news-details
வத்திக்கான் செய்திகள்
“உங்கள் இறைவேண்டலை நான் உணர்ந்தேன்”- திருத்தந்தை லியோ நெகிழ்ச்சி!

நுரையீரல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய திருத்தந்தை லியோ ஞாயிறு மூவேளைச் செப உரையின்போது, தனக்காக இறைவேண்டல் செய்த அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். “கடந்த சில நாள்களாக நீங்கள் அனைவரும் எனக்காகச் செய்த இறைவேண்டல்களின் ஆதரவை நான் உண்மையாகவே உணர்ந்தேன். அனைவருக்கும் எனது நன்றி” என்று திருத்தந்தை உருக்கமாகக் குறிப்பிட்டார். மேலும், ஜெமெல்லி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அளித்த சிறப்பான பராமரிப்பிற்குத் தனது சிறப்பு நன்றியையும்  தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனைகளில் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து, திருத்தந்தை வத்திக்கான் திரும்பினார். மருத்துவமனையில் தங்கியிருந்த அனுபவம், நோயினாலும் உடல் பலவீனத்தினாலும் அவதியுறும் மக்களுடன் தன்னை இன்னும் நெருக்கமாக இணைத்துக்கொள்ள உதவியதாகக் கூறிய திருத்தந்தை, இறைவனின் அருளோடும் மக்களின் செபங்களோடும் தனது கடமைகளைப் படிப்படியாகத் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்தார்.