“அறிவுக்கு எல்லை என்பது கிடையாது. அறிவின் அடர்த்தியைப் பொறுத்தே உயிரினங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. மூடநம்பிக்கைகளை விலக்கி, அறிவியல் ரீதியாக மனிதனை நெறிப்படுத்துவது அறிவாற்றல். இலக்கியங்களைப் படிக்கும்போதுதான் எளிய மக்களை நம்மால் நேசிக்கமுடியும். சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்கள்தான் மனிதனை மேம்பட்டவனாக மாற்றுகின்றன. கோபம், அச்சம், விரக்தி, மன அழுத்தங்களைப் போக்க அறிவாற்றலை அனைவரும் கையாளவேண்டும்.”
திரு. வெ.
இறையன்பு
மேனாள்
தலைமைச்
செயலர்,
தமிழ்நாடு
அரசு
“இன்றைய
காலகட்டத்தில் கூகுள், ஏ.ஐ. மூலமாகப்
பல தகவல்களைச் சில நொடிகளில் அறிய முடியும். ஆனால், ஒரு விசயத்தைப் புதுமையாக, ஆர்வமாகச் சொல்லித் தந்து, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, அவர்களது அறிவாற்றலை அதிகரிக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும். பள்ளியில் படித்த அறிவியல் விதிகளும் கணக்கும்தான் விண்வெளித் துறையில் பெருமளவு பயன்படுகின்றன. ‘இஸ்ரோ’ நிறுவனம் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஏராளமான ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டு, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகின்றனர். விண்வெளித் துறையில் புதிய தொழில் முனைவோர் உருவாகி வருகின்றனர்.”
திரு. வீரமுத்துவேல்,
இஸ்ரோ
இயக்குநர்