news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.03.2026)

இலாபத்தைவிட சமத்துவம் மற்றும் பொதுநலனை முன்னிறுத்தி, அனைவருக்கும் உலகளாவிய நலவாழ்வு உரிமை கிடைப்பதை அரசுகள் உறுதி செய்யவேண்டும்.”

பிப். 16, பாப்பிறை வாழ்வுக் கழக உறுப்பினர்கள் சந்திப்பு

திரு அவை என்பது இறைவனோடும் மக்களோடும் அனைவரையும் ஒன்றிணைக்கும் மீட்பின் உலகளாவிய அருளடையாளமாகவும், ஒப்புரவின் கருவியாகவும் திகழ்கிறது.”

பிப். 18, புதன் மறைக்கல்வி உரை

பணிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புடன் கூடிய அதிகாரமே, கிறிஸ்துவை நோக்கிச் சமூகத்தை வழிநடத்தும் உண்மையான ஆன்மிகப் பணியாகும்.”

பிப். 19, கிறிஸ்துவின் சேனை - துறவறச் சபையினர் சந்திப்பு

உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டி, இயேசுவின் அன்பு மற்றும் திருநற்கருணை வழியாக மாணவர்களை ஆன்மிக வளர்ச்சியில் வழிநடத்துவதே ஓர் ஆசிரியரின் கடமையாகும்.”

பிப். 20, திருத்தூது மடலின் சிறப்புச் செய்தி

அன்னை மரியாவின் வழியில் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து, அமைதியின் சாட்சிகளாகத் திகழ அன்புடன் அழைக்கிறேன்.”

பிப். 21, அமலமரி அர்ப்பணத் துறவு, திருத்தூதர்களின் அன்னை சபையினர் சந்திப்பில்...

தவக்காலத்தின் வழியாகப் பாவங்களை நீக்கி, இறைவேண்டல் மற்றும் இரக்கச் செயல்களால் கடவுளின் அன்பிலும் உண்மையான மகிழ்ச்சியிலும் நிலைத்திருப்போம்.”

பிப். 22, மூவேளைச் செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.03.2026)

கிறிஸ்துவில் ஒன்றுபட்டு, புனித வாழ்வும் சகோதரத்துவ உறவும் வழியாக நற்செய்திப் பணியாற்றுவோம்.”

பிப். 09 - அருள்பணியாளர்களின் ஒன்றிப்புச் செய்தி

அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் திரு அவையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே திருத்தூதுப் பயணத்தின் நோக்கமாகும்.”

பிப். 10 - மொனாக்கோவிற்கான திருத்தந்தையின் முதல் பயணம்

இறைவார்த்தையைத் திரு அவையின் நம்பிக்கையின் ஆதாரமாகவும், கிறிஸ்துவின் உயிருள்ள உறவாகவும் போற்றிப் புனிதமாக வாழ்வோம்.”

பிப். 11 - புதன்கிழமை பொது மறைக்கல்வி உரை

இறைவார்த்தை, நோன்பு மற்றும் சமூக நீதி வழியாக மனமாற்றம் பெற்று, அன்பின் பாதையில் நாகரிகத்தை உருவாக்குவோம்.”

பிப். 13 -  இவ்வாண்டிற்கான தவக்காலச் செய்தி

திருப்பீட நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லாவின் புதிய நியமனம் திரு அவையின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.”

பிப். 14 - அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா புதிய உறுப்பினராக நியமனம்

வெளிப்புறச் சடங்குகளைத் தாண்டி, அன்பு நிறைந்த நேர்மையான இதயத்துடன் இறைநீதியையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிப்போம்.”

பிப். 15 - மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.03.2026)

இயேசுவின் அருள்பேறுகள், அநீதியுள்ள உலகில் நம்பிக்கையாளர்களுக்கு மாற்றம் தரும் மீட்பின் வழிகாட்டியாகின்றன.”

பிப். 1, மூவேளைச் செபவுரை

அர்ப்பண வாழ்வினர் தாராளம், தியாகம், பிறரன்பு வழியாகக் கடவுளின் மீட்கும் உடனிருப்பிற்குச் சான்றுபகர அழைக்கப்படுகிறார்கள்.”

பிப். 2, துறவியரின் 30-வது உலக நாள் திருப்பலி மறையுரை

மனித மொழியில் வெளிப்படும் கடவுளின் வார்த்தை, ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது வாழ்வை மாற்ற அழைக்கிறது.”

பிப். 4, புதன் மறைக்கல்வி உரை

துன்புறும் குழந்தைகளுக்கு இரக்கம், மருத்துவப் பராமரிப்பு, நம்பிக்கை வழங்கத் திரு அவைச் சமூகத்தை அழைக்கிறது.”

பிப். 5, பிப்ரவரி மாத இறைவேண்டல்

கிறிஸ்துவின் மகிழ்ச்சியைச் சமூகத்தில் பகிரும் நம்பிக்கைப் பயணமே, உருவாக்கப் பயிற்சியின் முழுமையான அர்ப்பணிப்பாகும்.”

பிப். 6, திருப்பீடத்துறையின் பங்கேற்பாளர்கள் சந்திப்பு

பணிவு, இரக்கம், நீதிச்செயல்கள் மூலம் கிறிஸ்துவில் மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி உலகிற்கு வெளிப்படுகிறது.”

பிப். 8, மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.02.2026)

உண்மை, இரக்கம், அன்பு சமநிலையுடன் ஆன்ம மீட்பை நோக்கி திரு அவை நீதியுடன் செயல்படவேண்டும்

சன. 26, வத்திக்கான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திப்பு

வன்முறைக்கு மாற்றாக உரையாடலின் மூலம் அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்.”

சன. 27, இத்தாலி தொலைக்காட்சிக்கு அளித்த அறிக்கை

திருவிவிலியமும் புனித பாரம்பரியமும் இணைந்து, தூய ஆவியின் வழிநடத்துதலில் திரு அவை நம்பிக்கையைத் தலைமுறைகளுக்குக் கடத்துகின்றன.”                        

சன. 28,  புதன் மறைக்கல்வி உரை

தொழில்நுட்ப யுகத்தில் மனித மாண்பையும், உண்மையான உறவுகளையும் நெறிமுறைசார் தகவல் தொடர்புகள் மூலம் பாதுகாப்பது அவசியமாகும்.”

சன. 24, 60-வது உலகத் தகவல் தொடர்பு நாளுக்கான செய்தி

ஆன்மிக வழிகாட்டுதல், நம்பிக்கை பரிமாற்றம் மற்றும் நீதிப் பணி மூலம் கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிப்போம்.”

சன. 29, விசுவாசக் கோட்பாட்டிற்கான துறை உறுப்பினர்கள் சந்திப்பு

இளைஞர்களை இறைவேண்டல் வலையமைப்பில் ஈர்த்து, நற்செய்தி அறிவிப்பில் பங்காளர்களாக்குவோம்.”

சன. 30, உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்புக் குழு சந்திப்பு

நற்செய்தியை மக்கள் இதயத்தில் நிலைநிறுத்தி, ஒப்புரவு மூலம் சமூக அமைதியை உருவாக்க வேண்டும்.”

சன. 31, மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தலத்திரு அவைக்குப் பாராட்டு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.02.2026)

இறையன்பினால் துன்புறுவோருக்கு ஆற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையே கிறித்தவ வாழ்வின் அடிப்படை மாற்றமாகும்.”

சன. 19, பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்படும் 34-வது உலக நோயுற்றோர் நாளிற்கான செய்தி

இயேசுவின் மனிதநேய உறவின் வழியாக இறைவனை அறிவதே மீட்புக்கான உண்மையான இலக்காகும்.”

சன. 21, புதன் மறைக்கல்வி உரை

மனித உரிமைகளின் அடிப்படையான உயிர், புனிதத்தைப் பாதுகாப்பதே சமூக முன்னேற்றத்தின் உண்மையான அடையாளம்.”

சன. 22, ‘2026 வாழ்வுக்கான அணிவகுப்புஎன்ற தலைப்பில் செய்தி

தூதரக உறவை வலுப்படுத்தி, சமூகநலன் மற்றும் மனித மாண்புகளைப் பாதுகாப்போம்.”

சன. 23, இலக்ஸம்பர்க் நாட்டின் ஐந்தாம் இளவரசர் சந்திப்பு

தொழில்நுட்ப காலத்தில் மனித மாண்பையும், உண்மையான உறவுகளையும் நெறிமுறைசார் தகவல் தொடர்புகள் மூலம் பாதுகாப்பது அவசியமாகும்.”

சன. 24, 60-வது உலகத் தகவல் தொடர்பு நாளுக்கான செய்தி

சவால்களையும் கடந்து நற்செய்தியைப் பகிர்ந்து, அமைதியையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்போம்.”

சன. 25, மூவேளை இறைவேண்டல் உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.02.2026)

மறைக்கல்வி ஆசிரியர்கள், திரு அவையின் சிறிய பொறுப்புகளில் பங்கேற்பதன் வழியாக அவர்கள் திரு அவையின் முக்கிய அங்கமாக உணர்வதை முக்கியமாகக் கவனிக்கவேண்டும்.”

சன. 13, மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான அறிவுரை

இறைவெளிப்பாடு, கடவுளின் நட்பு மற்றும் வார்த்தைகளின் உண்மையான பரிமாற்றத்தால் நம்பிக்கையாளர்கள் மீட்பிலும் உறவிலும் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.”

சன. 14, புதன் மறைக்கல்வி உரை

குகெலின் நம்பிக்கை, பணிவு மற்றும் பக்தி அவரின் வாழ்க்கையை முன்மாதிரியான கிறித்தவச் சாட்சியாகக் காட்டுகிறது.”

சன 15, திருத்தந்தையின் உதவியாளர் குகெலின் இறுதிச்சடங்கு

நாளிதழின் சுதந்திரமான, நேர்மையான தகவல்தொடர்பும் உரையாடலும் அமைதியையும் மனித ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும்.”

சன 16, La Repubblica இத்தாலிய இதழ் ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துச் செய்தி

கல்விக் கழக மாணவர்கள், ஆன்மிகப் பயிற்சியோடும் இறைவேண்டலோடும் சிறப்பான அருள்பணியாளர்களாக உருவாகவேண்டும்.”

சன. 17, பாப்பிறைக் கல்விக் கழகத்திற்கு வாழ்த்துச் செய்தி

திருமுழுக்கு யோவானின் பணிவு மற்றும் நேர்மையைப் பின்பற்றி இறைவேண்டல் மற்றும் ஆழமான ஆன்மிக வாழ்வை வாழ்வோம்.”

சன. 18, மூவேளை இறைவேண்டல் உரை