தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமான ‘நம் வாழ்வு’ இதழின் துணை ஆசிரியராக, கடந்த ஓராண்டு காலம் சிறப்புடன் பணியாற்றிய அருள்பணி. ஜேக்கப் குருசங்கர் அவர்கள், தற்போது தனது சொந்த மறைமாவட்டப் பணிக்குத் திரும்புகிறார். ‘நம் வாழ்வு’ குடும்பம் மனதார வாழ்த்தி வழியனுப்புகிறது. திருத்தந்தையின் ஆழமான செய்திகளைச் சாமானிய வாசகர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ‘திருத்தந்தையின் திருவாக்கு’ மற்றும் ‘சதுக்கத்தின் சப்தம்’ ஆகிய பகுதிகள் வழியாகத் தொடர்ந்து வழங்கி, ஆன்மிகத் தேடல் கொண்ட வாசகர்களுக்கு ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.
தமிழ்நாடு
ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்கு இவரைத் தந்து உதவிய ஊட்டி மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்களுக்கு, ‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத் தலைவர், மற்றும் ஆசிரியர் குழு சார்பாக எமது நன்றியினை உரித்தாக்குகிறோம்.
அருள்பணி.
ஜேக்கப் குருசங்கர் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இறைப்பணி சிறக்கவும், அவருக்குத் தேவையான உடல், உள்ள மற்றும் ஆன்ம நலன்களை இறைவன் நிறைவாகத் தந்து வழிநடத்தவும் ‘நம் வாழ்வு’ இதழ் அன்புடன் வாழ்த்தி வழியனுப்புகிறது.
முதன்மை ஆசிரியர்