news-details
சிறப்புக்கட்டுரை
சிறுவர்கள் ‘வேட்டைக்காரர்களாக’ மாறுவது ஏன்?

பள்ளிப் பாடங்களைக் கற்க வேண்டிய வயதில், ஒரு பெண்ணைச் சூழ்ந்துகொண்டு எப்படித் துன்புறுத்துவது என்று நம் சிறுவர்கள் இன்று கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.”  - இது ஏதோ ஒரு திரைப்படத்தின் வசனம் அல்ல; இன்றைய இந்தியாவின் கசப்பான எதார்த்தம். சாலைகளில், பேருந்துகளில், வகுப்பறைகளில் என எல்லா இடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு அரண் அமைத்துத் தளர்ந்துபோன நாம், இப்போதுபெரியவர்களிடமிருந்து மட்டுமல்ல, பத்து வயது சிறுவர்களிடமிருந்தும் நாம் பெண்களைப் பாதுகாக்கவேண்டுமா?’ என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அண்மையில் டெல்லியில் நடந்த இரு நிகழ்வுகள் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. முதல் நிகழ்வில், 14 வயது சிறுவன் ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டபோது, காவல்துறை அவனைத் தண்டித்தது. அப்போது அவனது தாய், “நீங்கள் என் மகன்மீது மிகையாக எதிர்வினை ஆற்றுகிறீர்கள்; அவன் வெளிநாட்டுப் பெண்ணை இதுவரை நேரில் பார்த்ததில்லை, அதனால் சிறிது உணர்ச்சிவசப்பட்டுவிட்டான்என்று நியாயப்படுத்தினார்.

டெல்லியின் பஜன்புரா பகுதியில் நடந்த இரண்டாவது நிகழ்வு இன்னும் கொடூரமானது. ஆறு வயது சிறுமியை 10, 13 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் ஏமாற்றி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் கொடூரம் என்னவென்றால், அந்தச் சிறுமி அண்மையில் இறந்து போன தங்கள் நண்பனின் இளைய சகோதரி. இதில் 10 வயது சிறுவனின் தாய், பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலையைக் கண்டு துடித்துப் போனார். தன் மகன் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்த அந்தத் தாய், எவ்விதப் பாரபட்சமும் இன்றி அவனைத் தானே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த இரு தாய்மார்களின் அணுகுமுறையில்தான் நம் சமூகத்தின் எதிர்காலம் ஒளிந்திருக்கிறது. ஒருவர் குற்றத்தைச் சாதாரணமாக நினைக்கிறார்; மற்றொருவர் குற்ற உணர்வில் தவிக்கிறார்.

பெங்களூருவின் அவலஹள்ளி காட்டில்ஜாகிங்சென்ற பெண்ணைப் பார்த்து 10 முதல் 13 வயது சிறுவர்கள் ஆபாசக் கமெண்டுகளை வீசுகின்றனர். ‘இன்ஸ்டாகிராம்பிரபலத்தை ஒரு சிறுவன் தவறாகத் தொடுகிறான். இவை எதார்த்தமாக நடப்பவை அல்ல; வகுப்பறைகளில் பெண் ஆசிரியர்களுக்குப் பணிந்து நடக்க மறுக்கும் மாணவர்கள், அவர்களின் உருவத்தைப் பற்றி ஆபாசமாகப் பேசுவது அதிகரித்துள்ளதாக 2025-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆண்ட்ரூ டேட் போன்ற இணையப் பிரபலங்கள் பரப்பும்நச்சு ஆணாதிக்கம்இன்றுஸ்மார்ட் போன்கள்வழியாக நம் வீட்டுக் குழந்தைகளின் படுக்கையறை வரை நுழைந்துவிட்டது. ‘பெண்கள் போகப்பொருள், அவர்களை அடக்கி ஆள்வதே ஆண்மைஎன்ற நச்சுக் கருத்துகளைச் சிறுவர்கள் வேதவாக்காக நம்பத் தொடங்கியுள்ளனர்.

குற்றவாளிகளான சிறுவர்களைத் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும்; ஆனால், அவர்கள் ஏன் இப்படி மாறினார்கள் என்று நாம் என்றாவது யோசித்ததுண்டா? இதற்கு விடை நம் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறது. இந்தியாவில் முப்பது விழுக்காடு பெண்கள் வீட்டு வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு தந்தை தன் தாயை அடிப்பதையும், அவமரியாதையாகப் பேசுவதையும் பார்க்கும் ஒரு சிறுவன், ‘பெண்களை இப்படித்தான் நடத்தவேண்டும்என்ற தவறான பாடத்தை வீட்டிலேயே கற்கிறான்.

மேலும், சிறுவயதில் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளான சிறுவர்களே, வளர்ந்த பிறகு மற்றவர்களை வேட்டையாடும் வேட்டைக்காரர்களாக மாறுகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். அவ்வாறே, வன்முறை கலந்த ஆபாசப் படங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளைச் சிறுவர்கள் எளிதில் அணுகுவது அவர்களின் மூளையைச் செயலிழக்கச் செய்வதாக வும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு பெண்ணை மதிப்பதே உண்மையான ஆண்மையின் அடையாளம். உங்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தோழி, உங்கள் சகோதரியைப் போன்றவள் மட்டுமல்ல; அவளும் உங்களைப் போன்ற ஒரு சகமனிதர். அவளது உடலைப் பற்றியோ, உடையைப் பற்றியோ கேலி பேசுவது உங்களைஹீரோஆக்காது; மாறாக, உங்களை ஒருகோழையாகவே காட்டும். வகுப்பறையில் மாணவிகள் பேசும்போது குறுக்கிடாமல் செவிமடுங்கள். அவர்களைக் கேலி செய்வதோ, உருவக் கேலி செய்வதோ ஒரு பண்புள்ள மாணவனுக்கு அழகல்ல.

சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும்மீம்ஸ்அல்லது வீடியோக்களை இரசிக்காதீர்கள். ஆண்ட்ரூ டேட் போன்ற நச்சுக் கருத்துகளைப் பரப்புபவர்கள் உங்கள் ஆண்மையைத் தவறான வழியில் திசைதிருப்புகிறார்கள் என்பதை உணருங்கள். மேலும், உங்கள் நண்பர்கள் யாராவது ஒரு பெண்ணைத் தவறாகப் பேசினாலோதுன்புறுத்தினாலோ, அதைத் தட்டிக் கேட்கும் துணிச்சலை வளர்த்துக்கொள்ளுங்கள். அமைதியாக இருப்பது குற்றத்திற்குத் துணை போவதற்குச் சமம்.

ஒரு பெண் கூறும்இல்லை (சூடி) என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வலிமையையும் மரியாதையையும் புரிந்துகொள்ளுங்கள். விளையாட்டாக நீங்கள் செய்யும் ஒரு சிறு அத்துமீறல், ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த வாழ்நாள் கனவையும் சிதைத்துவிடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். டெல்லி பஜன்புராவில் பாதிக்கப்பட்ட அந்த ஆறு வயது சிறுமியின் சிதைக்கப்பட்ட குழந்தைப் பருவத்திற்கு யாரால் நஷ்ட ஈடு வழங்க முடியும்? பத்து வயது சிறுவன் திட்டமிட்டு ஒரு வன்கொடுமையைச் செய்கிறான் என்றால், அங்கேசிறுவன் தானேஎன்ற கருணைக்கு இடமே இல்லை.

வீட்டில் தொடங்கும் ஒழுக்கமே வீதியில் பிரதிபலிக்கும். பெற்றோர்களே, உங்கள் மகன்கள் பள்ளிப் பாடங்களைப் படிக்கிறார்களோ இல்லையோ, சக மனிதர்களை குறிப்பாக, பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்கிறார்களா? என்பதைக் கவனியுங்கள். இல்லையெனில், நாம் எதிர்காலத் தலைவர்களை அல்ல; எதிர்காலக் குற்றவாளிகளையே வளர்த்துக் கொண்டிருப்போம்.

நம் ஆண் குழந்தைகள் வேட்டைக்காரர்களாக மாறாமல், பண்புள்ள மனிதர்களாக வளர நாம்தான் உதவிடவேண்டும். தந்தையர் தங்கள் மனைவியிடம் (தாயிடம்) காட்டும் மரியாதையே, ஒரு மகன் எதிர்காலத்தில் பெண்களை எப்படி நடத்துவான் என்பதைத் தீர்மானிக்கிறது.

பெற்றோர்களே, வீட்டில் சமத்துவத்தைப் பேணுங்கள். சிறு வயதிலேயே அலைப்பேசியைக் கையில் கொடுத்துவிட்டு விலகி நிற்காதீர்கள். அவர்கள் என்ன பார்க்கிறார்கள்? யாரைப் பின்தொடர்கிறார்கள்? என்பதைக் கண்காணியுங்கள்.

சிறுவர்கள் கோபப்படும்போது அல்லது ஆக்ரோஷமாக நடக்கும்போது அவர்களை அடிக்காதீர்கள்; மாறாக, அவர்களின் உணர்வுகளை எப்படிச் சரியான வழியில் வெளிப்படுத்துவது, மடைமாற்றுவது என்பதைக் கற்றுக்கொடுங்கள்உங்கள் மகன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்தால், ‘சிறுவன் தானேஎன்று நியாயப்படுத்தாமல், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள்.

குழந்தைகளுக்குநல்ல தொடுதல் (Good Touch) மற்றும்தீய தொடுதல் (Bad Touch) பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள். இது அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருக்கவும் உதவும்.

தண்டனைகளைவிட, வீடுகளில் விதைக்கப்படும் நற்பண்புகளே பாலியல் குற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வாகும்.