிலைப் பார்த்துச் சொல்லுங்க. கட்டாயம் ஏற்பாடு செய்வார்என்றார் சேவியர்.

நீங்க தூத்துக்குடியாமே! நானும் தூத்துக்குடி அருள்தாஸ்புரம்தான்என்றார் சிஸ்டர் புளோரா.

ரொம்ப சந்தோசம் சிஸ்டர்என்றார் சேவியர்.

நான் சிவகங்கை பகுதிக்காரன். காளையார் கோவில் அருகே உள்ள சூசையப்பர் பட்டணம் என் ஊர். நான் பூந்தமல்லியில் படித்தபோது சென்னை டையசிஸ்க்கு வந்துவிட்டேன்என்று சிரித்தார் அந்தோணி.

ரொம்ப நன்றி பாதர். நான் கிளம்புறேன்என்று புறப்பட்டார் டாக்டர் சேவியர்.        

(தொடரும்)

news
சிறுகதை
சந்தித்து விளக்கம் (காவல் அன்னை – 16) - தொடர் கதை

டாக்டர் சார், உட்காரலாமா?” என்று கேட்டபடி டாக்டர் சகாதேவன் அறைக்குள் நுழைந்தாள் யாழினி.

தாராளமாய் உட்காருங்க யாழினி, என்ன விசயமாய் வந்தீங்க?” என்று கேட்டான் சகாதேவன்.

வேற ஒண்ணுமில்லே. உங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்குப் போயிருக்காங்கஎன்று ஆரம்பித்தாள் யாழினி.

ஆமா யாழினி போனாங்க. உங்க வீட்லே போய் உங்களைப் பெண் கேட்டிருக்காங்கஎன்றான் சகாதேவன் சிரித்தபடி.

பெண் கேட்டதில எந்தத் தப்பும் இல்லே! எங்க வீட்லே ரெண்டு நாள்லே பதில் சொல்றதாச் சொன்னாங்களாம்என்றாள் யாழினி.

ஆமாம். அப்படித்தான் உங்க வீட்லே பதில் சொன்னாங்களாம். அதுக்கென்ன யாழினி?” என்றான் சகாதேவன்.

அதைப் பத்தி ஒண்ணுமில்லே. நல்ல பதிலாய் சொல்லணும்னாங்களாம். அதுதான் யோசிக்க வைக்குது டாக்டர்என்றாள் யாழினி.

உங்க சம்மதத்தை அவர்கள் எதிர்பார்த்து அப்படிச் சொல்லியிருக்கலாம்னு நினைக்கிறேன் யாழினி. இதில் ஒன்றும் தப்பில்லேஎன்றான் சகாதேவன்.

இந்த ஆஸ்பிட்டலில் நான் வந்ததிலிருந்து நீங்க என்னை விரும்புறீங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால், அதற்கு எனக்கு விருப்பம் இருக்கணும்லேஎன்றாள் யாழினி.

ஏன், நான் உங்களுக்கு ஏற்றவனாய் இல்லையா? அதனால் கல்யாணம் பண்ணமுடியாதுன்னு நினைக்கிறீங்களா? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கஎன்றான் சகாதேவன்.

என்னோட குணமும் உங்களோட குணமும் ஒத்துப்போக வாய்ப்பில்லே டாக்டர்என்றாள் யாழினி.

ஏன் சாதி வேறு வேறுன்னு நினைக்கிறீங்களா?” என்றான் சகாதேவன்.

அதைப்பத்தி கவலை இல்லே டாக்டர். நான் வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதனால்தான் இப்படிச் சொன்னேன்என்றாள் யாழினி.

அது யார்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான் சகாதேவன்.

அதை இப்ப சொல்லமுடியாது. ஆனால், விரைவில் தெரியத்தான் போகுது. எனவே, நீங்க வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஏற்பாடு பண்ணுங்கஎன்றாள் யாழினி.

இது உங்க முடிவாய் இருக்கலாம் யாழினி. ஆனால், உங்க வீட்ல வேற முடிவெடுத்தால் என்ன பண்ணுவீங்க?” என்றான் சகாதேவன்.

பெற்றோர் முடிவெடுத்தாலும் நான் சம்மதிக்கணும் டாக்டர். என் சம்மதம் இல்லாமல் எனக்கு எப்படிக் கல்யாணம் நடக்கும்?” என்று சிரித்தாள் யாழினி.

அப்படி நீங்க கண்டுபிடிச்சவர் யார்னு சொல்ல வேண்டியதுதானே? அவர் இங்கே உள்ளவரா?” என்று கேட்டான் சகாதேவன்.

அது உங்களுக்குத் தேவை இல்லாத விசயம். நான் உங்களைத் திருமணம் செய்ய வாய்ப்பில்லைஎன்று சிரித்தாள் யாழினி.

சிரிக்காதீங்க யாழினி. இது சீரியசான விசயம். எப்படியும் நாம் கல்யாணம் பண்றதுதான் நம்ப குடும்பத்துக்கு விருப்பம். உங்களுக்கும் நல்லதாய் இருக்கும்என்றான் எரிச்சலுடன் சகாதேவன்.

பார்ப்போம், பார்ப்போம் டாக்டர்என்று கூறிவிட்டு வெளியேறினாள் டாக்டர் யாழினி.

news
சிறுகதை
பாத்திமா மாதா திருவிழா (காவல் அன்னை - 15) - தொடர் கதை

கோடம்பாக்கம் பாத்திமா ஆலயத்தில் பாத்திமா மாதா திருவிழாச் சிறப்பாக நடக்கும். தேர் கிளம்பி வந்து சேர்வதற்கு இரவு 12 மணியாகிவிடும். அருளம்மாவும் அமலியும் தேரோடு நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் வந்து கையைப் பிடித்தாள்.

என்னம்மா, நீங்க யாரு?” என்று கேட்டாள் அருளம்மா.

என்னைத் தெரியலையா? இராத்திரிங்கிறதாலே தெரியலை போலஎன்றாள் அந்தம்மா.

சரி, சொல்லுங்கஎன்றாள் அமலி.

நான்தான் சந்தனமேரியோட அம்மா. சொந்த ஊர் தூத்துக்குடி. உங்க தெருதான்... மறந்திட்டீங்கலேஎன்றாள் அந்தம்மா.

ஆமாங்க, வயசாயிருச்சிலே... அதுதான் தெரியலேஎன்றாள் அருளம்மா.

என்னோட பையன் இங்கேதான் குடியிருக்கான். அவனும் மருமகளும் சாப்ட்வேர்லே வேலை செய்றாங்க. வீடு யுனைடெட் காலனி முதல் தெருஎன்றாள் அந்தப் பெண்மணி.

அப்படிங்களா, எப்ப இங்கே வந்தீங்க?” என்று கேட்டாள் அமலி.

நாங்க வந்து ரெண்டு நாளாயிருச்சு. பெசன்ட் நகர் கோவில், தோமையார் மலை, சைதாப்பேட்டை தோமையார் ஒளிந்த இடம், அருவி இதெல்லாம் பார்த்தோம்என்றாள் அந்தப் பெண்.

ஏம்மா, நம்ம சாந்தோம் தோமையார் சர்ச், பிராட்வே அந்தோணியார் சர்ச் பார்த்ததையும் சொல்லுஎன்று நினைவுபடுத்தினாள் மகள் சந்தனமேரி.

அதைத்தான் நீ சொல்லிட்டியேஎன்றாள் தாய்.

நாளைக்கு இருந்தால் எங்க வீட்டுக்குக் கட்டாயம் வாங்க. இராகவேந்திரா மண்டபத்திற்கு அடுத்த தெருவில் முதல் வீடுதான் அடையாளம். மறக்காமல் வாங்க, ரொம்ப சந்தோசம்என்றாள் அருளம்மா.

இந்தப் பங்கிலே நம்ம தூத்துக்குடிக்காரங்க நிறைய இருக்காங்க; பலரைப் பார்த்து சந்தோசப்பட்டோம்என்றாள் அந்தப் பெண்மணி.

மறுநாள் காலையில் சொன்னபடியே சந்தனமேரி அப்பா, அம்மாவுடன் சேவியர் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

கீழே கிளினிக் இருக்காங்க?” என்றாள் சந்தனமேரி.

ஆமாங்க, அண்ணன் பேஷண்ட்டை இங்கே பார்ப்பார். அதன்பிறகு ஆஸ்பத்திரிக்குப் போவார்என்றாள் அமலி.

பரவாயில்லை, நல்ல பெரிய வீடுதான். தூத்துக்குடியிலிருந்து இங்கே வந்து செட்டில் ஆயிட்டீங்க. எல்லாம் வேலையை வெச்சுத்தானே?” என்றாள் வந்தவள்.

என்ன செய்றது? தூத்துக்குடியில் பனிமய மாதாதான் எங்களுக்குக் காவல் அன்னை. இங்கே பாத்திமா மாதாதான் காவல் அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள். தினமும் சர்ச்சிலே மாதாவைச் சந்திச்சிட்டுத்தான் டாக்டர் வேலையைத் தொடங்குவார்என்றாள் அருளம்மா.

ரொம்ப நல்லதுங்க. நாங்க இன்னைக்கி இராத்திரி கிளம்புறோம். கல்யாணம் பத்தி பிறகு விரிவாய் பேசலாம்என்று வந்தவர்கள் போய்விட்டார்கள்.

அருளம்மாவும் அமலியும் என்ன செய்வதென்று முழித்தார்கள்.

(தொடரும்)

news
சிறுகதை
வெற்றிலை, பாக்கு, பீடி (காவல் அன்னை 14 - தொடர் கதை)

வீட்டிற்குள் பழம், பூந்தட்டுகளுடன் நுழைந்தவர்களைப் பார்த்ததும் கருணாகரனுக்கும் இந்திராதேவிக்கும் ஒன்றும் புரியவில்லை.

வணக்கம், வணக்கம்...” என்றபடி உள்ளே வந்தார்கள் கலையரசனும் சுந்தரியும்.

வாங்க, நீங்க யாரு? என்ன விசயமாய் வந்திருக்கீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார் கருணாகரன்.

என் பேரு கலையரசன். சிட்டியில் பெரிய ரியல் எஸ்டேட் ஓனர். இவளோட பேரு சுந்தரி, என் மனைவி. நாங்க டாக்டர் சகாதேவனுடைய பெற்றோர். இப்ப உங்க மகள் டாக்டர் யாழினியை சகாதேவனுக்குப் பெண் கேட்கத்தான் வந்திருக்கோம்என்றார் கலையரசன்.

அப்படி விளக்கமாகச் சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்! டாக்டர் சகாதேவன் யாழினியோட வேலை செய்ற டாக்டர். அது எங்களுக்கு யாழினி சொல்லியிருக்காள்என்றாள் இந்திராதேவி.

நான் ஆளுங்கட்சியிலே முக்கியப் பதவியிலே இருக்கேன். எங்கிட்டே ஏகப்பட்டோர் வேலை செய்றாங்க. உங்க மகளை என்னோட பையனுக்கு கல்யாணம் முடிக்க விரும்புறோம். அதுதான் இங்கே இப்ப பெண் கேட்டு வந்திருக்கோம்என்றார் கலையரசன்.

நீங்க பெண் கேட்டு வருவது சரிதான். இதை முன்னாடியே சொல்லி இருந்தால் நாங்களும் தயாராய் இருந்திருப்போம். வேற ஒன்றுமில்லேஎன்றாள் இந்திரா.

அதனாலென்ன, அவங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை செய்றவங்க. ஒருத்தரை ஒருத்தர் நல்லாத் தெரிஞ்சவங்க. இதிலே புதுசா ஒண்ணும் அவங்க அறிமுகம் தேவையில்லே! அதுதான் கிளம்பி வந்திட்டோம்என்றாள் சுந்தரி.

அதெல்லாம் சரிதான். பெண்ணுக்குப் பலர் கேட்டு வரத்தான் செய்வாங்க. அது வழக்கமானதுதான். சரி, உங்களோட விவரத்தைப் பேசுங்கஎன்றார் கருணாகரன்.

விவரம் ஒண்ணும் விரிவாச் சொல்ல வேண்டியதில்லே. அதோ உங்க பெண் படத்தைப் பார்த்திட்டோம். நல்ல அழகான டாக்டர்தான். உங்க சம்மதம் தேவைதான். சரின்னா அடுத்த வாரம் நிச்சயம், அடுத்த மாதம் உடனே கல்யாணம் நடந்திடும்என்றார் கலையரசன்.

எங்க யாழினிக்கிட்டே பேசி, நாங்க அவளோட எண்ணத்தைத் தெரிஞ்சுக்க வேண்டாமா? உடனே எப்படிப் பதில் சொல்ல முடியும்?” என்றாள் இந்திரா.

நல்லா கேளுங்க. நாங்க இருக்கும்போதே வரச் சொல்லுங்க. போனில் யாழினியோட கருத்தைத் தெரிஞ்சு சொல்லுங்கஎன்றார் கலையரசன்.

அது சரியானதில்லே. நாங்க மகளோட உட்கார்ந்து பேசணும். அவளோட கருத்தைத் தெரிஞ்சு, பதில் சொல்றோம்என்றார் கருணாகரன்.

அதுவும் சரிதான். எதையும் அவசர அவசரமாய் பேசி முடிவெடுக்கக்கூடாது. நீங்க நல்லா பேசி, கலந்துரையாடி மகளோட விருப்பம் தெரிஞ்சு சொல்லுங்க. நாங்க போயிட்டு வாரோம். நீங்க நல்ல பதிலாய் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறோம்என்று சிரித்தபடி எழுந்தார் கலையரசன்.

நல்ல பதில்னா எப்படிங்க?” என்றார் கருணாகரன்.

அவங்க நாம் சம்மதம் சொல்வோம்னு சொல்றாங்க, அதைத்தான் எதிர்பார்க்கிறாங்க. நான் சொல்றது கரெக்ட்தானேஎன்று சிரித்தாள் இந்திரா.

அதேதான்! சம்மதிச்சா எதிர்காலம் அவங்களுக்கு நல்லா இருக்கும். ரெண்டு பேரும் டாக்டர் இல்லையா? அதைத்தான் நாங்க ஆவலாய் எதிர்பார்க்கிறோம்என்றாள் சுந்தரி.

யாழினிட்டே பேசிட்டு, கட்டாயம் முடிவு சொல்லிட்றோம்என்றாள் இந்திரா. வந்தவர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள்.

(தொடரும்)

news
சிறுகதை
அழையா விருந்தாளி! (காவல் அன்னை – 13)

வாங்க... வாங்க... என்ன திடீர்னு வர்றீங்க?” என்று வரவேற்றாள் அருளம்மா.

வாங்க... வாங்க... உட்காருங்கஎன்றாள் அமலி.

கருணாகரனும் இந்திராதேவியும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள்.

இங்கே இராகவேந்திரா திருமண மண்டபத்திலே எங்க சொந்தக்காரப் பொண்ணுக்குக் கல்யாணம்... அதுக்கு வந்தோம். பக்கத்திலே உங்க வீடு இருக்கே, ஒரு பார்வை பாத்திட்டுப் போகலாம்னு வந்தோம்என்றாள் இந்திரா.

என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டாள் அமலி.

ஒண்ணு வேண்டாம், கல்யாணத்திலே நல்ல விருந்து, டாக்டர் சேவியர் இல்லையா?” என்று கேட்டாள் இந்திரா.

சாப்பிட்டுவிட்டு மேலே ரெஸ்ட் எடுக்கிறார்என்றாள் அருளம்மா.

உங்க சொந்த ஊர் எதுங்க?” என்று ஆரம்பித்தாள் அமலி.

அதை ஏன் கேட்கிறீங்க? எங்களுக்குத் திருநெல்வேலிதான் சொந்த ஊர். அங்கே பி.டி. ஆசிரியையாக நான் இருக்க, இவர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராய் இருந்தார்என்றாள் இந்திரா.

அப்போ எங்க ஊருக்குப் பக்கம்தான் போங்கஎன்றாள் அருளம்மா.

ஆமாங்க, என் பொண்ணுக்கு பதிமூணு வயதாகும் போது கழுத்திலே கட்டி வந்திருச்சி. ஆஸ்பத்திரியிலேஇது கேன்சர் கட்டி, நீங்க சென்னை அடையாறு போங்கஎன்று சொல்லிட்டாங்கஎன்றார் கருணாகரன்.

நாங்க அடையாறு போய் அந்தக் கட்டிக்கு ரேடியேஷன் வெச்சிட்டு ஒரு வாரம் தங்கி இருந்திட்டு வருவோம்என்றாள் இந்திரா

அப்ப ஐந்து தடவை மாதா மாதம் போய் வைத்தியம் பண்ணி யாழினியைக் காப்பாத்தினோம்என்றார் கருணாகரன்.

யாழினி நல்லா படிச்சாள், ஆனா இவளுக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்கலேஎன்றாள் இந்திரா.

அடப்பாவமே, நல்லா படிச்சவளுக்கே மெடிக்கலில் இடம் தரலியா?” என்றாள் அருளம்மா.

இருந்தாலும் யாழினிநான் டாக்டருக்குப் படிப்பேன்என்று அடம் பிடித்தாள். தெரிந்தவர்கள் மூலம் சீனாவில் டாக்டருக்குப் படிக்க அனுப்பினோம்என்றார் கருணாகரன்.

சீனாவிலே போயா டாக்டருக்குப் படிச்சது?” என்று ஆச்சரியமாய் கேட்டாள் அமலி.

ஆமாங்க, அங்கே போய் நான் கேன்சருக்கு வைத்தியம் பார்க்கிறதுக்குத்தான் படிப்பேன்னு கேன்சர் டாக்டராய் படிப்பை முடித்து வந்தாள் யாழினிஎன்றாள் இந்திரா.

ஆஹா, எவ்வளவு வைராக்கியம் பாருங்க யாழினிக்கு!” என்றாள் அருளம்மா.

அப்போ எங்க வீட்டுக்காரர் சி...வாக மதுரையில் இருந்தார். அதனால் மதுரை வடமலையான் ஆஸ்பத்திரியில் யாழினியை வேலைக்குச் சேர்த்து விட்டார்என்றாள் இந்திரா.

மதுரையில்தான் முதல்லே யாழினி டாக்டராய் இருந்ததா?” என்றாள் அமலி.

ஆமாம், யாழினியோட படிச்ச பொண்ணு சென்னை ஆஸ்பத்திரிக்கு வம்பு பண்ணி வரச் சொல்லி சேர்த்துவிட்டாள். நாங்களும் ரிட்டையராகி இங்கே வந்துவிட்டோம்என்றார் கருணாகரன்.

நீங்க போய் டிவியைப் பாருங்க, இவங்கட்டே பேசிட்டு நாம கிளம்பலாம்என்றார் இந்திரா.

என் கணவர் பெரிய வேலையில் இருந்ததால் பலரோடு சேர்ந்து குடிக்கப் பழகிட்டார்என்றாள் இந்திரா.

இப்படித்தான் நிறையப்பேர் கெட்டுப் போறாங்கம்மாஎன்றாள் அருளம்மா.

இவர் வேலையிலே கரெக்ட்தான். ஆனால், ராத்திரின்னா தண்ணி போடணும்... என்ன செய்ய? நான் சமாளிச்சு ஓட்டிக் கிட்டிருக்கேன்என்றாள் இந்திரா.

ஆமாங்க, நிறைய வேலைக்குப் போறவங்க பார்லே நிக்கிறதைப் பார்க்கிறோம். குடி குடும்பத்தைக் கெடுக்கும்னு உணராமல் அழிஞ்சு போறாங்கஎன்றாள் அமலி.

news
சிறுகதை
மருத்துவரின் தொண்டு (காவல் அன்னை - தொடர் கதை 12)

வணக்கம்! உங்க எல்லாரையும் இக்கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கின்றேன்  என்றார் இஸ்மாயில்.  எல்லாரும்வணக்கம்கூறிவிட்டு அமர்ந்தார்கள்.

நம்ம மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று நான் நினைக்கின்றேன்என்றார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஸ்டீபன்ராஜ்

ஆமாம் டாக்டர், நம்ம உழைப்பாலே இந்த மருத்துவமனை நல்ல பேர் பெற்றுள்ளது. அத்துடன் முன்பைவிட அதிக பேஷண்ட் வந்து செல்கின்றனர். இந்த ஏரியாவில் நமது ஆஸ்பிடல் பற்றி நிறைய பேர் அறிந்து இங்கே வருகிறார்கள்என்றார் இஸ்மாயில்.

அதற்குக் காரணம் எங்களோட உழைப்புதான் டாக்டர். நாங்கள் கடமை உணர்வுடன் பேஷண்டுகளைக் கவனித்து வைத்தியம் பார்ப்பதுதான் இதற்கான முக்கியக் காரணம்என்றார் டாக்டர் சகாதேவன்.

வெரிகுட்! அனைவருடைய கடமையும் பாராட்டுதற்குரியது. இங்கே இருந்தவர்களில் வயதானவர்கள் அதிகமில்லை. ஒருசிலர் மட்டுமே வயதான டாக்டர்களாக உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் இளையவர்கள்தான்என்றார் தலைமை மருத்துவர்.

நாங்கள் பெற்ற அனுபவம் நிறைய இல்லை என்றாலும், கடமையை மனிதநேயத்துடன் செய்யும் போது நமக்கு வெற்றி கிடைக்கிறது. இதுதான்  உண்மை டாக்டர்என்றார் டாக்டர் யாழினி.

இதுதான்  உண்மை டாக்டர்! உழைப்பு என்பது கடமையில் தவறாமல் இருப்பது. நமது கடமையைச் சரியாக நிறைவேற்றுவதால்தானே தொழில் சிறப்படைகின்றதுஎன்றார் டாக்டர் மதுசூதனன்.

இதை ஏன் தொழில் என்று சொல்கிறீர்கள்? இது ஒரு தொண்டுதானே? நமது மக்களுக்கு அவர்கள் உயிர் வாழ உறுதுணைபுரிகின்றோம். இதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்என்றார் தலைமை மருத்துவர்.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இப்பொழுது இந்தக் கூட்டத்தின் காரணத்தை நான் சொல்லி விடுகின்றேன். நமது மருத்துவமனைக்கு முன்பாக நிறைய இடம் உள்ளது. கார் பார்க்கிங்கிற்குப் போக மீதியுள்ள இடத்தில மேலும் ஒரு நான்கு மாடி கட்டடம் கட்டலாம் என்று முடிவெடுத்துள்ளோம்என்றார் டாக்டர் இஸ்மாயில்.

அப்படியானால் இந்த மருத்துவமனை மிகவும் நெருக்கடியாக அமைந்துவிடுமே?” என்றார் டாக்டர் மதிவதனி.

வேறு வழி இல்லையே டாக்டர் மதிவதனி. இப்ப பேஷண்ட் நிறைய வர்றாங்க. பெட் ரொம்பவும் அதிகமாய் தேவைப்படுது. டாக்டர்களுக்கும் போதுமான அறை இப்பொழுது இல்லை. இந்தத் தேவையை முன்னிட்டுதான் ஆஸ்பத்திரியில் புதிய பில்டிங் கட்ட முடிவெடுத்துள்ளோம்என்றார் டாக்டர் பாத்திமா.

ஆஸ்பத்திரியின் நிர்வாகிகள் நீங்கள்தான். டாக்டர்கள் பேஷண்டுகள் தேவையறிந்து செய்வதில் தவறில்லைஎன்றார் டாக்டர் சேவியர்.

தேவைக்காக நெருக்கடியில் கஷ்டப்பட முடியுமா?” என்றார் டாக்டர் சகாதேவன்.

சகாதேவன், போகப்போகத் தேவைகள் கூடும் போது அதற்கேற்ப நாம் செய்துதான் ஆகவேண்டும். இந்த ஆஸ்பத்திரி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. நமது மருத்துவப்பணியைத் தேடிவரும் பேஷண்டுகளுக்கான தேவையை நாம் நிறைவேற்றுவோம். அதுதான் சிறந்த சேவையாய் இருக்கும்என்றார் இஸ்மாயில்.

இத்துடன் கூட்டம் முடிந்தது. தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிஎன்றார் மருத்துவமனை சூப்பிரண்ட்.

(தொடரும்)