அன்பார்ந்த நண்பர் அருள்தந்தை இராஜசேகரன் அவர்களே,
மிகுந்த
ஆர்வத்துடன் ‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கம் தொடங்கிய ‘நம் வாழ்வு’ இணைய தினசரி இதழின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்பான வாழ்த்துகள்! ஒரு வருடமாக தமிழ் கத்தோலிக்கச் சமூகத்திற்கு உண்மை, நம்பிக்கை மற்றும் திரு அவையின் குரலை உண்மையுடன் எடுத்துச் சென்ற உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இது வெறும் ஒரு மைல்கல் மட்டுமல்ல; செய்தி, நம்பிக்கை, சத்தியம் என்ற மூன்று அடிப்படைகளின் மூலம் தமிழ் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களை இணைத்த ஒரு பணியின் தொடக்கமும் ஆகும்.
அன்னை
மரியாவும், தூய ஆவியானவரும் உங்கள் இந்தத் திருப்பணியைத் தொடர்ந்து வழிநடத்தி, வளர்ச்சியடைய அருள்பாலிக்கட்டும். இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள
சேவையாற்ற இறைவன் உங்கள் குழுவினருக்கு ஆசி வழங்குவாராக! ‘நம் வாழ்வு’ தலைவர் ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும், ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.
முனைவர் ரபி
பெர்னார்ட்,
நாடாளுமன்ற மாநிலங்களவை மேனாள்
உறுப்பினர்