news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (04.10.2026)

“இறைவனின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர், தனது அறிவு மற்றும் சுதந்திரத்தின் மூலம் உலகின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கிறார். மனிதரின் சாதனைகள் இறைவனுக்கு எதிரானவை அல்ல; மாறாக, அவை இறைமகத்துவத்தின் அடையாளங்கள்.”

செப்டம்பர் 23 , புதன் பொது மறைக்கல்வி உரை

“டிஜிட்டல் காலத்தில் நற்செய்திக்கு ஏற்ப வாழ்வதற்கான வழிகாட்டியாக இறைவனின் இரக்கத் திட்டம் திகழ்கிறது.”

உரோமையில் நடைபெற்ற முதல் AI4Peace அனைத்துலக மாநாட்டிற்குத் திருத்தந்தையின் உரை

“கலாச்சாரம் குறிப்பாக, விளையாட்டு மற்றும் கலை, மக்களை ஒன்றிணைத்து உரையாடலை வளர்க்கும் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், மனிதநேய விழுமியங்களை அனைவருக்கும் எடுத்துரைக்கும் உலகளாவிய மொழியாகவும் திகழ்கின்றன.”

செப்டம்பர் 21, கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறையின் பணியாளர்களுக்குத் திருத்தந்தையின் உரை

“அழைத்தல்கள் அமைப்புத் திட்டங்களிலிருந்தோ, கவனமாகத் திட்டமிடப்படும் பிரச்சாரங்களிலிருந்தோ உருவாவதில்லை; மாறாக, செபம், நற்செய்தியோடு நெருக்கமான உறவு, அமைதி, ஒருவரையொருவர் அவர்களின் குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, ஒன்றிப்பை வளர்க்கும் சமூக உணர்வு ஆகியவற்றிலிருந்தே அவை உருவாகின்றன.”

செப்டம்பர் 21, இத்தாலிய ஏழை கிளாராம்மாளின் கப்புச்சின் சபை அருள்சகோதரிகளின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது திருத்தந்தையின் உரை

“விளையாட்டு, உயர்ந்த மற்றும் உண்மையான மதிப்புகளைக் கற்றுத்தரும் சிறந்த கல்விசார் கருவி மற்றும் விளையாட்டில் பங்கேற்பது தீவிரமான அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் கோருகிறது.”

செப்டம்பர் 19,  இத்தாலிய விளையாட்டு வீரர்களைச் சந்தித்தபோது திருத்தந்தையின் செய்தி