news-details
வத்திக்கான் செய்திகள்
“அணு ஆயுதங்கள் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்!” ஐ.நா.வில் வத்திக்கான் பிரதிநிதி எச்சரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபைக்கான வத்திக்கானின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் கிறிஸ்டோஃப் எல்-காசிஸ் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 81-வது அமர்வில் பேசியபோது, “பன்னாட்டுப் பாதுகாப்புச் சூழலில் நிலவும் பதற்றங்கள் அணு ஆயுதங்களைச் சார்ந்திருப்பதை நியாயப்படுத்த முடியாது. இத்தகைய சூழல் அணு ஆயுதங்களை ஒழிப்பதை மேலும் அவசரப் பணியாக மாற்றுகிறது. அமைதி என்பது அதிகாரப் போட்டியின் சம நிலை அல்ல; மாறாக, அது உரையாடல் மற்றும் நீதியின் வழியாகவே நாள்தோறும் கட்டியெழுப்பப்படுகிறது” என்ற திருத்தந்தை லியோவின் கூற்றை  நினைவுகூர்ந்தார். அணு ஆயுதத் தற்காப்புக் கோட்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மனிதகுலத்தை நிரந்தர ஆபத்தில் தள்ளுவதாக எச்சரித்த அவர், அணு ஆயுதத் தடை ஒப்பந்தங்களை ஏற்று, அனைத்து நாடுகளும் முழுமையான அணு ஆயுதக் குறைப்பில் ஈடுபடவேண்டும் என வத்திக்கான் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.