“நிகழாண்டும் ‘நீட்’ வினாத்தாள் முறைகேடுகள் வெளிவந்து தேர்வு இரத்து செய்யப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே ‘நீட்’ தேர்வு இருக்கிறது. ‘நீட்’ தேர்வில் மோசடி இல்லை; ‘நீட்’ தேர்வே ஒரு மோசடிதான். மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் ‘நீட்’ தேர்வு முறை ஒழிக்கப்படவேண்டும்.”
திருமிகு. மு.க.
ஸ்டாலின்,
தி.மு.க.
தலைவர்
“தங்கம்
வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோலைக் குறைவாகப் பயன்படுத்துங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள், மெட்ரோவைப் பயன்படுத்துங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்’ என
பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இவை வெறும் போதனைகள் அல்ல; ஒன்றிய அரசின் தோல்விக்கான சான்றுகள்.” –
திருமிகு. இராகுல்காந்தி,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
“உலகின்
பல்வேறு பகுதிகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வளரும் நாடுகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும். உலகம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு நிலைநாட்டப்படவேண்டும். உலகளாவிய சட்டவிதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படவேண்டும். பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்கவேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி, செங்கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். போர் காரணமாகப் பல்வேறு நாடுகளில் எரிபொருள், உணவு தானியங்கள், உரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாடுகளின் நிதிச்சுமை அதிகரித்திருக்கிறது. சுகாதாரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ‘பிரிக்ஸ்’
கூட்டமைப்பு உதவவேண்டும்.”
திருமிகு. ஜெய்சங்கர்,
மத்திய
வெளியுறவுத்
துறை
அமைச்சர்