“இசை மனித இதயங்களை இறைவனை நோக்கி உயர்த்தும் ஓர் அருள்கொடை. இசையின் அழகு, மனிதரை அழகின் முழுமையான ஆதாரமாகிய இறைவனைச் சந்திக்கச் செய்கின்றது.”
ஜூலை
29, காஸ்தல் கந்தோல்போவில்
உள்ள
திருத்தந்தையரின்
தோட்டத்தில் ‘அமைதியின் புகழ்ப்பாடல்’ என்ற செப
நிகழ்வு
“நற்செய்தியால் ஒளியூட்டப்பட்ட மனச்சாட்சியை எந்தச் சங்கிலியாலும் சிறைப்படுத்த முடியாது. ஆண்டவர் தம் பிள்ளைகளுக்காக ஆயத்தப்படுத்தும் விடியலை எந்த இரவும் தடுக்க முடியாது, இறைவனின் அன்பிலிருந்து எவரையும் எந்தச் சிறையும் பிரிக்க முடியாது.”
ஜூலை 31 அன்று
18 ஆண்டுகள்
சிறைத்தண்டனை
பெற்ற
97 வயதான கர்தினால் எர்னெஸ்ட்
சிமோனி
அவர்களுக்கு
அனுப்பிய
செய்தி
“மனிதனின் உடல் பசியை மட்டுமல்ல, உண்மை மற்றும் வாழ்விற்கான ஆழ்ந்த ஆன்மிக ஏக்கத்தையும் கிறிஸ்துவே உண்மையாக நிறைவு செய்கிறார்.”
ஆகஸ்டு 2 ஞாயிறன்று புனித பேதுரு
பெருங்கோவில்
வத்திக்கான்
செய்தி
“ஆண்டவரின் அழைப்பைக் கேட்டு உறுதியுடனும் துணிவுடனும் அவரைப் பின்பற்றுங்கள். இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் அனுபவம் நம் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. அது அவரது அன்பிற்கும் இரக்கத்திற்கும் சாட்சிகளாக வாழும் வலிமையை நமக்குத் தருகிறது.”
ஆகஸ்டு
3, தேசிய இளையோர்
தினத்திற்கு
அனுப்பிய
காணொளிச்
செய்தி
“செபம் இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல் மற்றும் அருளடையாளங்கள் ஆகியவை ஆண்டவருடனான தனிப்பட்ட சந்திப்பிற்கு வழிவகுக்கின்றன.”
பன்னாட்டு இளையோர்
விழா
தொடக்க
நிகழ்வை
முன்னிட்டு
அனுப்பிய
செய்தி