news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (12.04.2026)

விமானங்கள் போருக்கானதாக அன்றி, எப்போதும் அமைதியைச் சுமந்து செல்பவையாக மட்டுமே இருக்கவேண்டும்.”

மார்ச் 23, லுஃப்தான்சா மற்றும் ITA ஊழியர்கள் சந்திப்பு

கிறிஸ்துவால் நிறுவப்பட்ட திரு அவையின் படிநிலை அமைப்பு, உலகிற்கு மீட்பையும் புனிதத்தையும் வழங்கும் ஓர் இறைப் பணியாகும்.”

மார்ச் 25, புதன் மறைக்கல்வி உரை

உடல் உறுப்பு தானம் வணிகமயமாக்கப்படாமல், தார்மிக விழுமியங்களுடன் கூடிய தன்னார்வ அடிப்படையில் அமையவேண்டும்.”

மார்ச் 26, தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு

சமூக நீதி மற்றும் பிறரன்புப் பணிகளில் இறைமக்கள் அனைவரும் முழுமையாக ஈடுபடவேண்டும்.”

மார்ச் 28, மொனாக்கோ அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் சந்திப்பு

இயேசுவின் தியாகத்தையும் இறைவனின் இரக்கத்தையும் பின்பற்றி, அதிகார மோகத்தைத் துறந்து நலிந்தோரைப் பாதுகாக்க வேண்டும்.”

மார்ச் 28, மொனாக்கோ, இரண்டாம் லூயிஸ் மைதான மறையுரை

வன்முறையைத் துறந்து, அமைதியின் அரசராகத் திகழும் இயேசுவைப் பின்பற்றி உலகெங்கும் அமைதி நிலவச் செய்யவேண்டும்.”

மார்ச் 29, குருத்து ஞாயிறு திருப்பலி