news
வத்திக்கான் செய்திகள்
இணையதள உலகம் இறையழைத்தலின் புதிய களம்!

இன்றைய நவீன எண்ணிம (டிஜிட்டல்) உலகில், சமூக வலைதளங்கள் வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகள் மட்டுமல்ல; அவை இறையழைத்தலை வளர்க்கும் ஒரு புனிதமான பணித்தளம் என்று அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘சமூக ஊடகங்களும் இறையழைத்தல் மேம்பாடும்என்ற தலைப்பில் பிப்ரவரி 27, 2026 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 548 துறவியர் மற்றும் தொடர்பாளர்கள் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய ஊடகவியலாளர் இரபேல் புஸ்கெமி, “இணைய உலகம் மாயையல்ல; அது உண்மையானது. அங்கு நாம் பதிவிடும் உள்ளடக்கங்களை விட, நமது நேர்மையான நோக்கமே முக்கியம்என்றார். சமூக வலைதளங்களை வெறும்தொலைக்காட்சிபோல ஒருதலைபட்சமாகப் பயன்படுத்தாமல், இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் உரையாடல் தளமாக மாற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், “டிஜிட்டல் கண்டத்தில் திறந்தநிலை மடாலயமாக இருந்து, தேடுதலில் உள்ள இளைஞர்களுக்குத் துணைநிற்பதே எங்களது பணிஎன்று அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் தனிநபர் புகழைத் தவிர்த்து, சமூகமாக இணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் இக்கருத்தரங்கம் வலியுறுத்தியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
வளைகுடா நாடுகளில் ஏவுகணைத் தாக்குதல்கள்: அமைதிக்காகச் செபிக்க வடக்கு அரேபியாவின் திருத்தூதர் அழைப்பு!

ஈரான்,  இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பஹ்ரைன்குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் ஏவுகணைத் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளனஇதனைத் தொடர்ந்து, வடக்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகம், தனது அனைத்துத் திரு அவைச் செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், “தற்போதைய நிச்சயமற்ற சூழலில்அனைவரும் ஒன்றிணைந்து அமைதிக்காகச் செபிக்கவேண்டும்அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப் பின்பற்றுங்கள்என்று அவர் நம்பிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும்முதியவர்கள்நோயாளிகள் மற்றும் நலிவடைந்தவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துமாறு பங்குத்தந்தையர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், “அரேபியாவின் அன்னை நம் அனைவரையும் பாதுகாப்பாராகஎன்று கூறிஉலகளாவிய சமூகமும் அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“திரு அவை அன்பின் கோட்டையாகத் திகழ வேண்டும்” - திருத்தந்தை லியோ

உரோமை நகரின் மையப்பகுதியில் உள்ள காஸ்ட்ரோ பிரிட்டோரியோ புனித இருதய பேராலயத்திற்குத் திருத்தந்தை லியோ கடந்த பிப்ரவரி 22 அன்று சென்றிருந்தார். இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் அப்பகுதியில் நிலவும் வறுமை மற்றும் வாழ்வியல் சவால்களைக் கண்டபோது, திரு அவை அன்பின் புகலிடமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தனது மறையுரையில், “ஒரே இடத்தில் நவீன வசதிகளுடன் பயணிப்பவர்களையும், வீடற்ற ஏழைகளையும் நாம் காண்கிறோம். காலத்தின் முரண்பாடுகள் நிறைந்த இப்பகுதியில், திரு அவை வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல ; அது பசித்தவர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கும் கருணையின் கோட்டையாக இருக்கவேண்டும்என்றும் தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் செய்தித் தொடர்பகத்தின் புதிய துணை இயக்குநராக அருள்சகோதரி நினா கிராபிக்!

வத்திக்கான் செய்தித் தொடர்பகத்தின் (Holy See Press Office) புதிய துணை இயக்குநராக அருள்சகோதரி நினா பெனடிக்டா கிராபிக் (Sr. Nina Benedikta Krapic) என்பவரைத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். 2019 முதல் இப்பணியில் இருந்த கிறிஸ்டியன் முர்ரேவுக்குப் பதிலாக இவர் 2026, மார்ச் 1 அன்று பொறுப்பேற்கிறார். குரோஷியா நாட்டைச் சேர்ந்த 36 வயதான அருள்சகோதரி நினா, சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். மக்கள் தொடர்பியலில் நிபுணத்துவம் வாய்ந்தவர். வத்திக்கான் தகவல் தொடர்புத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான சட்ட ஆலோசகராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

news
வத்திக்கான் செய்திகள்
ஆயர்களுக்கான வத்திக்கான் உயர்மட்டக் குழுவில் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா நியமனம்!

திரு அவையின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றானஆயர் நியமனத்திற்கான துறையின் (Dicastery for Bishops) உறுப்பினராக அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லாவை (Sr. Simona Brambilla) திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது. 61 வயதான இத்தாலிய நாட்டைச் சேர்ந்த அருள்சகோதரி சிமோனா, ஏற்கெனவே துறவற வாழ்வுக்கான வத்திக்கான் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தற்போது இவர், ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் மற்றும் நியமிக்கும் பணிகளைக் கவனிக்கும் உயர்மட்டக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆயர்களைத் தேர்வு செய்யும் வத்திக்கான் குழுவில் இடம்பெறும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகிறார். ஏற்கெனவே அருள்சகோதரி இரஃபேலா பெட்ரினி மற்றும் மரியா லியா செர்வினோ ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

news
வத்திக்கான் செய்திகள்
“போர் என்பது மனித வாழ்வின் மீதான மிகக் கடுமையான தாக்குதல்!” - திருத்தந்தை

உலகில் பெருகிவரும் போர்களும் மோதல்களும் மனித வாழ்விற்கும்,  பொதுச் சுகாதாரத்திற்கும் விடப்படும் மிகப்பெரிய சவால்கள் என்று திருத்தந்தை லியோ எச்சரித்துள்ளார்வத்திக்கானில் நடைபெற்றவாழ்விற்கான திருத்தந்தை அகாதமி (Pontifical Academy for Life) கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை, “போர்க்காலங்களில் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்களின் கட்டமைப்புகள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கதுஎன்று தெரிவித்துள்ளார். அவ்வாறே, “ஆயுத உற்பத்திக்குக் கோடிக்கணக்கான நிதியைச் செலவிடும் இவ்வுலகில்மக்களின் உயிர் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்க நேரத்தையும் நிபுணத்துவத்தையும் ஒதுக்குவது முன் எப்போதையும் விட இன்று அவசியமாகிறதுஎன்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மக்களுக்கும் சமமான சுகாதாரம் கிடைக்காத சூழலைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒருவரின் வருமானம் மற்றும் வாழும் இடத்தைப் பொறுத்து சுகாதாரம் தீர்மானிக்கப்படுவது ஒருநயவஞ்சகமான நிலைஎன்று தெரிவித்துள்ளார்.