news
வத்திக்கான் செய்திகள்
“கிறிஸ்துவைப் போல உருமாறி புனிதர்களாக வாழுங்கள்” - திருத்தந்தை அழைப்பு!

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்றுவரும் குருக்களுக்கான மாநாட்டிற்குத் திருத்தந்தை லியோ செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். “தற்கால மதச்சார்பற்ற கொள்கைகளும் சவால்களும் குருக்களைத் திகைக்க வைக்கவேண்டாம். இறைவேண்டல் மற்றும் கிறிஸ்துவின் அருகாமையே மக்களின் இதயத் தாகத்தைத் தீர்க்கும். இன்றைய திரு அவைக்குத் தேவைப்படும் குருக்களாக மாற புனித அவிலா யோவானின் ஆலோசனையைப் பின்பற்றி முற்றிலும் இறைவனுக்கே உரியவர்களாக அதாவது புனிதர்களாக வாழுங்கள்என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், “வெறும் கடமைகளைச் செய்பவர்களாக இல்லாமல், நற்கருணையால் ஊட்டம் பெற்று கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும்மறு கிறிஸ்துவாக (Alter Christus) மாறவும், ஆழமான செப வீரர்களாக இருங்கள்; இறைவனை ஆராதிக்க உங்கள் மக்களுக்குக் கற்றுக்கொடுங்கள்எனவும் திருத்தந்தை அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
நைஜீரியாவில் கிறித்தவர்களுக்கு எதிராகத் தொடரும் தாக்குதலுக்குத் திருத்தந்தை லியோ கடும் கண்டனம்!

நைஜீரியாவில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொடூரமான தாக்குதல்களுக்குத் திருத்தந்தை லியோ தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வன்முறையினால் உயிரிழந்த மக்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் தனது துயரத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய திருத்தந்தை, “பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் செபிக்கிறேன்; ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உயிரையும் உறுதி செய்ய நைஜீரிய அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும்என்றும் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 3 அன்று வோரோ கிராமத்தில் 160 பேர் கொல்லப்பட்ட துயரத்தையும், கதுனா மாநிலத்தில் அருள்பணியாளர் உள்பட 51 பேர் கடத்தப்பட்ட நிகழ்வையும் திருத்தந்தை சுட்டிக்காட்டியதோடு, காகு பகுதியில் உள்ள ஹோலி டிரினிட்டி ஆலயத்தின் பங்குத்தந்தை நதானியேல் அசுவாயே கடத்தப்பட்டதற்கும், மூன்று பேர் கொல்லப்பட்டதற்கும் திருத்தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.

மனிதக் கடத்தலுக்கு எதிராகப் பிலிப்பைன்ஸ் ஆயர்கள்!

மனிதக் கடத்தல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராகப் பிலிப்பைன்ஸ் திரு அவை தனது மறைமாவட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டுமெனப் பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCP) அழைப்புவிடுத்துள்ளது. பிப்ரவரி 1 அன்று அனுசரிக்கப்பட்ட தேசிய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் குறித்து ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆள்சேர்ப்பு, கட்டாய உழைப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இணையவழியில் பெருகிவரும் பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை பிலிப்பைன்சில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. வறுமை, கல்வியறிவின்மையைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு எனும் பெயரில் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மக்கள் கடத்தப்படுகின்றனர். மறைமாவட்ட அளவில்மனிதக் கடத்தலுக்கு எதிரான குழுக்களைஅமைப்பதன் மூலம், அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் வழங்க முடியும் என ஆயர் சாக்ரடீஸ் மெசியோனா வலியுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
புனித ஜான் ஹென்றி நியூமன் பொது உரோமன் நாள்காட்டியில் இணைப்பு!

திரு அவையின் மறைவல்லுநரான புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்களைக் கத்தோலிக்கத் திரு அவையின் பொது உரோமன் நாள்காட்டியில் இணைப்பதாகத் திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ ஆணையைத் திருவழிபாடு மற்றும் அருளடையாள ஒழுங்குமுறைக்கான திருப்பீடம் 2026, பிப்ரவரி 3 அன்று வெளியிட்டது. இதன்படி, இனி ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி புனித ஜான் ஹென்றி நியூமனின் நினைவு நாளாகக் கொண்டாடப்படும். 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து திரு அவையின் குருவாக இருந்த இவர், 1845-இல் கத்தோலிக்கத் திரு அவைக்கு மாறினார். பின்னர் கர்தினாலாக உயர்ந்த இவருக்கு, 2019-இல் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. கடந்த நவம்பர் 2025-இல் திருத்தந்தை இவரைதிரு அவையின் கல்விப் பணிக்கான இணைப் பாதுகாவலர்மற்றும்மறைவல்லுநர்என்று அறிவித்திருந்தார். அறிவுசார் தேடலும், ஏழைகளுக்கான சேவையும் இவரது வாழ்வின் இரு கண்களாக இருந்தன. ‘வரலாற்றில் பயணம் செய்யும் திரு அவையின் ஒளிமிகுந்த விளக்குஎன்று போற்றப்படும் இவரது நினைவு நாள், கிறித்தவர்களுக்கு ஒரு முன்மாதிரி என்று இந்த ஆணை புகழாரம் சூட்டியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
“நம்மில் ஆழமான செவிமடுத்தலும் உண்மையான உரையாடலும் வேண்டும்” – திருத்தந்தை

ஆயுதமற்ற அமைதியை நோக்கிஎன்ற வலிமையான செய்தியை 59-வது உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருத்தந்தை லியோ அவர்கள் வெளியிட்டுள்ளார். அதில் அமைதி என்பது வெறும் இலக்கல்ல; மாறாக, அது ஒரு தொடர் பயணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறை மற்றும் பிரிவினைகளால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றமறு சீரமைப்பு நீதி (Restorative Justice) முறையைப் பின்பற்றுமாறு அவர் உலகிற்கு அழைப்புவிடுத்துள்ளார். “இது வெறும் தண்டனை வழங்குவதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் இடையே உறவைச் சீரமைப்பதில் கவனம் செலுத்துகிறதுஎன்று தெரிவித்துள்ளார். ஆழமான செவிமடுத்தல் மற்றும் உண்மையான உரையாடல் மூலமே பிளவுகளைக் கடந்து அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.