news
வத்திக்கான் செய்திகள்
உலக நலவாழ்விற்கான யூபிலி நாள்

வத்திக்கானில் ஏப்ரல் 5, 6 ஆகிய நாள்களில் நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்விற்கான யூபிலி நாள் கொண்டாடப்பட்டது. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய பேராயர் ரீனோ பிசிகெல்லா, மருத்துவர் Lucia Celesti போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எதிர்நோக்கை வழங்குவதாகக் கூறினார். நோயாளர்களுக்காகவும் உலக நலவாழ்விற்காகவும் மருத்துவர்கள், தன்னார்வலர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் யூபிலி நிகழ்வில் பங்கேற்றனர். மோசமான சூழல்களில் கடவுளின் நம்பிக்கை மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என மருத்துவர் Rocìo Bellido Octavio தெரிவித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘சாந்தா மார்த்தா’ இல்லம் திரும்பினார் திருத்தந்தை

ஏறக்குறைய 38 நாள்கள் ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கெனத் தொடர் சிகிச்சைப் பெற்று வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த மார்ச் 23 அன்று உடல்நலம் பெற்று சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார். நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனையின் வெளிப்புறமான பால்கனி என்னும் மாடிமுகப்பில் இருந்தவாறே வெளிப்புறத்தில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் மெலிதான குரலில் நன்றி தெரிவித்து, திருப்பயணிகளை வாழ்த்தினார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் ஏறக்குறைய 3000 மக்கள் கூடியிருந்து திருத்தந்தையின் ஆசிரைப் பெற்றனர்.

news
வத்திக்கான் செய்திகள்
உடல் சோர்வு; ஆனாலும் பணியில் ஆர்வம் குறையவில்லை!

மார்ச் 21 அன்று திருப்பீடத்தின் வெளியுறவுத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர், திருத்தந்தை உடல் நலம் குன்றிய நிலையிலும் திரு அவைக்கும் மனித குலத்திற்குமான அவரின் பணி ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை எனத் தெரிவித்தார். திருத்தந்தையின் உடல் நலனுக்காகத் தொடர்ந்து செபித்து வரும் அனைவருக்கும் திருப்பீடம் நன்றியுரைப்பதாகத் தெரிவித்தார். பொதுநலனுக்காக உழைக்க வேண்டியது, நீதி மற்றும் அமைதிக்காக அர்ப்பணிக்க வேண்டியது போன்றவை இன்றைய காலத்தின் தேவை என்பதையும் எடுத்தியம்பினார் பேராயர் காலகர்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை தன் குரலிலேயே வழங்கிய நன்றி செய்தி!

பிப்ரவரி 24 முதல் திருத்தந்தை உடல்நலன் பெறுவதற்காக வத்திக்கான் அதிகாரிகள், கர்தினால்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் புனித பேதுரு பேராலய வளாகத்தில் இரவு 9 மணிக்குச் செபமாலை செபித்து வருகின்றனர். தனக்காகச் செபித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது குரலில் இஸ்பானிய மொழியில் நன்றி செய்தி வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தி புனித பேதுரு வளாகத்தில் ஒலிபரப்பப்பட்டது.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் உடல் நலத்திற்காகச் சிறப்பு செபமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் விரைவில் நல்ல உடல் நலம் பெற உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களால் சிறப்பு செப வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், உரோமில் உள்ள கர்தினால்கள், ஆயர்கள், மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் இறைமக்கள் அனைவரும் இணைந்து பிப்ரவரி 24, திங்கள்கிழமை இரவு 9 மணிக்குச் சிறப்பு செப மாலை செபித்தனர். புனித டொமேனிக்கோ ஆலயத்தில் நடைபெற்ற இச்சிறப்பு செப வழிபாட்டைத் தலைமையேற்று நடத்திய போலோஞ்னா உயர் மறைமாவட்டப் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பிதிருத்தந்தைக்கான இந்தச் சிறப்பு செபமாலையில் நோயாளர்கள், மறக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்கள், வன்முறை மற்றும் போர் என்னும் நோயுடன் வாழ்பவர்களையும் நினைவில் வைத்து அவர்களுக்காகச் செபிப்பதும் திருத்தந்தை அவர்களை மகிழ்விக்கும்என்றும் கூறினார்.

news
வத்திக்கான் செய்திகள்
சிறைப்பணியாற்ற முன்வாருங்கள்!

நவம்பர் 16 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்ற நாற்பது திருத் தொண்டர்களிடம், “அரசு சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் எண்ணெயையும், எதிர்நோக்கு என்னும் திராட்சை இரசத்தையும் வழங்கவும்,  கலாச்சாரம், சமூகம், தீமைகள், மறைக்கப்பட்ட பாவங்கள் போன்ற பல சங்கிலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்கவும் முன்வர வேண்டும்என்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

புனித வியாழனன்று, பெண்கள் சிறைக்குச் சென்று, தான் அவர்களின் பாதங்களைக் கழுவியதையும், சிறைக்கைதிகளில் இருந்த ஒரு பெண் தன்னை அழைத்து தனது மகனையே தான் கொன்றதாகக் கூறியதையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.