news-details
உலக செய்திகள்
“காசா மக்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவிட அனைவரும் முன்வரவேண்டும்”- திருத்தந்தை

காசா பகுதியில் நிலவும் கடும் துயரங்களைக் களைய உலகளாவிய சமூகம் முன்வரவேண்டும் என்றும், போர்க் களங்களில் மனித உயிர்களைப் பொருட்படுத்தாத செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் திருத்தந்தை 14-ஆம் லியோ வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை, “காசா மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கே மீண்டும் மறுகட்டமைப்புப் பணிகளைத் தொடங்க அனைத்து அதிகாரிகளும் உதவ வேண்டும்என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். காசா நோக்கிச் சென்ற அமைதி ஆர்வலர்கள் மீதான வன்முறையைக் கண்டித்த திருத்தந்தை, வன்முறை வெறுப்பையே வளர்க்கும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகளைக் காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.

நவீன போர்களில் .. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மனித மதிப்பற்றதொழில்நுட்ப ஆதிக்கத்திற்குஎதிராகஆயுதமற்ற செயற்கை நுண்ணறிவுஎனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். இது தொடர்பாகஆந்த்ரோபிக்போன்ற முன்னணி .. நிறுவனங்களுடன் வத்திக்கான் ஆலோசனைகளைத் தொடங்கி இருப்பதாகவும், தொழில்நுட்பம் மனித மாண்பைச் சிதைக்காத வகையில் இருப்பதை உறுதிசெய்ய உரையாடல் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.