news-details
தமிழக செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

.வெ.. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சரியான பாதுகாப்பு வழங்காதது காவல்துறையின் பிரச்சினை. ஆனால், தி.மு.. ஆட்சியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பாரபட்சத்துடன் காவல்துறை செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம், பிரச்சாரம் போன்றவற்றிக்கு நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.”

திருமிகு. நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பா... தலைவர்

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், .வெ.. தலைவர் விஜய் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, ‘ரூ. 1000, ரூ. 2000, ரூ. 5000 என்று கொடுப்பார்கள்; அது உங்கள் பணம், பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்என்று பேசியுள்ளார். இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. விஜய்யின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது. இந்த விதிமீறல் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள்மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ள விஜய் மீது, தேர்தல் ஆணையம் தாமே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

திருமிகு. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தேர்தலுக்குப் பிறகு .வெ.. தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.”

திருமிகு. ராம்தாஸ் அதுவாலே, இந்தியக் குடியரசு கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் பா...வின் அடிமையாகி, தமிழ்நாட்டுக்குள் பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் எப்படியாவது அழைத்து வரவேண்டும் என்று வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். தி.மு.. தலைவர் கூறியது போன்று இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நம் உரிமைகளை மீண்டும் மீட்டெடுத்துக் கொடுக்கவேண்டும். தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்பதை இந்தத் தேர்தல் மூலம் மக்கள் நிரூபித்துக் காட்டவேண்டும்.”

திருமிகு. உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வர், தமிழ்நாடு அரசு