“தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு என்று முதல்வருக்குத் தெரியுமா? இதற்குப் பின் மிகப்பெரிய போதைப் பொருள் கும்பல் இயங்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எப்போதும் போல் மௌனம் காக்காமல், இதற்குப் பதில் கூறவேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது.”
திருமிகு. எடப்பாடி
பழனிச்சாமி,
அ.தி.மு.க.
பொதுச்செயலர்
“சென்னை பட்டினப்பாக்கத்திற்குப் பதிலாக அண்ணாசாலையில் உள்ள பல்லவன் இல்லப் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைவிட, பல்லவன் இல்லப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள் அதிகமாக உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களைப் பட்டியலிட்டால், அதில் முதல் மூன்று இடங்களில் பல்லவன் இல்லம் அமைந்துள்ள பகுதியும் ஒன்றாகும். சென்னையின் முதன்மைச் சாலையான அண்ணாசாலை ஏற்கெனவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையில், பல்லவன் இல்லப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அதன் பின் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவே முடியாது!”
திருமிகு. அன்புமணி
இராமதாஸ்,
பா.ம.க.
தலைவர்
“வாழ்வாதாரத்திற்குத் தேவையான அடிப்படைப் பொருள்களின் விலைவாசி உயர்வு எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். குறிப்பாக, அரிசி விலை உயர்வு ஏழை, எளிய மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
திருமிகு. திருமாவளவன்,
வி.சி.க.
தலைவர்
“அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவிப்பதுடன் மட்டுமல்லாமல், டைபாய்டு, சிக்கன் குனியா, கல்லீரல் அலர்ஜி போன்ற நோய்களைத் தடுக்கும் ஆறு முக்கியத் தடுப்பு ஊசிகளை வழங்கவேண்டும். பருவகாலத் தொற்றுகள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் பச்சிளம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய ‘தாய்மாமன் தடுப்பூசித் திட்டத்தை’
உடனடியாகச் செயல்படுத்தவேண்டும்!”
தமிழ்நாட்டுத்
தாய்மார்கள்