“மைக்ரோ நெகிழிகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியவை. அது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். அன்றாடம் பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ நெகிழித் துகள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றில் அதுகுறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறச்செய்ய வேண்டுமென, குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய-மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.”
சென்னை உயர்
நீதிமன்றம்
“நிகழ்காலத்தின்
மிகப்பெரும் சவாலாகவும், உலகளாவிய உறவுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஏ.ஐ. தொழில்நுட்பம்
உள்ளது. எனவே. அதன் தாக்கம் குறித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து ஆலோசிப்பது அவசியமானது. கடந்த 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய எண்ம ஒப்பந்தத்தின் முடிவுகள் அடிப்படையில் வளர்ந்துவரும் நாடுகளில் ஏ.ஐ. உள்கட்டமைப்பு
மற்றும் பிற தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்துவது, ஏ.ஐ. தாக்கத்தை
அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள தன்னிச்சையான உலகளாவிய அறிவியல் குழு ஏற்படுத்துவது குறித்து உலக நாடுகள் ஆலோசிக்கவேண்டும்.”
அன்டோனியோ குட்டெரெஸ்,
ஐ.நா. பொதுச்செயலர்
“கேரளத்தில்
ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகையை நெல் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கும் விலையுடன் ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் கேரள அரசு ரூ. 6.31/- தொகையை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இது விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை. ஆனால், இதை ஒன்றிய அரசு ‘வேண்டாம்’
என்று கூறுகிறது. பெரும்தொழில் நிறுவனங்களில் பல கோடி ரூபாய்
கடனைத் தள்ளுபடி செய்ய ஒன்றிய அரசு தயக்கம் காட்டுவதில்லை; ஆனால், நெல் விவசாயிகளுக்கு அளிக்கும் தொகைதான் அவர்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.”
பினராயி விஜயன்,
கேரள
முதல்வர்
“நமது
கண்டுபிடிப்புகள், செயல்கள் அனைத்தும் மக்களுக்குப் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதை இன்றைய மாணவர்கள் உணரவேண்டும். தற்போது வளர்ந்துவரும் அறிவுக்கு அடிப்படை கணிதம்தான். அதேபோல் ஏ.ஐ.-க்கும்
கணிதம்தான் அடிப்படை. எனவே, கணிதத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள்.”
எஸ். வின்சென்ட்,
தமிழ்நாடு
மாநில
அறிவியல்
- தொழில்நுட்பக்
கவுன்சில்
செயலர்