திருப்பலி முன்னுரை
இறை
இயேசுவின் துணையோடு சோதனைகளை வெற்றிகொள்ள தவக்காலத்தின் முதல் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. “சோதனையின்றி சாதனை இல்லை; வேதனையின்றி உயர்வு இல்லை; இறைவனை நம்பும் மானிடர் மட்டும் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பர்”
என்ற கூற்றிற்கிணங்க, சோதனைகள் அனைவருடைய வாழ்விலும் வரும்; ஆனால், அவற்றை எதிர்கொள்வதற்கு ஆழமான இறைநம்பிக்கை அவசியம்.
நம்
முதல் பெற்றோரைச் சோதித்த அலகை, இன்றைய நற்செய்தியில் இயேசுவையே சோதிக்கிறது. இயேசுவைப் பாலைநிலத்திற்குச் சோதனைகள், துன்பங்கள், துயரங்கள், இக்கட்டுகள், கவலைகள், வேதனைகள் இவற்றில்
இறைவனை இறுகப் பற்றிக்கொள்ளவும், இயேசுவின் வழியில் சோதனைகளை எதிர்கொள்ளவும் அழைக்கிறது.
நம்மை மீட்க பல துன்பங்களை அனுபவித்து,
தமது உயிரையும் கொடுத்த இயேசுவின் மீது நம் கண்களைப் பதிய வைத்து, சாட்சிய வாழ்வு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
கடவுள்
அனைத்தையும் சிறப்பாகப் படைத்து, நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். ஆனால், நாம் நுகர்வுக் கலாச்சாரம், பேராசை, அதிகாரப்போக்கு, உலக மயம், இவற்றில் சிக்குண்டு கடவுளைப் பிரிந்து வாழ்கின்றோம். அழிவுக்கு அழைத்துச்செல்லும் பாவத்தை விடுத்து, இறைவனின் பிள்ளைகளாக இறை உறவில் நிலைத்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
இன்றைய
இரண்டாம் வாசகம் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நுழைந்த பாவத்தைப் பற்றியும், இயேசுவின் கீழ்ப்படிதலால் வந்த மீட்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் வருவது சாவு எனவும் கீழ்ப்படிதலால் வருவது வாழ்வு எனவும், ஆன்மிக வாழ்வைப் புடமிட்டுக் காட்டுகிறது. ஆண்டவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரின் மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! உமது மறையுடலாம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் பயணத்தில் சந்திக்கும் அனைத்து சவால்களையும் எதிர்ப்புகளையும் உம் துணையோடு கடந்திடத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின்
இறைவா! இத்தவக்காலத்தில் பாவத்திலிருந்து விலகி அருள்வாழ்வில் நிலைக்கவும், உமது பேரன்பை அனுதினமும் சுவைக்கவும், அனைத்துச் சோதனைகளையும் உம் அருளால் கடந்திடவும் தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின்
இறைவா! உமக்கு நேரிட்ட அனைத்துச் சோதனைகளையும் வென்று இறைத்திருவுளத்தை நிறைவேற்றியதுபோல, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை உமது உடனிருப்பால் வென்றிடத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின்
இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மிகச் செல்வங்களுக்குக் கொடுக்கவும், பகையை மறந்து அனைவரோடும் நல்லுறவோடு வாழத் தேவையான நல்மனத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.