news-details
ஆன்மிகம்
செபமாலை: மாறும் உலகில் மாறாத ஆன்மிகத் தேவை

இன்றைய மனிதன் கையில் உலகமே இருக்கிறது; ஆனால், உள்ளத்தில் அமைதி குறைந்து கொண்டிருக்கிறது. தகவல்கள் அதிகம்; ஆனால், தெளிவு குறைவு. தொடர்புகள் அதிகம்; ஆனால், தனிமை அதிகம். வேகம் அதிகம்; ஆனால், நிம்மதி குறைவு. இந்தச் சூழலில் செபமாலை என்பது வெறும் பழைய பக்தி வழக்கம் அல்ல; அது நம்மை மீண்டும் நம் உள்ளத்திற்குள் அழைத்துச் செல்லும் ஓர் அமைதிப் பயணம்.

செபமாலையின் ஒவ்வொரு மணியும், ‘சற்று நில்... சற்று அமைதியாக இரு... உன் வாழ்க்கையை மீண்டும் பார்...’ என்று சொல்லும் ஒரு சிறிய அழைப்பு. ஒவ்வொரு மணியையும் கடக்கும்போது, நமது கவலைகளை அன்னையின் கைகளில் ஒப்படைக்கலாம். நமது கண்ணீரைச் செபமாக்கலாம்; நமது பயத்தை நம்பிக்கையாக மாற்றலாம்; நமது குழப்பத்தைத் தெளிவாக மாற்றலாம்.

அன்னை மரியா இன்றும் நம் வாழ்க்கைப் பாதையில் ஒரு துணையாக இருக்கிறார். செபமாலை அந்தத் துணையை நினைவுபடுத்தும் கையில் இருக்கும் அடையாளமாக இருக்கிறது.

செபமாலை நம்மைப் பிரச்சினைகளிலிருந்து ஓடச் சொல்லவில்லை; பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உள்ளார்ந்த வலிமையைப் பெறச்சொல்கிறது. அது உலகத்தை மாற்றுவதற்கு முன் நம்மை மாற்றத் தொடங்குகிறது; நமது எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது; நமது இதயத்தை மென்மையாக்குகிறது; நமது உறவுகளைச் சீர்படுத்துகிறது; மன்னிக்கக் கற்றுக்கொடுக்கிறது; நம்பிக்கையை மீண்டும் எழுப்புகிறது.

எனவே, இன்றைய தலைமுறைக்கு செபமாலை என்பது: கையில் இருக்கும் ஒரு செபமாலை மட்டுமல்ல, மனத்தில் இருக்கும் ஓர் அமைதி, இதயத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கை, வாழ்க்கையில் இருக்கும் ஒரு துணை, இறைவனை நோக்கிச் செல்லும் ஒரு பாதை.

அன்னை மரியா நம் பயணத்தின் துணை. செபமாலை அந்தப் பயணத்தின் துடிப்பு. செபம் நம் உள்ளத்தின் வலிமை. இன்றைய வேகமான உலகில், ஒரு நாளில் சில நிமிடங்கள் செபமாலையுடன் அமைதியாக அமர்வது. நம்மை உலகத்திலிருந்து பிரிப்பதற்காக அல்ல; உலகத்தை இன்னும் அன்போடும் பொறுமையோடும் மனித நேயத்தோடும் எதிர்கொள்ள நம்மைத் தயாரிப்பதற்காக!

செபமாலை பழையதாகவில்லை; அதைப் புரிந்துகொள்ளும் நமது பார்வைதான் புதிதாகவேண்டும். இன்றைய மனிதனுக்கு செபமாலை ‘நில், செபி, சிந்தி, நம்பு, வாழ்! (Pause, Pray, Reflect, Trust, Live).

AI உலகில் செபமாலை Technology-க்கு நடுவில் Humanity. AI நமக்கு வேகமாகச் சிந்திக்கக் கற்றுக்கொடுக்கிறது. செபமாலை நம்மை ஆழமாகச் சிந்திக்கக் கற்றுக்கொடுக்கிறது. AI நமக்குத் தகவலைத் தருகிறது; செபமாலை நமக்கு ஞானத்தைத் தேட அழைக்கிறது. AI உலகை இணைக்கிறது. செபமாலை இதயங்களை இணைக்கிறது. AI பதில் சொல்கிறது; செபமாலை ‘நான் ஏன் வாழ்கிறேன்?’ என்று கேட்கச் செய்கிறது.

AI மனிதனின் அறிவைப் பெருக்கலாம்; ஆனால், அன்பு, இரக்கம், மன்னிப்பு, மன அமைதி, நம்பிக்கை ஆகியவற்றை மனிதன் தன் உள்ளத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு வழிவகுப்பது செபமாலை.

AI நம் கைகளில் இருக்கும் அறிவு; செபமாலை நம் இதயத்தில் இருக்கும் ஞானம். Artificial Intelligence மனிதனின் சிந்தனையை வேகப்படுத்துகிறது. செபமாலை மனிதனின் இதயத்தை ஆழப்படுத்துகிறது. AI can make us smarter; Rosary can help us become wiser.

AI நம்மை அறிவாளியாக்கலாம்; செபமாலை நம்மை ஞானமுள்ள மனிதர்களாக்கட்டும். AI GILDIT 6060. செபமாலை ஒரு புதிய வாழ்க்கை முறை. இதன் நோக்கம் AI -யை எதிர்ப்பதும் அல்ல; செபமாலையைப் பழைய வழக்கமாக மட்டும் வைத்திருப்பதும் அல்ல; மாறாக, AI நம் அறிவை வளர்க்கட்டும்; செபமாலை நம் மனிதத் தன்மையை வளர்க்கட்டும்.

1. AI - அறிவுக்காக 

AI மூலம் கற்றுக்கொள்வோம்; புதிய திறன்களை வளர்த்துக்கொள்வோம்; பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவோம். AI என்னைத் திறமையானவனா(ளா)க்கட்டும்.

2. செபமாலை - உள்ளத்திற்காக

ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் தொலைப்பேசி, AI, சமூக ஊடகம் அனைத்திலிருந்தும் விலகி அமைதியாகச் செபிப்போம். செபமாலை என்னை அமைதியானவனா(ளா)க்கட்டும்.

3. AI-யிடம் கேட்பதற்கு முன், இதயத்திடம் கேட்போம்

AI ஒரு கேள்விக்குப் பதில் தரலாம்; ஆனால், ‘இந்தப் பதிலை நான் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?’ என்ற கேள்விக்கு மனச்சான்று தேவை.

அறிவு + மனச்சான்று = ஞானம்

செபமாலையின் ஒவ்வொரு தசமத்தையும் ஒரு வாழ்க்கைப் பயிற்சியாக எடுத்துக்கொள்ளலாம்:

1. மன அமைதி - இன்று நான் அவசரப்படாமல் இருப்பேன்.

2. அன்பு - இன்று ஒருவரிடம் அன்பாக நடப்பேன்.

3. மன்னிப்பு - இன்று ஒரு காயத்தை விட்டுவிட முயற்சிப்பேன்.

4. நம்பிக்கை - சிரமத்திலும் நம்பிக்கையை இழக்கமாட்டேன்.

5. சேவை - இன்று குறைந்தது ஒருவருக்கு உதவுவேன்.

இதனால் செபமாலை ஒரு செப நேரமாக மட்டும் இல்லாமல், ஒரு வாழ்க்கைப் பயிற்சியாக மாறும்.

Digital Fast + Rosary - என்ற புதிய பழக்கம் இந்தத் தலைமுறைக்கு மிக அவசியம்.

AI / Technology மூலம் கற்றல் - அறிவை வளர்த்தல்.

மாலை நேரங்களில் 10-20 நிமிடங்கள் அலைப்பேசி இல்லாமல் செபமாலை - உள்ளத்தை அமைதிப்படுத்துதல்.

AI -யிடம் அல்ல; முதலில் நம் மனச்சான்றிடம் மூன்று கேள்விகள்: ‘இன்று நான் யாருக்கு நன்மை செய்தேன்?’, ‘யாரைக் காயப்படுத்தினேன்?’, ‘நாளை நான் என்ன சிறப்பாகச் செய்யலாம்?’

AI நம்முடைய கைகளை வலிமையாக்கட்டும்; செபமாலை நம்முடைய இதயத்தை மென்மையாக்கட்டும். AI நம்மை வேகமாக முன்னேற்றட்டும்; செபமாலை நாம் சரியான திசையில் செல்கிறோமா? என்று நினைவூட்டட்டும்.

AI-யால் Smart  ஆகு; செபமாலையால் Wise ஆகு. அன்பால் Human ஆகு; AI மூலம் அறிவை வளர்த்து, செபமாலை மூலம் ஞானத்தை வளர்த்து, அன்பின் மூலம் மனிதனாக வாழ்வோம்.

கிறித்தவ உறவுகளே! மனித வாழ்விற்கு அறிவின் சக்தி பெரிதுதான்; ஆனால், அதைவிட பெரிது... வாழ்வின் நெறிகளை அறிவதும், அத்தோடு பயணிப்பதும்தான்! நீங்கள் இவ்வுலகத்தை நன்முறையில் சந்திக்கவும், நீங்களே இல்லாத ஓர் உலகத்தை உங்கள் குழந்தை சிறந்த முறையில் சந்திக்க அன்னை பெரிதும் துணை நிற்பார். அன்னையைத் துதிப்போம்; அன்னையின் வழி இயேசுவைப் பின்பற்றுவோம்; அன்னையின் துணையோடு வாழ்வின் எதார்த்தத்தைச் சந்திப்போம்.