news-details
வத்திக்கான் செய்திகள்
“திருமண அன்பு என்பது வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பு”- திருத்தந்தை லியோ

இளைஞர்களின் அன்பு, மனித உறவுகள் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கையின் ஒளியில் அமையும் திருமணம் குறித்து வழிகாட்டும்  ‘YOUCAT: Love Forever’ நூலின் புதிய பதிப்பிற்குத் திருத்தந்தை லியோ முன்னுரை எழுதியுள்ளார். அதில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, “மனித இதயம் ஆழமான, தியாகமயமான, நிலையான அன்பிற்காக ஏங்குகிறது; ஏனெனில், மனிதன் அன்பிற்காகவே படைக்கப்பட்டுள்ளான். கத்தோலிக்க  நம்பிக்கையில் கணவன்-மனைவி இடையே நிலவும் தூய அன்பு வெறும் தற்காலிக உணர்ச்சியல்ல; மாறாக, அது ஒருவர் மற்றவருக்கு வழங்கும் வாழ்நாள் அர்ப்பணிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சிலுவையில் இயேசு வெளிப்படுத்திய  அன்பே உண்மையான அன்பின் மிக அழகிய வடிவம். சுயநலமற்ற அந்தத் தெய்வீக அன்பைப் பிரதிபலிப்பதே உண்மையான கிறித்தவத் திருமணம். இளைஞர்கள் இத்தகைய ஆழமான அன்பைக் கண்டு அஞ்சாமல், இறைவனின் அருளோடும் நம்பிக்கையோடும் வாழ்நாள் முழுமைக்குமான வாக்குறுதியை ஏற்று, அன்பின் வழியில் நடக்கத் துணிச்சலுடன் முன்வரவேண்டும்” என்று திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார்.