பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைக் குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இலவசக்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி.இ.) தனியார்
பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேலான தனியார் பள்ளிகளில் ஓர் இலட்சம் இடங்கள் உள்ளன.
இந்தத்
திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது
ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம்.
தமிழ்நாட்டில்
2013-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஆர்.டி.இ. திட்டத்தின்
கீழ் இதுவரை சுமார் 5.7 இலட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் கல்வியாண்டு (2026-2027) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
தனியார் பள்ளிகள்
இயக்ககம்,
தமிழ்நாடு