பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று திருத்தந்தை லியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், “இப்பகுதியில் அமைதியும் நிலையான தீர்வும் ஏற்பட இரு நாடுகள் கொள்கையை உலக நாடுகள் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல்
மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இணைந்து வாழ்வதே உண்மையான அமைதிக்கு வழிவகுக்கும் என்று வத்திக்கான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, 2025 ஜூலையில் ஐ.நா.விடம்
உரையாற்றிய பேராயர் கேப்ரியல் காச்சியா குறிப்பிட்டதுபோல, பாதுகாப்பான மற்றும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையிலான இரு நாடுகள் கொள்கையே புனித பூமியில் நீதியான மற்றும் நிலையான அமைதிக்கான ஒரே சாத்தியமான மற்றும் நியாயமான வழி என்பதை வத்திக்கான் வலியுறுத்தியது.