“எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டுச் செயல்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக உபயோகிக்கவேண்டும். இதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். குறிப்பாக, இத்திட்டங்களைச் செயல்படுத்தும் துறைகளின் மாதாந்திரச் செலவீன விவரம், பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் பயனாளிகளின் விவரத்தை wwwadtwdap.tn.gov.in வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள தடைகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான பரிந்துரைகளைத் தெரிவிக்கவேண்டும். அதற்கான புதிய திட்டங்களை அனைத்துத் துறைச் செயலர்கள் உருவாக்கவேண்டும்.”
மாண்புமிகு. ஜோசப்
விஜய்,
தமிழ்நாடு
முதல்வர்
“தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது வகைகளை ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்வது நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காகத் தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4,048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன; அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். இது மது வணிகத்தையும், மதுப்பழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது அரசுக்குப் பெருமை சேர்க்காது. மதுப்பழக்கத்தை அதிகரிக்கவே செய்யும். மது முன்பதிவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும்.”
திருமிகு. அன்புமணி,
பா.ம.க.
தலைவர்
“கீழடி அகழாய்வில் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் எழுதப் படிக்க அறிந்து இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குழந்தைகளைத் தினந்தோறும் புத்தகம் வாசிக்க பெற்றோர் ஊக்குவிக்கவேண்டும். புத்தக வாசிப்புடன் மாமல்லபுரம், கீழடி, பொருநை போன்ற அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகள் தமிழர்களின் கலை நுணுக்கங்களை, வாழ்வியலை அறிந்துகொள்ள முடியும். நவீன உலகத்தைக் குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையில் நூல்களை, கட்டுரைகளை எழுத்தாளர்கள் படைக்கவேண்டும்.”
திருமிகு. ராஜ்மோகன்,
பள்ளிக்
கல்வித்துறை
அமைச்சர்