news-details
சிறப்புக்கட்டுரை
மாயப் பிம்பமும் மணல் கோட்டையும்

தனிமனித அரசியல் பங்கேற்பே குடியாட்சித்  தத்துவம். தேசத்தின் குடிமக்களுக்குப் பாலின, இன, மத, மொழி, தொழில் எனப் பாகுபாடுகள் இல்லை. நடிகை, நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்; அதற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அடிப்படை அரசியல் அறிவு உள்ளதா? நடிகை, நடிகர்கள் அரசியலுக்கான அடிப்படைத் தகுதிகளைக் கொண்டுள்ளார்களா என்பதே கேள்வி.

ஓட்டு அரசியல் என்பதே எண்ணியல் சார்ந்த கணக்கீடு. தமிழ்நாட்டுத் தேர்தல் கள வெற்றி என்பது கூட்டணி அரசியல்வழி பெறுவது. சில வேளைகளில்  மூன்றாவது, நான்காவது என அணி அமைத்து வெற்றி அடைவது. மாற்று அணியைத் தோல்வி அடையச் செய்வது. 2016 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தி.மு..வின் வெற்றியைத் தடுத்தது. வரலாறு திரும்பும் என்பது கோட்பாடு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், பா... மூன்றாவது, நான்காவது அணி வழி ஆட்சி மாற்றத்திற்கு அடிபோடுகிறது. நான்காவது அணிக்குத் தேர்தல் என்பது வெற்றி அல்ல; பயிற்சி என்பதாகும். மூன்றாவது அணியான நடிகர் விஜய் அவர்களைப் பற்றி உற்றுநோக்குவோம்.

நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் தன் கட்சி கொள்கை அறிவிப்பில் பா...வைத் தன் கொள்கை எதிரி எனப் பிரகடனம் செய்தார். அதன்பின் நீட், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் என்பதில் ஒன்றிய அரசை எதிர்த்து பா... என்ற வார்த்தையைக் கூறாமல் கேள்வி தொடுத்தார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்துநடிகர் விஜய் ஏன் பா... பற்றிப்  பேசுவதில்லை?’ என்ற கேள்விக்கு சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பில்சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போது தமிழ்நாட்டு ஆளுங்கட்சியைத்தான் பேசவேண்டும், பா...வைப் பற்றிப் பேசத் தேவையில்லைஎன்று பதில் தந்துள்ளார்.

ஆம், சரியான வாதம்தான். நடிகர் விஜய் தமிழ்நாட்டு அரசிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தாரா? ஆளுநர்  பதவி என்பது வேண்டாத பதவி எனக் கூறிவிட்டு, ஆளும் அரசைக் குறை கூறி, .வெ.. ஆளுநரைச் சந்தித்ததே! அது எதில் சேர்த்தி? தமிழ்நாடு ஆளுநர், ஆளும் தி.மு.. அரசு மீது தரும் நெருக்குதலைக் கண்டித்தாரா? ஏன் பா... என்றால் விஜய் பயப்படுகிறார்?

தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக சென்னை வந்த பியூஸ் கோயல் பா... நிர்வாகிகளுக்கு, “.வெ..வை விமர்சிக்க வேண்டாம்என அறிவுரை கூறுகிறார். பா... முன்னணித் தலைவரான தமிழிசை சௌந்திரராஜன் அவர்களோ, வாரம் ஒரு முறை .வெ.. தமிழக என்.டி.. கூட்டணிக்கு வர வேண்டும் என மென்மை காட்டுகிறார். பொதுவெளியில் கூட்டணி அழைப்புவிடுக்கிறார். மதவாத பா... சிறுபான்மை மக்களின் வாக்குகளை விஜய் வழியாகப் பிரிக்கப் போட்ட ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம் இவ்வாறு நடைமுறையானது.

பா... திட்டமிட்டு வருமான வரி வழக்குகளில் நடிகர் விஜய் அவர்களைச் சிக்க வைத்துள்ளது. ‘மாஸ்டர்மற்றும்பிகில்திரைப்படத் தயாரிப்பாளர்கள் மதுரை அன்புச்செழியன், லலித் குமார் வீடுகளில் நடந்த வருமான வரிச் சோதனையில் முழு கறுப்புப் பண விவகாரமும் பிடிபட்டது. ‘புலிபடத்திற்குப் பெற்ற பணம் 15 கோடிக்கு வருமான வரி 1.5 கோடி கட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. இதைவிட 2012-இல் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி கட்டவில்லை. தான் ஒரு பிரபல நடிகர் என்பதை மறைத்து வரி விலக்கு வேண்டுகிறார். இவ்வளவு ஆண்டுகளாக வழக்கு நடந்து தீர்ப்பளித்த நீதிபதி கூறுகிறார்: “விஜய் தன் இரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்; அவர் வரி செலுத்த மறுப்பது ஏற்புடையது அல்ல; அவர் வரியைச் சரியாகச் செலுத்தவேண்டும். வரி விதிப்பு முறை என்பது நாட்டின் முதுகெலும்பு. வரி வருவாயைக்  கொண்டுதான் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள் என மக்கள் நலத்திட்டங்கள் நடக்கின்றன.”  இதைத்தான் ஊழலை ஒழிக்க வந்த நடிகர் விஜய்யின் அடிப்படை அரசியல் நேர்மை, அறம் எனலாம். வருமான வரி வழக்குகள், கரூர் பெருந் துயர வழக்கு எனத் .வெ..வைப் பா... மடக்கிவிட்டது.

விஜய்பாசிசம், ‘பாயாசம்எனப் பேசிவிட்டு பாசிசத்தின் அடிப்படையானஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை மூளைச் சலவை செய்என்ற ஹிட்லரின் அமைச்சரான ஜோசப் கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு தமிழ்நாட்டு மக்களைத் திசை திருப்புவது அடிப்படை அரசியல் பண்பற்ற செயலாகும். .வெ..வினர் அடிப்படை ஆதாரமற்ற பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள். இவர்கள் கட்டுப்பாடற்ற, ஒழுங்கற்ற கூட்டம் என சேலம் .வெ.. கூட்டத்தை ஒரு பிரபல  தொலைக்காட்சி வருணித்தது.

விஜய் இரசிகர்கள் அரசியல் புரிதலற்ற மன நிலையில் இருக்கிறார்கள். நடிகர் விஜய் கூடநான் வலதும் இல்லை, இடதும் இல்லைஎன நேர்காணல் கொடுத்ததாக நேர்காணல் எடுத்தவர், நேர்காணல் கொடுத்திருந்தார். தலைவருக்கே அடிப்படை அரசியல் புரிதல் இல்லை; தொண்டர்களும் தங்கள் தலைவர் விஜய் வழியில்பஞ்ச்டயலாக் பேசுவது, சவால் விடுவது  எனச் சமூக ஊடகங்களில் போக்குக் காட்டுகிறார்கள். அனைத்திற்கும் உச்சமாக, கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் செய்யும் அடாவடிகள்புளுகு மூட்டைகள் இதுவரை தமிழ்நாடு தேர்தல் களம் காணாத அவலமாகும். இதில் கொதித்துப் போன தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்: “மூத்த அரசியல் தலைவர்களை நடிகர் விஜய் நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது. விஜய் உடனடியாக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவர் விஜய்.”

ஆம், சரிதான். 33 வருட சினிமா வாழ்வில் நடிகர் விஜய் மூன்று முறை அரசுப் பொதுத்தேர்வுகளில் முதலிட மாணவர்களுக்குப் பரிசு வழங்கியது, ஈழ தமிழர் நிதிக்குப் பெருந்தன்மையாக  ரூ. 500 வழங்கியது, ‘நீட்தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த அனிதா வீட்டிற்குச் சென்றது, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை வேடிக்கை பார்க்கச் சென்றது, டெல்லியில் இராகுல்காந்தியைச் சந்தித்தது, கோவையில் மோடியைச் சந்தித்தது... என விஜய்  பொதுவெளிக்கு வந்த நிகழ்வுகள் சொற்பம் என்பதே நிஜம்.

நடிகர் விஜய் அவர்களுக்கு மோடியைச் சந்தித்த போதே வருமான வரிப் பிரச்சினைகள் ஆரம்பமாகிவிட்டன. அந்த விஜய்தான் ஊழலை ஒழிப்பார் என நம்புகிறார்கள்.

.வெ..வின் கள எதார்த்தம் மக்கள் சேவை, நடப்பு அரசியல் துறந்த கனவுலகு, கற்பனை அரசியல். உண்மைகளை உணர மறுக்கிற தலைமையைக் கொண்ட, இரசிக மனப்பான்மை கொண்ட மாய பிம்ப அரசியல். நாம் கவனித்து இருப்போம்: சிறு குழந்தைகள் கடற்கரை மணலில் கோட்டைக் கட்டி விளையாடும். அதுபோல, மணல் கோட்டையில் தன்னை முதல்வராகக் கருதி இன்றும் வாழ்கிற விஜய் என்கிறவரின் மனப்பிறழ்வுஆயிரமாயிரம் தமிழ்நாட்டு இளைஞர்களை நாசம் செய்கிறதேஎன்பதே நம் கவலை!