news
வத்திக்கான் செய்திகள்
அமைதி என்பது வளர்ச்சிக்கான புதிய பெயர்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் கயானா தலைமைக்குத் திருப்பீடம் நன்றி தெரிவித்துள்ளது. அமைதி என்பது வளர்ச்சிக்கான புதிய பெயர் என்று 1967-ஆம் ஆண்டிலேயே திருத்தந்தை புனித 6-ஆம் பவுல் இறைவாக்காக உரைத்துள்ளார் என்றும், அமைதி என்பது போர் இல்லாத நிலை மட்டுமல்ல; மாறாக உடன்பிறந்த உணர்வு, ஒத்துழைப்பு மற்றும் எல்லா நலன்களையும் ஊக்குவிப்பதாகும் என்றும் கூறியுள்ளது. நீடித்த அமைதி என்பது தனிமனித மாண்பை மதிப்பதுடன், நீதியும் ஒற்றுமையும் மலரத் தேவையான சூழலை ஊக்குவிப்பது என்றும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
அருளாளர் கார்லோ அகஸ்திஸ்குப் புனிதர் பட்டம்!

இளைஞராக இருந்தாலும்இறைவனுக்குப் பணிசெய்ய வேண்டும்என்ற துணிவு புனித நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு நவம்பர் 20 புதன் மறைக்கல்வியின்போது 2025 ஏப்ரல் 27 அன்று மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ், பியர் ஜியோர்ஜியோ மற்றும் கார்லோ அகஸ்திஸ் ஆகியோருக்கு 2025 ஏப்ரல் 27 புனிதர் பட்டம் வழங்குவதை அறிவித்த நிலையில் அவரது மறைவினால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ செப்டம்பர் 7 ஞாயிறு அன்று அளிக்க இருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் மறைப்பணியை விவரிக்கும் ஆவணப்படம்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் பெரு நாட்டில் (Robert Francis Prevost) மறைப்பணியாளராக, பங்குப்பணியாளராக, பேராசிரியராக, உருவாக்குநராக, ஆயராக, நண்பராக ஆற்றிய மறைப்பணிகளை எடுத்துரைக்கும் விதமாக, ‘லியோன் தி பெருஎன்ற புதிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்பானிய மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படமானது, பெரு நாட்டில் உள்ள பல்வேறு சிறிய, பெரிய நகரங்கள், கிராமங்கள், மாவட்டங்கள், புறநகர்ப் பகுதிகள், பள்ளிகள், துறவற சபைகள் போன்ற இடங்களில் திருத்தந்தை அவர்கள் மறைப்பணியாற்றித் திருப்பலி நிறைவேற்றியது, இளையோரைச் சந்தித்தது ஆகியவை குறித்த காட்சிகளை உள்ளடக்கியுள்ளது.

267-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பெரு மக்கள், எவ்வாறு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள் என்பதும் இக்காணொளியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
அருளாளர்களாக உயர்த்தப்பட்ட அருள்சகோதரிகள்!

குருதி சிந்தி மறைச்சாட்சிகளாக மரித்த 15 தூய கத்தரீன் சபை அருள்சகோதரிகளை மே 31 அன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ. இவர்கள் போலந்து மீதான இரஷ்யப் படையெடுப்பில் 1945 ஜனவரி 22 முதல் நவம்பர் 25 வரை வன்முறையாளர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மறைச்சாட்சிகளாகத் தங்கள் உயிரை இழந்தவர்கள்.

news
வத்திக்கான் செய்திகள்
‘வணக்கத்திற்குரியவராக’ அறிவிக்கப்பட்ட இந்திய ஆயர்!

கொலம்பிய அருள்சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ் குவெஸ், இந்திய ஆயர் மேத்யூ மாகில், ஸ்பெயின் ஆயர் அலெக்ஸாண்ட்ரோ இலபாகா உகார்த்தே ஆகிய இறை ஊழியர்களைவணக்கத்துக்குரியவர்நிலைக்கு உயர்த்தும் ஆணைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார் திருத்தந்தை லியோ. ஆயர் மேத்யூ மாகில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மஞ்சூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1896-இல் சங்கனாச்சேரியின் திருத்தந்தையின் பதிலாளாக நியமிக்கப்பட்டவர். இவர் அன்னை மரியா வினவுதல் சபையின்  நிறுவுநர். அலெக்ஸாண்ட்ரோ இலபாகா உகார்த்தே, அருள்சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ் ஆகிய இருவரும் பூர்வக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்போது ஈக்குவதோர் மலைக்காடுகளில் நிகழ்ந்தவன் முறையில் மறைச்சாட்சிகளாகத் தங்கள் இன்னுயிரைக் கையளித்தவர்கள்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்பு!

மே 18, ஞாயிறு அன்று திரு அவையின் 267-வது திருத்தந்தையாகக் கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘14-ஆம் லியோஎன்ற பெயரை ஏற்றிருக்கும் புதிய திருத்தந்தை அவர்களின் பணியேற்புச் சடங்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இவ்வழிபாட்டுச் சடங்கின்போது, தலைமைத்துவத்தின் அடையாளமாகப் புதிய திருத்தந்தைக்குப் பால்யம் மற்றும்மீனவர் மோதிரம்எனப்படும் முத்திரை மோதிரம் வழங்கப்பட்டது. திருத்தந்தையின் பணியேற்பு விழாவில் உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். ஏறக்குறைய 150 நாடுகளின் பிரதிநிதிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த அனைத்து மக்களின் பிரதிநிதியாகப் பன்னிரண்டு பேர் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்தினர்.