news-details
வத்திக்கான் செய்திகள்
“செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் அவசியம்”- கர்தினால் பரோலின்

வத்திக்கான் வெளியுறவுச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் உரோமையிலுள்ள பொந்திஃபிக்கல் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசியபோது, திருத்தந்தை லியோவின் ‘மகத்தான மானுடம்’ (Magnifica humanitas) என்னும் சுற்றுமடலை மேற்கோள்காட்டினார். “எண்மத் தொழில்நுட்பமும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட வழிமுறைகளும் மனிதகுலத்திற்குப் பயன்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தைப் பெருக்கவும் ஏழை எளியவர்களைப் புறக்கணிக்கவும் பயன்படக் கூடாது. தொழில்நுட்ப ஆதிக்கம் உலகளாவிய நீதியையும் மனித கண்ணியத்தையும் சீர்குலைக்கக்கூடாது. போர்க்களங்களில் தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஆபத்தானது. எனவே, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மனிதநேயத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்கும் வலுவான சட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவது சட்ட வல்லுநர்கள் மற்றும் தூதரகங்களின் முக்கியப் பொறுப்பாகும்” என்று வலியுறுத்தினார்.