news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வளர்ந்த நாடுகளில் பெண்களுக்குச் சமவாய்ப்பு, மதிப்பு, தலைமைப் பதவிகளை மறுக்க முடியாது. ஏனெனில், பெண்களுக்குச் சமவாய்ப்புகளும் தலைமைப் பதவிகளும் கிடைத்தால்தான் நாட்டில் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும். பெண்களின் பங்களிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் உத்வேகமாக இருக்கும்.”

உயர்திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவர்

ஒரு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க விரும்பினால், அது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால், மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவேண்டும் என்று உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை.”  

உச்ச நீதிமன்றம்

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் உள்ளன. அவற்றில் 4.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளன. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிமன்றக் கட்டடக் கட்டமைப்பு அவசியம். இதில் குற்றவியல் வழக்குகள் மட்டும் 3.50 கோடி. சமுதாயம் சரியாக இருக்கவேண்டுமானால் குற்றவியல் வழக்குகள் குறையவேண்டும். விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 2.25 கோடி வழக்குகள் உள்ளன. தேங்கிக்கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை முடிக்க முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும்.”

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்