news-details
கவிதை
தாரும் அமைதி உங்க மண்ணிலே!

இயேசு நீர் பிறந்த மண்ணிலே

இன்னல்பட்டு மீட்பு நடந்த பூமியிலே

இறைசெய்தி அமைதி அறிவித்த மண்ணிலே

எம் இறைவா

அந்த அமைதியை அருளும் ஐயா!

இயேசுவே நீர் உயிர்த்த பூமியிலே

இறையாசிர் தந்த மண்ணிலே

இந்த யுத்தம் நிற்கவேண்டும்

இதை அழியாது தரிசிக்கணும்

நாங்க என்றுமே!

இயற்கை அமுதமாம்

எமக்களித்த பெட்ரோலியம்

இன்று ஆணவத்தால் அழிக்கப்படுவது

யானை தன்தலையில் தானே மண்வாரிப்போடுவது போல்

எல்லாரும் பாதிப்பு என உணரலையே!

சிலிண்டர் கிடைக்கலையாம்

சீரான பெட்ரோல் பஞ்சம் ஏற்படுமே

சிந்தனை செய்வாய் மனித இனமே

செயற்கைச் சீரழிவு

மன்னிப்பு கேட்பாயோ!

நீர் பிறந்தபோது அறிவித்த சமாதானம் - இயேசுவே

நிரம்பி வழியணும் இப்புவியினிலே

உம்மால் மட்டுமே முடியும் இது

உலகம் உம் ஆட்சி வருக!

உலக சகோதரத்துவம் சமாதானம்

உலகை மீட்டவர் உயிர்த்தவர் தரவேண்டும்.

உண்மை அமைதியின் மூலவர் அவர்.

.நா-வை விட மேம்பட்ட வலிமை இயேசுவே!

எகிப்தில் அன்று துன்புற்ற மக்கள்

எழுப்பிய துயரக் குரல் கேட்ட இறைவன்

எம் புண்ணிய பூமியிலே

என்றும் அமைதி காப்பாராக!