news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

“மத்தியிலும் மாநிலங்களிலும் மக்களின் நலனைக் காப்பதற்கு நல்லாட்சி அவசியமாகும். தற்சார்பு மிகுந்த, வளர்ந்த தேசமாக முன்னேற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள சூழலில், உலகின் தனிப்பெரும் பொருளாதாரச் சக்தியாக நம் நாடு உருவெடுக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றவர்களுக்குக் கட்டளையிடுவதற்காக அல்லாமல், நமக்கு யாரும் கட்டளையிடாமல் இருப்பதற்காக இந்த நிலையை நாம் எட்ட வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு வலுவான அமைப்புகளும் சிறந்த ஆட்சி முறையும் அவசியம்.”

மேமிகு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர்

“நாட்டின் நிதிச்சூழலில் ஆர்.பி.ஐ. எவ்வாறு முக்கியப் பங்காற்றியது என்பதையும், காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் நாம் அறிவோம். UPI வருவதற்கு முன்பு நிதி உள்ளடக்கம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் ‘சைபர் மோசடிகள்’ பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. UPI-களைச் சிலர் மோசடிகளுக்குப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, இந்தியாவிற்கு உண்மையில் AI பாதுகாப்பு நிறுவனம் கட்டாயம் தேவை.”

திருமிகு. சௌமியா சுவாமிநாதன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்

“தேர்தலில் வெற்றி பெற்ற மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை பேசும் கலாச்சாரத்தை, பா.ச.க. தொடங்கி வைத்தது. அது இன்று தமிழ்நாடு வரை பரவி விட்டது. இத்தகைய நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரைத் திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு அளிக்கப்படவேண்டும். 13 கோடி மக்களின் வாக்குரிமை இன்று பறிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமான ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி, உள்துறை அமைச்சர், தேர்தல் ஆணையரைப் பற்றி யாரும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசவில்லை. வாக்குரிமை பறிப்பு நாடாளுமன்ற சனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட படுகொலை. தமிழ்நாடு முதல்வர் இதற்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும்.”

திருமிகு. மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்