ஒருபுறம், அசிசியின் புனித பிரான்சிஸ் இயற்கையோடும் ஏழைகளோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்ந்தார்; மறுபுறம், இன்று செயற்கை நுண்ணறிவு மனித சிந்தனைக்கும் தொழில்நுட்பத்திற்கும் புதிய உலகத்தைத் திறக்கிறது.
இவ்விரண்டிற்கும்
தொடர்பு இருக்கிறதா? இருக்கிறது! மனிதனை மையமாகக் கொண்டால், AI-யும் பிரான்சிசியப் பார்வையின் கருவியாக முடியும்.
தொழில்நுட்பம்
ஒரு
கருவி
புனித
பிரான்சிஸ் அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும்விட, எளிமையையும் சேவையையும் தேர்ந்தெடுத்தார். அதுபோல AI-யும் மனிதனின் எஜமானாக அல்ல; மனிதனின் கருவியாக இருக்கவேண்டும். ‘அறிவே உன்னைப் பெருமைப்படுத்தாமல், சேவைக்குத் தூண்டட்டும்’ என்பதே
அதன் நோக்கமாக இருக்கவேண்டும்.
மனிதனைவிட இயந்திரம்
உயர்ந்ததல்ல!
திருவிவிலியம்
கூறுகிறது: “மனிதனைத் தம் சாயலாககக் கடவுள் படைத்தார்”
(தொநூ 1:27). மனித கண்ணியம் எந்த அல்காரிதத்தாலும் அளக்க முடியாது. AI முடிவெடுக்கலாம்; ஆனால், அன்பு, இரக்கம், மனச்சான்று ஆகியவற்றை மனிதனே வழிநடத்தவேண்டும். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியதுபோல, AI மனித கண்ணியத்திற்குச் சேவை செய்யவேண்டும்.
சகோதரத்துவத்திற்கான
AI
புனித
பிரான்சிஸின் வாழ்க்கையின் மையம் சகோதரத்துவம். ‘இறைவா, அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்’ என்ற
புகழ்பெற்ற பிரான்சிசியப் பார்வை, இன்றைய ஏ.ஐ. உலகிற்கும்
பொருந்துகிறது.
இன்று
கூறப்படும் ஒரு சிந்தனை: ‘ஏஐ-யின் எதிர்காலம்
அதன் அறிவில் இல்லை; மாறாக, அதைப் பயன்படுத்தும் மனிதனின் பொறுப்பில் உள்ளது.’
இறுதியாக...
AI வேகத்தைத் தரலாம்;
ஆனால், பிரான்சிசியம் திசையைத் தருகிறது. தொழில்நுட்பம் நம் கைகளில் இருக்கட்டும்; மனிதநேயம் நம் இதயத்தில் இருக்கட்டும். அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு செயற்கை மனிதநேயமாக மாறாமல் அன்பு, அமைதி, சகோதரத்துவம், பொதுநலன் ஆகியவற்றை வளர்க்கும் நுண்ணறிவாக மாறும்.