news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (12.07.2026)

திரு அவையில் ஒற்றுமை என்பது தனிப்பட்ட கருத்துகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் உருவாகாது; மாறாக, உண்மையின் வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் செவிமடுத்து, சந்திப்பிற்கான வழிகளைத் தேடுவதன் மூலம் கட்டியெழுப்பப்படுகிறது.”

ஜூன் 29, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி மறையுரை

பிறருக்காக நேரத்தை ஒதுக்குதல், ஆறுதல் அளித்தல், தன்னலமின்றிப் பகிர்ந்துகொள்தல் போன்ற சிறிய தியாகங்களே இறையன்பின் வெளிப்பாடுகள்.”

 ஜூன் 28 , நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

உண்மையான திரு அவை புதுப்பித்தல் என்பது கட்டமைப்பு சீர்திருத்தங்களை மட்டும் சார்ந்திராமல், நற்செய்திக்கு உண்மையுள்ள சான்றாக இருப்பதில் தொடங்குகிறது.”

 ஜூன் 27 சிறப்புநிலை  கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தில் திருப்பலி செய்தி

தலைமை என்பது கட்டளையிடும் பணியல்ல; முதலில் கேட்டு அறிந்து, பின்னர் வழிநடத்தும் பணியே உண்மையான தலைமை.”

ஜூன் 26, கர்தினால்களின் சிறப்புப் பேரவைக் (Consistory) கூட்டத் திருப்பலி செய்தி

கத்தோலிக்க சமூகப் போதனைகளின் அடிப்படையில் டிஜிட்டல் யுகத்திற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்க கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும்.”

ஜூன் 25, வட அமெரிக்கா இயேசு சபை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தலைவர்களுடன் சந்திப்பு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.07.2026)

ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த மாண்பை மதித்துச் செயல்படுவதன் மூலமே நீதி மற்றும் அமைதி நிறைந்த உலகை உருவாக்க முடியும்.”

ஜூன் 22, உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள், பணியாளர்களுடன் சந்திப்பு

திருத்தூதுப் பணியின் வலிமை மனித முயற்சிகளிலோ கருவிகளிலோ அல்ல; மாறாக, தூய ஆவியின் செயல்பாட்டிலும் இறைவனுடனான ஆழமான உறவிலும் உள்ளது.”

ஜூன் 21, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

உயிருள்ள கற்களாக அழைக்கப்பட்டுள்ள நாம், மக்களின் வாழ்வோடும் அவர்களின் மகிழ்ச்சி, சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளோடும் இணைந்து பயணிக்கும் திரு அவையாக இருக்கவேண்டும்.”

ஜூன் 20, பாவியா, சாந்த்ஆன்ஜலோ லோடிஜியானோ திருப்பலிச் செய்தி

உறுதியான நற்செயல்கள் மூலமே அன்பின் நாகரிகம் கட்டியெழுப்பப்படும். மேலும், படைப்பின் அழகால் தூண்டப்பட்டு உலகளாவிய பொறுப்புணர்வுடன் செயல்படும் துணிச்சலான தலைவர்களை உருவாக்குவது காலத்தின் தேவை.

ஜூன் 19, ‘போர்கோ உரையாடல்கள்நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் சந்திப்புச் செய்தி

அறிவும் அன்பும் இணைந்த சேவைக்குத் தூய ஆவியால் நிறைந்த இதயம் தேவை.”

ஜூன் 18, கிழக்குத் திரு அவைகளுக்கான உதவி அமைப்புகளின் ஒன்றியமான ROACO-வின் முழுக்கூட்டப் பங்கேற்பாளர்களுடன் சந்திப்பு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (28.06.2026)

திரு அவையின் அனைத்து இடங்களும் உடல்ரீதியாகவும் இணைய வழியிலும் அச்சம், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை இன்றி இயேசு கிறிஸ்துவை அனுபவிக்கும் பாதுகாப்பான சூழல்களாக இருக்கவேண்டும்.”

ஜூன் 17, அமெரிக்கச் சிறார்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய உறுப்பினர்களுடன் சந்திப்பு

அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் தலைவர்கள் இலாபத்தைவிட, பொதுநலனுக்கு முன்னுரிமை அளித்து, அன்பின் நாகரிகம் உருவாகப் பாடுபடவேண்டும்.”

ஜூன் 16, ஆஸ்திரிய உலக உச்சி மாநாட்டுக் காணொளிச் செய்தி

முதுமை என்பது ஆன்மிக வளர்ச்சிக்கும், இறைவனின் அன்பைப் புதிதாகக் கண்டறிவதற்கும், நம்பிக்கையை ஆழப்படுத்துவதற்குமான அருள் நிறைந்த காலம்.”

ஜூன் 15, உலக தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தி

இயேசுவின் இரக்கம் என்பது வெறும் அனுதாப உணர்வு மட்டுமல்ல; அது மனிதர்களை மீட்டு புதிய வாழ்வை அளிக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.” 

ஜூன் 14, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

அருள்பணித்துவப் புனிதத்துவம் என்பது தனிமை அல்லது அதிகப்படியான செயல்பாடுகளில் அல்ல; மாறாக, அருகாமை, கருணை, செவிமடுத்தல் மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் வெளிப்படுகிறது

ஜூன் 12, அருள்பணியாளர் புனிதப்படுத்துதலுக்கான உலக செப நாள் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (21.06.2026)

வெறும் எண்களும் தரவுகளும் மட்டுமே ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட முடியாது; மக்களின் இதயங்கள் ஒன்றிணைந்து பாடுபடும்போதுதான் உண்மையான ஆன்மிகக் குடும்பம் உருவாகும்.”

ஜூன் 09, ‘IFEMA Madridகண்காட்சி மையத்தில்  கத்தோலிக்கத் தன்னார்வலர்கள் மற்றும் ஆன்மிகப் பணியாளர்களுடன் சந்திப்பு

வலுவான கிறித்தவச் சமூகங்கள், மகிழ்ச்சியான அருள்பணியாளர்கள், நம்பிக்கையுள்ள குடும்பங்கள் மற்றும் உண்மையான சான்று வாழ்வு ஆகியவை புதிய அழைத்தல்கள் வளர சிறந்த மண்ணாகத் திகழ்கின்றன.”

ஜூன் 08, ஸ்பெயின் நாட்டு ஆயர்களுடன் சந்திப்பு

கருணையே கடவுளின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களை அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருவிகளாக மாற்றுகிறது.”

ஜூன் 07, 6-வது உலகக் கருணை திருத்தூது மாநாட்டின் தொடக்கச் செய்தி

உண்மையான பாதுகாப்பு என்பது சுவர்களாலும் ஆயுதங்களாலும் கட்டமைக்கப்படுவதில்லை; மாறாக, ஒற்றுமையிலும் ஒருவரையொருவர் நம்புவதிலும் நாம் இணைந்து வளர்வதன் மூலமே உருவாக்கப்படுகிறது.”

ஜூன் 06, மாட்ரிட்டில் உள்ள அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு

கல்வி என்பது வெறும் உலகியல் அறிவை மட்டும் தராமல், நம்பிக்கையின் அடிப்படையில் மாணவர்களை ஆன்மிகப் பாதையிலும், நல்வாழ்விலும் வழிநடத்தவேண்டும்.”

ஜூன் 03,  உரோம் 2026-ஆம் ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (14.06.2026)

வழிபாட்டு முறையின் சடங்குகளும் அடையாளங்களும் வெறும் வெளிப்புறச் செயல்கள் அல்ல; அவை இறைவனின் அருளை அனுபவிக்கவும், கிறிஸ்துவோடு ஆழமான உறவில் வளரவும் நம்மை வழிநடத்தும் புனிதப் பாதைகளாகும்.” 

ஜூன் 3. பொதுமறைக்கல்வி உரை

சுயநலமற்ற சேவையின் வழியாக, இளைஞர்கள் ஒருமைப்பாட்டு பொறுப்புணர்வையும், பிறர்மீது அக்கறை கொள்வதையும் கற்றுக்கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் அன்பு, வரவேற்பு மற்றும் அமைதிக்கான சாட்சிகளாக மாறுகிறார்கள்.”

ஜூன் 1, ஐரோப்பிய கத்தோலிக்க வழிகாட்டிகள், சாரணர்கள் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழாச் செய்தி

மூவோர் இறைவனின் மறைபொருள், மனிதகுலம் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழவும், நல்லுறவை வளர்க்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவுமே படைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.” 

மே 31, மூவேளை இறைவேண்டல் உரை

கல்வி என்பது தனிமனிதவாதத்தை வளர்க்காமல், இணக்கமான உறவையும் உலகளாவிய ஒருமைப்பாட்டையும் உருவாக்கவேண்டும்.” 

மே 30, ’ஐபெரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் சந்திப்பு

செபமாலை வழியாக இயேசுவைத் தியானிக்கும் நாம், அமைதி என்பது வெறும் கற்பனையல்ல; அது நீதி, அன்பு மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமை என்பதை உணரவேண்டும்.”

மே 29, வத்திக்கானில் செபமாலை வழிபாட்டுச் செய்தி  

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (07.06.2026)

“இறைவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான அமைதி மன்னிப்பிலிருந்து பிறக்கிறது. பாவங்களை மன்னிக்கும் தெய்வீகப் பணியில் நம்மை ஈடுபடுத்தி, உலக வரலாற்றை அன்பினால் உருமாற்ற தூய ஆவியார் உதவுகிறார்.”

மே 24, தூய ஆவியார் பெருவிழா திருப்பலி மறையுரை

சூழலியல் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பத் தீர்வு மட்டுமல்ல,  மனமாற்றம், பொறுப்புணர்வு மற்றும் கல்வி ஆகியவற்றின் மூலமே வருங்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான பூமியை ஒப்படைக்க முடியும்.”

மே 23, காம்பானியா அசெர்ரா நகர் நகராட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு

தொழில்நுட்பமானது ஞானத்தாலும் தார்மீக விழுமியங்களாலும் வழிநடத்தப்படும்போது, கடவுளின் படைப்புத் திட்டத்தோடு இணக்கமாகவும், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் வழங்க முடியும்.”

 மே 22, 60-வது உலகத் தகவல் தொடர்பு தினச் செய்தி

பிரிவினைகளை ஒற்றுமையாக்கும் தூய ஆவியாரைப் போல, உலக நாடுகளுடனான உறவிலும் திறந்த மனப்பான்மை, இருதரப்பு மரியாதை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும்.”

மே 21, திருப்பீடத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களுடன் சந்திப்புச் செய்தி

திருவழிபாடு என்பது வெறும் சடங்கல்ல; அது கிறிஸ்துவின் மீட்புப் பணியில் நாம் பங்கேற்று, அவரோடு ஒன்றிணையும் புனித நிகழ்வு.”          

மே 20 , புதன் பொது மறைக்கல்வி உரை