news-details
தமிழக செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைத் தங்களுடைய பலத்தினால் பல்வேறு யுக்திகளினாலே ஆக்கிரமித்த பாரதிய சனதா கட்சி தமிழ்நாட்டிலும் கால்வைக்க முயற்சி செய்கிறது. அதைத் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமூச்சுடன் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இது அதீதமான நம்பிக்கை அல்ல, தன்னம்பிக்கை!”

திருமிகு. திருச்சி சிவா, தி.மு.. துணைப் பொதுச் செயலாளர்

தொகுதி மறு வரையறையால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. ஆனால், இது தொடர்பாக ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார். தி.மு.. அரசின் தோல்விகளை மறைக்க தொகுதி மறு வரையறையால் ஆபத்து என்கிறார். தமிழகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள் ஸ்டாலின்.”

திருமிகு. எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.. தலைவர்

நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் போனதுக்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்ஷன். எனக்கு ஒரு எமோஷன், எனக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும் எனக்கும் கண் கலங்கும். கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால் சனநாயகனை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவும் எடுபடவில்லை. நான் வெளியே வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளேன். தி.மு.-வினராலேயோ, பா...வினராலேயோ மற்றும் பலராலேயோ என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது.”

திருமிகு. விஜய், .வெ.. தலைவர்

செல்லும் இடமெல்லாம் தி.மு.. கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். தமிழ்நாட்டு முதல்வர் முன்மொழியும் அரசியல், ஒன்றிய அரசின் அதிகாரக் குவியலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர். பா...வுக்கு வாக்களித்தால்தான் மதுரை மெட்ரோ இரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் மிரட்டுகிறார். இந்தப் பிளாக்மெயில் எல்லாம் எடுபடாது. பிரதமர், உள்துறை அமைச்சர் என ஒன்றிய அமைச்சர்களின் முகாமே சென்னையில் அமைந்தாலும் சரி, பா... தோல்வி அடைவது உறுதி.”

திருமிகு. மு. வீரபாண்டியன், சி.பி.. தலைவர்