மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலைக் குறிப்பிட்டு, அமைதிக்காக உலக நாடுகள் ஒன்றிணையவேண்டும் என்று திருத்தந்தை லியோ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமைதிக்காக நாம் அனைவரும் மிக அதிகமாகச் செபிக்கவேண்டும்” என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். மத்தியக் கிழக்கில் குறிப்பாக, பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் திருத்தந்தையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சாதாரண மக்களாகிய நாம் அமைதிக்காக உரக்கக் குரல் கொடுக்கவேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும்” என்று வலியுறுத்தினார்.