news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள் சிந்தனைப் பகிர்வுகள் (18.10.2026)

“கிறிஸ்துவைப் பின்பற்றுவது உண்மையான சுதந்திரத்தையும், வாழ்க்கைக்கான விரிந்த பார்வையையும் கொடுக்கின்றது.”

அக். 5, இளையோர் தினத் தயாரிப்பாளர்களுக்குத் திருத்தந்தை உரை

“அதிகாரம் என்பது வெறுமனே ஆணையிடுவதோ அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துவதோ அல்ல; மாறாக, பிறரைப் பாதுகாப்பது, அவர்களின் குரலுக்குச் செவிசாய்ப்பது. குறிப்பாக, பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் துணையாக இருப்பதே உண்மையான அதிகாரத்தின் வெளிப்பாடு.” 

அக். 3, ஜெண்டார்மெரி படையினருக்கான திருப்பலி மறையுரை, வத்திக்கான்

“பராமரிப்புக் கலாச்சாரம் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களுக்கு மட்டுமல்லாமல், மனித உழைப்பு மற்றும் மனிதர்களின் மீதும் அக்கறை செலுத்துவதாக இருக்கவேண்டும்.”

அக். 1, ஹெரா குழுமத்தின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை உரை, வத்திக்கான்

“கடவுளின் மகனாக வந்த இயேசு சிலுவையில் கொல்லப்பட்டாலும், அந்தச் சிலுவை மரணத்தையே கடவுள் மனிதகுலத்தின் மீட்பிற்கான வழியாக மாற்றினார்.”

அக். 4,  மூவேளைச் செபவுரை, புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான்

“உண்மையான கலை என்பது வெறும்  துணை அம்சம் அல்ல; மாறாக, மனித இதயத்தின் ஆழமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகவும், உண்மை, அழகு, நீதி, அமைதி மற்றும் வாழ்வின் பொருள் குறித்த மனிதர்களின் தேடலை வெளிப்படுத்துவதாகவும்  கேட்பதற்கான ஒரு முக்கியமான தளமாகவும் உள்ளது.” 

அக். 2, கலாச்சாரம் மற்றும் கல்விக்கான கலைஞர்களுக்கு உரை, வத்திக்கான்