news-details
திருத்தூதுப்பயணம்
“போர் மற்றும் அநீதியால் கடவுளின் இதயம் உடைந்து போகிறது” - திருத்தந்தை

அல்ஜீரியாவிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை லியோ, தனது இரண்டாம் நாள் பயணமாக அன்னாபா நகருக்குச் சென்றார். புனித அகுஸ்தினார் ஆயராகப் பணியாற்றிய இப்பகுதியில் உள்ளமா மேசன் (Ma Maison) முதியோர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள முதியவர்களுடன் உரையாடினார். “அன்பும் சேவையும் உள்ள இடத்தில்தான் கடவுள் வாழ்கிறார். போர்கள், வன்முறை, அநீதி மற்றும் பொய்களால் கடவுளின் இதயம் நொறுங்குண்டுள்ளதுஎன்று வேதனையுடன் தெரிவித்தவர், “கடவுள் அகந்தை கொண்டவர்களுடன் இருப்பதில்லை; அவர் எளியோருடனும் தாழ்மையானவர்களுடனும் தங்கியிருந்து தமது அன்பின் பேரரசை உருவாக்குகிறார்என்றார்.