கேரள மண்ணில் உதித்த கார்முகிலாம் ஒளிவிளக்கே!
கார்மல்
சபையின் சிறந்த முத்தே மங்கா
விளக்கே!
புனித
தெரேசாவின் கார்மலின்
முதல் விளக்கே!
தொம்மனில்
தோன்றிய முத்தான மணி விளக்கே!
இறையன்பை
இதயத்தில் ஏந்திய காரிகை நீ!
ஈசன்
வழியில் நிலையாய் அர்ப்பணித்த உயிர் நீ!
அன்பின்
வழியே அவனியில் காட்டிய அருள் நீ!
CTC-சபையைத்
தரணிக்குத் தந்த காரிகை நீ!
செபத்தைச்
சபையின் மூச்சாக்கிய முகிலே!
சேவையை
உலகில் சாட்சியாக்கிய முகிலே!
தாழ்மையில் உருவெடுத்த
தன்னிகரில்லா முகிலே!
தியாகமதைத்
தீர்க்கமாய் வாழ்வாக்கிய முகிலே!
பெண்
கல்விக்கு வித்திட்ட வித்தகியே, சுடர்
விளக்கே!
பின்னடைந்தோர்
உயர்வடைய விடியலான அருள் விளக்கே!
இரக்கமும்
எளிமையும் செறிந்த அருள் விளக்கே!
இடரிலும்
அஞ்சா நெஞ்சம் கொண்ட
சுடர் விளக்கே!
அருளாளர் அன்னை
எலிஸ்வா தாயே!
புனித
நிலைக்கு உயர்ந்திட வேண்டுகிறோம் யாமே!
எங்கள்
செபம் உம்
பாதம் சேருமே!
அணையா
விளக்காய் எம்மை வழிநடத்துமே!