news-details
தமிழக செய்திகள்
தமிழ்நாடு ஆயர் பேரவையில் உதயமான கத்தோலிக்க மரபு மையம்!

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையின் வரலாற்றுச் சுவடுகள், பண்பாட்டுக் கூறுகள் மற்றும் ஆன்மிக மரபுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ‘கத்தோலிக்க மரபு மையம்’ (Catholic Heritage Centre) ஒன்று புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளது. நமது தொன்மையான கத்தோலிக்க வரலாற்றையும் தொன்மங்களையும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியே மீட்டுருவாக்கம் செய்து, அவற்றை இளம் தலைமுறையின் கரங்களில் எளிதாகக் கொண்டு சேர்க்கும் இம்மாபெரும் முயற்சி காலத்தின் மிக முக்கியத் தேவையாகும்.

இப்புதிய மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ‘நம் வாழ்வு’ வார இதழின் தலைவர் மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும், இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள தஞ்சாவூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த  அருள்பணி. தமிழ்தாசன் அவர்களுக்கும் ‘நம் வாழ்வு’ குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இம்மையத்தின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!

முதன்மை ஆசிரியர்