“ஆதிக்க மனப்பான்மையைக் கடந்து, சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே உலகளாவிய போர்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என்று வத்திக்கான் அரசுபணிச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் தெரிவித்துள்ளார். அக்டோபர் 4 அன்று ‘லா ரிபப்ளிகா’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத் தொடருக்குப் பின் உலகளாவிய மோதல்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். உலகச் சட்டத்தின் அடிப்படையில் நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
காசா,
உக்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் அப்பாவி மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த கர்தினால், காசாவில் இயங்கி வரும் கத்தோலிக்கப் பள்ளி நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். குளிர்காலம் நெருங்கும் வேளையில் உக்ரைனில் நிலவும் பேரழிவு வேதனையளிப்பதாகக் கூறிய அவர், தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு உரிமை உண்டு என்பதைச் சுட்டிக்காட்டினார். வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட வத்திக்கான் என்றும் உதவத் தயார் என அவர் உறுதியளித்தார்.