news
வத்திக்கான் செய்திகள்
இறைவனின் கரம் நம்மை வழிநடத்தும்!

கடந்த நவம்பர் 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த இத்தாலிய கைவினைஞர்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினரிடம், “மனிதத் தொழிலின் மதிப்பை மிக அழகான விதத்தில் வெளிப்படுத்துபவர்கள் கைவினைஞர்கள். அவர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். கைவினைத் திறமை என்பது படைப்பாற்றல் மிக்கது. அது கடவுளின் படைப்புத் தொழிலோடு ஒத்துப்போகின்றதுஎன்று கூறிய திருத்தந்தை, படைப்பாற்றலை அழிவுக்குள்ளாக்கும் அல்லது முடக்கிப் போடும் அச்சத்தை அனைத்துக் கைவினைஞர்களும் தூர ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், நம் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் நம் திறமைகள் மட்டுமல்ல, இறைவனின் கரமும் நம்மை வழி நடத்துவதை நாம் உணர வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
இறந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்காகத் திருப்பலி

நவம்பர் 4-ஆம் நாள் அன்று திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் 2023-ஆம் ஆண்டு இறந்த ஏழு கர்தினால்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.  இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட நல்ல திருடனின் வார்த்தைகளைத் தன் மறையுரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்என்பதை அடிக்கடி கூறுபவர்களாக வாழ வேண்டும்என்று வலியுறுத்தினார். மேலும், இயேசுஇரக்கம் நிறைந்த நீதிபதிஎன்றும், ‘பாவிகளின் செபத்தை இறைவன்எப்போதும் கேட்கின்றார், இறுதிவரை கேட்கின்றார்என்றும், ‘வலியால் துளைக்கப்பட்ட கிறிஸ்துவின் இதயம் உலகைக் காப்பாற்றத் திறக்கிறதுஎன்றும் எடுத்துரைத்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
திரு அவைக்குப் புதிய 14 புனிதர்கள்
அக்டோபர் 20 அன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், ஓர் அருள்பணியாளர், 8 ஆண் துறவறத்தார், 2 அருள்சகோதரிகள் உள்பட மூன்று பொதுநிலையினர் என மொத்தம் 14 பேர் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையின்போது, “கடவுள் அன்பானவர், கடைநிலையில் இருப்பவர்களுக்காகத் தம்மைத் தாழ்த்துபவர். போரை அல்ல; அமைதிக்கான வழிகளை உருவாக்குபவர். பணி பெறுவதற்காக அல்ல; பணிபுரிவதற்காக வந்தவர். அன்பிற்காக அவரது வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டது. அவரைப் பின்பற்றி, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதன் வழியாகவும், அவருடைய அன்பின் பரிசை வரவேற்பதன் வழியாகவும், நம் சிந்தனை முறையை மாற்றியமைப்பதன் வழியாகவும், நாமும் கடவுளின் செயலைக் கற்றுக்கொள்ளலாம். நாமும் கிறிஸ்துவை, அவரது பணியைப் பின்பற்றவும், உலகத்தில் நம்பிக்கையின் சாட்சிகளாகவும் இருக்க புதிய புனிதர்களின் பரிந்துரையை நாம் நம்பிக்கையுடன் கேட்போம்”  என எடுத்துரைத்தார்.
news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கானின் உலக இளைஞர் ஆலோசனைக் குழுவில் இந்திய இளம்பெண்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரேயா பிரான்சிஸ் அவர்கள் உலக இளைஞர் ஆலோசனைக் குழுவில் (The International Youth Advisory Body)) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹோமியோபதி மருத்துவரான ஃபிரேயா தற்போது கோயம்புத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். ஓர் இறைநம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்த இவர், ‘இயேசு-இளைஞர் இயக்கத்தில் (Jesus Youth Movement) தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தற்போது தமிழ்நாட்டில் மண்டலத் துணை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வரும் இவர்தான் தொடங்கியஇறைவேண்டல்வாயிலாகத் தலைமைப் பொறுப்புகளில் உயர்ந்து, பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்ளத் திறமைகளை வளர்த்து கொண்டவர்

வத்திக்கான் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த உலக இளைஞர் ஆலோசனைக் குழுவில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் இளைஞர் பணி மற்றும் அது சார்ந்த திரு அவையில் இருக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவர்.

வத்திக்கானின் இந்த நியமனம் திரு அவையில் இளைஞர்களின் பங்கேற்பிற்கும் மற்றும் உலகக் கத்தோலிக்கக் கலந்துரையாடல்களில் வளர்ந்து வரும் இந்தியக் குரலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக அமைகிறது. இந்தியாவின் பிரதிநிதியாக இவர் மூன்று ஆண்டுகள் தனது பணிகளை மேற்கொள்வார்.