news
வத்திக்கான் செய்திகள்
“மரியா நம்மைத் தம் மகன் இயேசுவிடம் அழைத்துச் செல்வார்”- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் மரியன்னை ஆன்மிக விழா சிறப்புத் திருப்பலி அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது மறையுரையில் திருத்தந்தை லியோ, தன் மகன் இயேசு கிறிஸ்துவை நோக்கி, எவ்வாறு நாம் பின்தொடர்வது என்பதற்கான ஓர் அழகான எடுத்துக்காட்டு அன்னை மரியா என்று குறிப்பிட்டதுடன், நமது நம்பிக்கையை வளர்க்கும் மரியன்னை ஆன்மிகம் இயேசுவை மையமாகக் கொண்டுள்ளதுஎன்று நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டினார். மரியன்னை ஆன்மிகம் நற்செயல் புரிவதற்கும், அதை முழுமையாக வாழ்வதற்கும் உதவுகிறது என்று குறிப்பிட்ட அவர், “நாசரேத்து மரியாவிடம் நாம் கொண்டுள்ள பாசம் இயேசுவின் சீடர்களாக, அவருடன் சேர நம்மை வழிநடத்துகிறதுஎன்றும் தெரிவித்தார். மேலும், “கடவுளின் திட்டத்தை மரியாஆம்என்று ஏற்றுக்கொண்டது ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்படும் செயல் அல்ல; மாறாக, ஓர் அன்றாட உறுதிமொழிஎன்றும், “அது ஒருமுறை கொடுக்கப்பட்டது அல்ல;  மாறாக, அது ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டதுஎன்றும் கூறினார்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை லியோவின் முதல் திருத்தூதுப் பயணம்!

திருத்தந்தை லியோ தனது முதல் திருத்தூதுப் பயணமாக துருக்கி மற்றும் லெபனான் செல்ல இருப்பதாகத் திருப்பீட ஊடக இயக்குநர் மேட்டியோ புருனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் நவம்பர் மாத இறுதியில் பயணம் மேற்கொள்ள உள்ள திருத்தந்தை, டிசம்பர் முதல் வாரம் வரை பயணத்திற்கான திட்டமிடல்களை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, திருத்தந்தை லியோ துருக்கியில் உள்ள இஸ்னிக் நகருக்குச் சென்று, நைசியா முதற்சங்கத்தின் ஆயிரத்து 700-வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தொடர்ந்து லெபனான் செல்ல இருக்கும் திருத்தந்தை, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் சந்திக்கவுள்ளதாகவும், இது அவர்களுக்குநம்பிக்கையின் பெரிய அடையாளமாக இருக்கும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“இளையோர் இந்த உலகில் அமைதியைக் கட்டி எழுப்பவேண்டும்”- திருத்தந்தை லியோ வலியுறுத்தல்!

2027-ஆம் ஆண்டு சியோலில் நடைபெறவுள்ள உலகளாவிய இளையோர் மாநாட்டிற்கான தயாரிப்பாக, உலக இளைஞர் ஆண்டு தினம், நவம்பர் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கான கருப்பொருளை வெளியிட்ட திருத்தந்தை, “தூய ஆவியாரின் வல்லமையால் நம்பிக்கையின் திருப்பயணிகளாகவும், கிறிஸ்துவின் துணிவுள்ள சாட்சிகளாகவும் நாம் மாற நம்மையே தயார்படுத்திக் கொள்வோம்எனக் கேட்டுக்கொண்டார்.  அதற்கு, “கடவுளிடமிருந்து கொடையாக நாம் பெற்ற இயேசுவுடனான நமது நட்பு மற்றும் சமூகத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்புஎனும் இருவகையான சாட்சியங்களை விளக்கியுள்ள திருத்தந்தை, நாம் ஓர் அரசியல் கட்சியின் பணியாளர்களாகவோ அல்லது செயல்பாட்டாளர்களாகவோ இருக்க அவர் விரும்பவில்லை; மாறாக, அவருடைய நண்பர்களாக இருக்க அழைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘நான் உன்னை அன்பு செய்தேன்’ (Dilexi te) - திருத்தந்தை லியோவின் முதல் திருத்தூது ஊக்கவுரை

புனித பிரான்சிஸ் அசிசியின் திருநாளன்று திருத்தந்தை லியோ, அதாவது, ‘நான் உன்னை அன்பு செய்தேன் (Dilexi te) எனப் பொருள்படும் தனது முதல் திருத்தூது ஊக்கவுரையில் கையெழுத்திட்டுள்ளார். அக்டோபர் 4-ஆம் தேதி உரோமை நேரப்படி காலை 8.30 மணிக்குத் திருத்தந்தை மாளிகையின்  தனி நூலகத்தில், திருப்பீடச் செயலகத்தின் பொது அலுவல் துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் எட்ஜர் பெணாபாரா முன்னிலையில், இத்திருத்தூது ஊக்கவுரையில் திருத்தந்தை கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆவணம்  அக்டோபர் 9-ஆம் தேதி, திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
திரு அவையின் மறைவல்லுநராகும் ஜான் ஹென்றி நியூமன்!

திருத்தந்தை லியோ, ஆங்கிலேய இறையியலாளர் ஜான் ஹென்றி நியூமனுக்குதிரு அவையின் மறைவல்லுநர் (டாக்டர் ஆஃப் தி சர்ச்) என்ற பட்டத்தை வழங்கி சிறப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நியூமன் கிறித்தவ இறையியல் மற்றும் போதனையில் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர் எனவும் திருத்தந்தை லியோ அவரைப் பாராட்டியுள்ளார். சிறந்த எழுத்தாளரான இவருக்குக் கடந்த 2010-ஆம் ஆண்டு திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் அருளாளர் பட்டம் வழங்கினார்அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி இலண்டனில் பிறந்த நியூமன், தனது 24-வது வயதில் ஆங்கிலிக்கன் அருள்பணியாளரானார். 1845-ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திரு அவையில் சேர்ந்தார். புகழ்பெற்ற இறையியலாளர் மற்றும் தத்துவ ஞானியான இவர், திருத்தந்தை லியோ அவர்களால் கர்தினாலாக நியமிக்கப்பட்டார்.

இத்தகைய சிறப்பு மிக்க நியூமனின் வாழ்க்கைஇதயம் இதயத்துடன் பேசும்எனும் வசனத்தில் வெளிப்பட்டது என, புனித பான்ஸ் டி சேல்ஸ் கூறியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“படைப்புத் திறன்களைப் பலவீனப்படுத்துகிறது AI”- வத்திக்கான் ஊடக ஆணையம் கவலை!

செயற்கை நுண்ணறிவுடன் (AI) தொடர்புடைய அபாயங்கள் குறித்து வத்திக்கான் ஊடக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “AI மீதான அதிகப்படியான நம்பிக்கை, மனிதர்களின் விமர்சனச் சிந்தனை மற்றும் படைப்புத்திறன்களைப் பலவீனப்படுத்துகிறது எனவும், இத்தகைய அமைப்புகளின் ஒருமித்தக் கட்டுப்பாடு, அதிகாரத்தை மையப்படுத்துதல் மற்றும் சமத்துவமின்மை போன்ற அதீத விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், AI-யினால் பெரிதும் ஈர்க்கக்கூடிய, தவறாக வழிநடத்தித் தீங்கு விளைவிக்கும் தகவல்களை உருவாக்க முடியும் என்பதால், மனிதர்களுடைய குரல்கள் மற்றும் முகங்களை உருவாக்கி, தவறான தகவல்களைப் பரவச்செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.