news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (11.10.2026)

“மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் வழியே அமைதியை உருவாக்குவோம்.”

செப்டம்பர் 28,  புனித ஸ்தேவான் பேராலயம், மெட்ஸ்

“துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையும் சேவையும் மலர்கின்றன.”

செப்டம்பர் 27, அக்வெல் நோட்ரே-டேம் (Accueil Notre-Dame) லூர்துநகர்

“காயமுற்றும் தனிமையிலும் வாடும் மக்களுடன் அரவணைப்புடனும் கருணையுடனும் கனிவுடனும் உடனிருப்பதே கிறித்தவ அழைப்பு.”

செப்டம்பர் 27, மாலைத் திருப்புகழ் மறையுரை, நோட்டர்-டாம் பேராலயம், லூர்து

“ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்தையும் அவரவரின் வேகத்தையும் பொறுமையுடனும் சகோதர அன்புடனும் மதித்து, ஒன்றாக நடக்க கிறித்தவர்கள் அழைக்கப்படுகின்றனர்.”

செப்டம்பர் 27, மாலைத் திருப்புகழ் மறையுரை, நோட்டர்-டாம் பேராலயம், லூர்து

“உரையாடல் நமது அடையாளத்தைப் பலவீனப்படுத்துவதில்லை; மாறாக, பிறரின் வேறுபாடுகளுக்கு நம்மைத் திறந்து வைத்து, நமது நம்பிக்கையை உண்மையுடனும் எளிமையுடனும் வெளிப்படுத்த உதவுகிறது.” 

செப்டம்பர் 27,  திருத்தந்தை உரை, மாநாட்டு மையம், மெட்ஸ்