news-details
ஆன்மிகம்
இயேசுவின் மீட்புப் பணியில் மரியாவின் பங்கு (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 40)

1. “இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி (லூக் 2:32) என்பதை உணர்ந்த பிறகு, சிமியோன் மரியாவிடம் அந்த மீட்பராகிய இயேசு அனுபவிக்க வேண்டிய மிகப்பெரும் துயரத்தையும் அந்தத் துன்பியல் நிகழ்வில் அவரின்  (மரியாவின்) பங்களிப்பையும் முன்னறிவிக்கின்றார்.

அவரின் மீட்புப் பலி பற்றிய குறிப்பானது இயேசுவின் பிறப்பு பற்றிய அறிவிப்பு நிகழ்வின் பொழுது சுட்டிக்காட்டப்படாமல் மரியின் மகனுடைய மறையுண்மைகளை அவர் புரிந்துகொள்ள உதவிய கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பின் இரண்டாவது அறிவிப்பு (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண்.16) என்று கூறப்படும் சிமியோனின் தீர்க்கத்தரிசனத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது

அதுவரை அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சிமியோன், யோசேப்புவையும் மரியாவையும் ஆசிர்வதிக்கையில் மரியாவிடம் மட்டும் அவரது மகனின் பாடுகளை அவரும் பகிர்ந்துகொள்வார் என்று முன்னறிவிக்கின்றார். தூய ஆவியாரால் தூண்டப்பட்டு அவர் மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் (லூக் 2:34-35) என்கிறார். தாய் என்கிற முறையில் மரியாவின் துன்பமானது அவரது மகனின் பாடுகளில் அதன் உச்சத்தை அடைகிறது.

2. இந்த வார்த்தைகள் மீட்பர் எதிர்கொள்ளவிருக்கும் துன்பத்தை முன்னறிவிக்கின்றன. உண்மையில் அவர் அவரது சமகாலத்தவர்களின் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள முன்குறிக்கப்பட்டமுரண்பாட்டின் அடையாளம் (the sign of contradiction) ஆவார். ஆனால், கிறிஸ்துவின் துன்பத்துடன் இணைத்து மரியாவின் இதயமானது வாளால் குத்திக் கிழிக்கப்படும் என்பதைக் காட்சிப்படுத்துவதன் வழியாக அவரது மகனின் துன்பமிக்க முடிவோடு அவரின் அன்னையையும் சிமியோன் இணைக்கின்றார்.  

இவ்வாறு, மதிப்புமிக்க வயோதிகரான அவர், மீட்பர் எதிர்கொள்ளவிருக்கும் பகையை முன்கூட்டியே எதிர்பார்க்கையில், அப்பகையானது தாயின் இதயத்தில் ஏற்படுத்தவிருக்கும் எதிர்வினையையும் சுட்டிக்காட்டுகின்றார். தாயின் இந்தத் துன்பமானது மீட்புப் பலியில் அவரது மகனாகிய இயேசுவோடு இணையும் அந்தப் பாடுகளில் அதன் உச்சத்தை அடைகிறது.

லூக்கா நற்செய்தி 2:32-இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ள துன்புறும் ஊழியர் பற்றிய பாடல்களை நமது மனக்கண்முன் கொண்டு வரும் பொழுது (ஒப்பிடுக: எசா 42:6; 49:6), சிமியோனின் வார்த்தைகள், “அவர் நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார் (எசா 53:5), “தம் உயிரைக் குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் (எசா 53:10) போன்ற தனிப்பட்ட மற்றும் ஆன்மிகத் தியாகத்தை விளக்கும் பண்டைய சடங்குமுறைகளையும் விஞ்சுகின்ற வகையில் இருக்கும் துன்புறும் ஊழியர் பற்றிய இறைவாக்கை நமக்கு நினைவூட்டுகின்றன.

துன்புறும் ஊழியரின்துக்ககரமான எதிர்காலத்திற்கும், மரியாவின் எதிர்காலத் துன்பத்திற்கும் இடையே ஒரு தனித்துவமான ஒற்றுமை இருப்பதை சிமியோனின் இறைவாக்கானது எவ்வாறு வெளிப்படுத்துகின்றது என்பதை இங்கு நாம் கவனிக்கலாம்.

3. இயேசுவை, சிமியோன்பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி (லூக் 2:32) என்று அறிவிக்கும் பொழுது, மரியாவும் யோசேப்புவும் திகைத்து நிற்கின்றனர். சிமியோனின்  வார்த்தைகளைக் கேட்ட பிறகு தன் இருதயத்தைத் துளைக்கும் வாள் பற்றிய இறைவாக்குப் பற்றி மரியா எதுவுமே சொல்லவில்லை. யோசேப்புவுடன் இணைந்து அந்தப் புரிந்துகொள்ள முடியாத இறைவாக்கு வார்த்தைகளையும் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தலின் உண்மையான அர்த்தத்தையும் அமைதியுடன் மரியா ஏற்றுக்கொள்கின்றார்.

உண்மையில், புனித லூக்கா தனது நற்செய்தியில்அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒரு சோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக் குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது (லூக் 2:24) என்று குறிப்பிடுவதைப் போன்று, அதுநான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று கூறும் இயேசுவின் பலியை முன்குறிக்கின்றது. இதில் இயேசுவின் மீட்புப் பணியில் அவரது தாயையும் இணைக்கும்உண்மையானதொரு கையளிப்பும் (லூக் 2:22) நிகழ்த்தப்பட்டது.

மரியா தனது மகனின் மீட்புப் பணியில் பங்குகொள்ள வேண்டியதாயிருந்தது...

4. சிமியோனின் இறைவாக்கைத் தொடர்ந்து இறைவாக்கினரான அன்னாவினுடனான சந்திப்பும் நிகழ்கின்றது: “அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக் குழந்தையைப் பற்றிப் பேசினார் (லூக் 2:38). “கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து (லூக் 2:37) வந்ததன் வழியாக மீட்பரின் வரவை எதிர்பார்த்திருந்த அந்த வயதான பெண்ணின் நம்பிக்கையும், இறைவாக்குரைக்கும் ஞானமும் இஸ்ரயேலின் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்குத் திருக்குடும்பத்திற்கு மேலும் ஊக்கமூட்டியது.

இந்தக் குறிப்பிட்ட தருணத்தில், அன்னாவின் செயலானது மரியாவிற்கும் யோசேப்புவிற்கும் இறைவனிடமிருந்து வந்ததோர் அடையாளமாகத் தோன்றியிருக்கும். இது நம்பிக்கையளிக்கும் ஒளியின் மற்றும் தொடர் பணியின் செய்தியாகும்.

சிமியோனின் இறைவாக்குரைக்கும் நிகழ்வு முதல், மரியா தனது வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவின் பாடுகள் நிறைந்த பணிவாழ்வில் மிக நெருக்கமாகவும், புரிந்துகொள்ள இயலாத வகையிலும் ஒன்றிணைக்கிறார்

இவ்வாறு, மனிதகுலத்தின் மீட்புக்காக மரியா தன் மகனின் உண்மையுள்ள உடன் உழைப்பாளராக மாற வேண்டியதாயிருந்தது.

மூலம்: John Paul II, Mary has role in Jesus’ saving mission, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 1 January 1997, p. 11.