news-details
சிறப்புக்கட்டுரை
ஒரு நரியும் பல பரிகளும்: தொடரும் குதிரைபேர அரசியல்...

ஒரு நல்ல குதிரை எப்படி இருக்கும்?  தகுதியான  குதிரையை அடையாளம் காண்பது எப்படி? குதிரையின் உடல் அமைப்பு, நடை, இயக்கம், ஆரோக்கியம், குணம், இனம் (breed), வயது, கால்களின் அமைப்பு என்பதே தகுதியான குதிரையின் முன் முத்திரையாகும். தகுந்த குதிரையை மதிப்பீடு செய்வதில் உள்ள பல நடைமுறைச் சிரமங்கள் நேர்மையற்ற குதிரை வியாபாரத்திற்கு அடிகோலுகிறது. சிக்கல்மிகு குதிரை வியாபாரத்தில் பேரங்கள் அடிப்படைத் தர்மமும் அறமும் இன்றி நடக்கின்றன.

அதுபோலவே, அரசியலில் தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைக்காமல் வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்குவதே  குதிரைபேரமாகும். குதிரைபேர அரசியலில்நரிகள் பரிகளாவதுஅதிர்வான  தருணமாகும். கிராமப்புறங்களில்நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்என்பார்கள். 2024-இல் நடைபெற்ற மாநாட்டில் திரு. விஜய், “ஊழல் இல்லாத ஆட்சி தருவோம், குதிரைபேர அரசியல் செய்யமாட்டோம்என்றார். இன்றோ .தி.மு..வின் மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் இன்பதுரை அவர்கள், “எங்கள் பட்டியில் இருந்து, ஆடுகளைத் திருடி விட்டார்என்கிறார்.

சுதந்திர இந்தியாவில் 1952-இல் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளைச் சேர்த்த சென்னை மாகாணத்தில் 375 தொகுதிகள் இருந்தன. காங்கிரஸ் 152 இடங்களை வென்று ஆட்சியமைக்க  இயலாமல் திணறியது. நியமனச் சட்டமன்ற உறுப்பினர் 11 பேரையும், சுயேட்சை உறுப்பினர்கள் 30 பேரையும், கிசான்மஸ்தூர் பிரஜா கட்சியின் 19 பேரையும், காமன் வெல்த் கட்சியின் 6 பேரையும் கட்சிகளை உடைத்து இராஜாஜி முதல்வரானார். சட்டமன்றத் தேர்தலில் நிற்காத இராஜாஜி அவர்கள், சட்ட மேலவை உறுப்பினராகி தன் பதவியைத் தக்கவைத்தது  முதல் வரலாறு.

1991-1996 நரசிம்மராவ் ஆட்சிக் காலம். பாரதிய ஜனதா கட்சி 1993-இல் ஆளும் அரசுமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறது. 244 என்ற எண்ணிக்கை கொண்ட காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின்  நாடாளுமன்ற  உறுப்பினர்களாலும், ஜனதா தளத்தின்  நாடாளுமன்ற  உறுப்பினர் எண்ணிக்கைகளாலும் தப்பிப் பிழைக்கிறது. அவர்களுக்கு 3.5 கோடி இலஞ்சம் கொடுத்தாக வழக்கு, கைது என நடவடிக்கைகள் நகர்ந்தன.

முடிவில், அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 105 (2)-இன்படி பாராளுமன்ற விவகாரங்களில் பிற சட்ட அமைப்புகள் தலையிட முடியாது என்ற அடிப்படையில்  வழக்குகள் நீர்த்துப் போயின. அனைவரும் விடுதலை பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் குதிரைபேர அரசியலைப் பேசிய பா... ‘தாமரை நடவடிக்கை (operation lotus) என்ற பெயரில் இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குதிரைபேர அரசியல் நடத்தியே ஆட்சிக்கு வந்தது.

2018 தேர்தலில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில், காங்கிரஸ் 114 இடங்களிலும், பா... 109  இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வரானார். 2020, மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா வழி 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து பா... ஆட்சிக்கு வந்தது. பா...வின் சிவராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். நரசிம்மராவ் காலத்தில் 3.5 கோடியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விலை பா... காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் விலையாகப் பத்து மடங்கு உயர்ந்து 35 கோடியாக உயர்ந்தது என்பதே காலக்கொடுமையாகும்.

தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எப்பொழுதும் ஒரே சிந்தனை அடிப்படையில் என்பதால் நாம் இந்த வட இந்திய புகழ்ஆயா ராம், காயா ராம்அதிசயங்களைக் கண்டதில்லை. 2026 தேர்தல் முடிவுகள் தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர் பார்ப்போரைக் கூட ஒரு மாதம் செய்தி தொலைக்காட்சிகளைப் பார்க்க வைத்தது காணாத நிகழ்வு.

எனது பேத்தி தமிழ்நாட்டில் வசிப்பவர் இல்லை என்பதால் விஜய் அவர்களைப் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. கோடை விடுமுறைக்கு வந்தவள் கேட்கிறாள்: “ஏன் விஜய் எங்கோ போகிறார், வருகிறார்; ஏன் சோகமாய் இருக்கிறார்?” என ஆர்வம் கொள்கிறாள். அவள் கேட்பது ஆளுநர் மாளிகைக்கு விஜய்  ஆட்சி அமைக்க உரிமை கோரும் ஒரு வார நடை குறித்ததாகும்.

தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகளில் .வெ.. 108 தொகுதிகளை வென்றது. .வெ.. தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஒரு தொகுதியை இராஜினாமா செய்தார். .வெ.. பலம் 107 ஆனது. அதிலும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வாக்களிக்கும் நாளன்று வாக்களிக்க நீதி மன்றத்தில் தடை இருந்தது. பேரவைத் தலைவர் வாக்களிக்க முடியாத நிலையில், 105 உறுப்பினர்கள் என்பது .வெ..வின் உண்மையான  பலமாகும். காங்கிரஸ் கட்சிஎன்.டி..-வுடன் எந்தத் தொடர்பும் கூடாது; வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல் வரை கூட்டணிஎன்ற நிபந்தனையில், .வெ.. கேட்காமலே தனது 5 உறுப்பினர்களின் ஆதரவைத் தந்தது. நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலையில் இரு பொதுவுடைமைக் கட்சிகளின் தலா இரு உறுப்பினர்களும் ஆளும் அரசை ஆதரித்தனர்.

ஆட்சியில்  பங்கு, அதிகாரத்தில் பங்குஎன்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் நீண்ட விவாதங்கள், விளக்கங்களுக்குப் பிறகு அமைச்சரவையில் அங்கம் பெற்றார்கள். தனது 60 ஆண்டு காலக் கூட்டணியை மறந்துவிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் .வெ.. அரசில் பங்கு பெற்றார்கள். .தி.மு..வின் புரட்சிகர அணியில் 25 பேர் ஆளும் அரசை ஆதரித்தனர். மந்திரி பதவி என்ற அவர்களது கனவு தகர்ந்துள்ளது. 4 பேர் இராஜினாமா செய்த நிலையில், 15 பேர் எடப்பாடியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து தாய்க்கழகம் திரும்பிவிட்டனர்.

மன்னார்குடியில் வென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரே  சட்டமன்ற உறுப்பினர் .வெ.. அரசிற்கு ஆதரவு அளித்தார். இது குறித்துப் பேசிய ..மு.. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், .வெ.. ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலிக் கடிதங்கள் வழங்கியதாகவும், குதிரைபேரங்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் குதிரைபேர அரசியல் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் சட்டமன்றம் முதல் பொதுவெளிகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆளும் அரசு திறந்த விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. போதிய விளக்கங்களும் அளிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

தமிழ்நாடு பாரதிய சனதா மேனாள் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விருப்பத்திற்கு மாறாக எம்.எல்..க்களை விலைபேசி .வெ.. தற்போது நடத்துவது குதிரைபேர அரசியல் அல்ல; கழுதைபேர அரசியல்என்கிறார்.

இந்திய ஒன்றிய அரசு சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடக்கிறது எனில், தன் மத்தியப் புலனாய்வு பிரிவு மற்றும் அமலாக்கத் துறையைக் களம் இறக்கும். தமிழ்நாட்டில் ஏன் மௌனம் காக்கிறது என்ற  கேள்விகள் பொதுமக்களிடம் எழுகிறது. மேலும், இந்தப் பொய்க்கால் குதிரையின் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.