news-details
சிறப்புக்கட்டுரை
சுரண்டல்: துப்புரவிலிருந்து டிஜிட்டல் வரை... (வலையும் வாழ்வும் – 39)

சின்னப்பனுக்கு இன்று முதல் நாள் வேலை. இந்த வேலையைப் பெறுவதற்குப் பலரின் சிபாரிசு அவனுக்குத் தேவைப்பட்டது. ஒருவழியாக, பல போட்டிப் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த வேலை கிடைத்தது.

காலையிலேயே பரபரப்பானது அவனது உலகம். சின்னப்பன் இயல்பாகவே எல்லா வேலையும் செய்வான். ஆனால் என்னவோ, எந்த வேலையும் அவனுக்கு நிரந்தரமாக அமையவில்லை. தன் மனைவி மற்றும் தன் ஒரே மகளோடு வேளாங்கண்ணி ஊர் பக்கத்திலேயே வாழ்ந்து வந்தான். வேலைக்குக் கிளம்பும்போது தன் முடியை ரிப்பனால் பின்னியபடியே சின்னப்பனின் பத்து வயது மகள் கேட்டாள்: “அப்பா, அப்படி என்ன வேலைக்குத்தான் போற? சொல்லிட்டுப் போயேன். வரும்போது மறக்காம மைசூர் பாக்கு வாங்கிட்டு வாப்பா... சரியா?” சின்னப்பன் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தன் மகளுக்கு முத்தம் ஒன்றை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

நாகப்பட்டினம் பேருந்து நிறுத்த கழிவறை பராமரிப்புப்பணி அது. ஆண்-பெண் கழிவறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். அதில் கிடைக்கும் பணத்தில் நாற்பது விழுக்காட்டை ஊதியமாக வைத்துக்கொள்ளலாம். மீதமுள்ள அறுபது விழுக்காடு பணத்தை நகராட்சியிடமிருந்து கழிப்பறை பராமரிப்புக் குத்தகைக்கு எடுத்திருந்த குமாரிடம் கொடுக்கவேண்டும் என்றடீலுக்குசரி சொல்லியிருந்தான் சின்னப்பன்.

நாற்றம் அவன் குடலைப் புரட்டிப்போட்டது. டவலைத் தன் முகத்தோடு இறுக்கமாகக் கட்டிக் கொண்டு தண்ணீரை ஊற்றிச் சுத்தம் செய்தான். துண்டு பீடிகள், மென்று துப்பப்பட்டிருந்த சுவிங்கங்கள், உப்புக்கறை படிந்த நீர்ப்பாதை, பளுப்பு நிறமேறிய சிறுநீரேந்திகள், துருப்பிடிந்திருந்த நீர்வழிக்குழாய்கள் எல்லாவற்றையும் முடிந்தவரை சுத்தம் செய்தான். வேலைப்பளுவில் உடைந்து விழுந்த விளக்குமாறு குச்சிகள்என்னை விட்டுவிடுஎன்று சொல்வது போல, கழிவறைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோதே பலர் கழிப்பிடங்களைப் பயன்படுத்திவிட்டுச் சென்றது இன்னும் வேலைப்பளுவைக் கூட்டியது.

ஏதோ ஒருவழியாக ஆண்-பெண் கழிவறைகளைச் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தூவினான். ஓரளவிற்குப் பரவாயில்லை போலிருந்தது அவனுக்கு. பிளாஸ்டிக் பையில் வைத்து, தான் கொண்டு வந்திருந்த சட்டை வேட்டியை மாட்டிக்கொண்டான். முடி சீவி தன்னைச் சிங்காரித்துக்கொண்டான். ஒரு முதலாளியைப்போல கழிப்பறைக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த நாற்காலி மேசையில் வந்து அமர்ந்து கொண்டான். அது அவனுக்கு ஒருவிதப் பெருமையைக் கொடுத்தது. கழிவறை முன்பாக நாற்காலி மேசை போடப்பட்டிருந்தாலும் முதலாளி வேடம் அவனுக்கு கழிப்பிட வாடையைக் கடந்த ஒரு போதையை உருவாக்கியிருந்தது.

கழிவறைக்கு வருவோர், போவோரிடம் ஒன்றுக்குப் போகவேண்டுமென்றால் ரூபாய் பத்து, இரண்டுக்கு என்றால் ரூபாய் பதினைந்து என்று கறாராக வாங்கிக்கொண்டான். ‘கக்கூசுக்குக் கொடுக்குற காசுல டீ, வடை சாப்பிட்டிடலாம் போலஎன்று கோபப்பேச்சுப் பேசுவோரும் உண்டு.

சின்னப்பன் காசைத் தவிர வேறு எதையும் காதில் வாங்கிக்கொண்டதில்லை. வீட்டிற்குப் போவதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை கழிப்பறையைச் சுத்தம்செய்துவிட்டு தானும் குளித்துச் சுத்தம் செய்துகொண்டான்.

கிடைத்த வருவாயில் தன் மகளுக்கு நாகப்பட்டினம் பேருந்து நிறுத்தப் பேக்கரியில் மைசூர் பாக்கு வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான்.  ‘அப்பா இன்னைக்குச் சீக்கிரம் வந்திட்டாருஎன்று தன்னைப் பார்த்து ஓடிவந்த மகளை வாரி அணைத்துக்கொண்டு தன் கையில் வைத்திருந்த மைகூர் பாக்கு மிட்டாயைக் கொடுக்க நினைத்த போது, “அப்பா உம்மேல மூத்திர வாடைஎன்று கூறிக்கொண்டு அப்பாவின் பிடியிலிருந்து விலகியோடினாள் மகள். கீழே விழுந்து இரண்டாக உடைந்தது மைசூர் பாக்கு மட்டுமல்ல, சின்னப்பனுடைய சின்ன இதயமும்தான். கழிப்பறைச் சுத்தம் செய்யும்போது, கழிவறைக்கு முன்னால் உள்ள மேசையில் அமர்ந்திருக்கும்போது உணராத சிறுமையைத் தன் மகள் வெளிப்படுத்திய அருவறுப்பில் உணர்ந்தான் சின்னப்பன்.

சின்னப்பனைப் போல இன்று தொழிலாளர் வர்க்கம் பலவிதங்களில் சிறுமைப்படுத்தப்படுவதும் சுரண்டப்படுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மாறிவரும் டிஜிட்டல் உலகிலே புதிய தொழிலாளர் வர்க்கம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை நாம்டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கம் (Digital Proletariat) என்று கூறலாம். இன்று கொஞ்சம்கம்யூனிசம்பேசுவோமா?

யார் இந்த டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கம்? டிஜிட்டல் முதலாளித்துவத்தின் கையிலிருக்கின்ற இணையமும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் இயங்குவதற்குத் தங்களின் நேரம், கவனம், உழைப்பு மற்றும் தரவுகளை (Data) வழங்கும் டிஜிட்டல் உழைப்பாளர்களைக் குறிக்கும் ஒரு புதிய சொல்லாடல்தான்டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கம்ஆகும்.

தொழில்துறை முதலாளித்துவத்தில் (Industrial Capitalism) தொழிலாளர்கள் தங்கள் உடல் உழைப்பால் முதலாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மூலப்பொருள்களைப் (Raw Resourcesபயன்படுப் பொருள்களாக (Commodities) மாற்றினர். எனினும், அத்தொழிலாளர்கள் அவர்களின் உழைப்பிற்கான ஊதியம் கிடைக்காமல் சுரண்டப்பட்டனர்.

இன்றைய காலத்தில் உருவாகியிருக்கும் டிஜிட்டல் முதலாளித்துவத்தில் (Digital Capitalism) இலாபமும் மதிப்பும் பொருள்களை உருவாக்குவதில் அல்ல; மாறாக, இணையவழி கலந்துரையாடலினாலும், சமூக ஊடகத் தொடர்புகளினாலும் விளைகிறது. ‘ஸ்க்ரோல்செய்வது, ‘லைக்போடுவது, ‘கருத்து எழுதுவதுபோன்ற ஒவ்வொரு சிறிய செயலும் கூட ஒரு சிறு உழைப்பாக மாறி, டிஜிட்டல் நிறுவனங்களுக்குத் தரவாக மாற்றப்படுகிறது. இதில் கொள்ளை இலாபம் ஈட்டுபவர்கள்டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கத்தினர் அல்ல; மாறாக, பெரும் டிஜிட்டல் முதலாளிகளே.

இதில் பெரும் கொடுமை என்னவென்றால், தொழில்துறை முதலாளித்துவம் போலல்லாமல் டிஜிட்டல் முதலாளித்துவத்தில் டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கத்தினரே தொழிலாளர்களாகவும் மூலப்பொருள்களாகவும் உள்ளனர். சமூக ஊடகத்தில் அல்லது இணையத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லது பதிவிடும் ஒவ்வொரு பதிவும் டிஜிட்டல் முதலாளிகளுக்கு நாம் வழங்கும் சேவையே.

பொருளாதாரத்தையும், மனிதர்களின் எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் டிஜிட்டல் முதலாளிகளின் மாய வலையாகிய அல்காரிதங்களுக்குள் (algorithm) நாம் சிறைப்பட்டுக்கிடக்கிறோம். நமக்குத் தெரியாமலேயே நம் உணர்வுகள், செயல்கள் மற்றும் அடையாளங்கள் அனைத்தும் தரவாகப் பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் வணிகப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. மார்க்ஸ், தொழிலாளர் வர்க்கம் (Proletariat) என்பதை உயிர் வாழ்வதற்காகத் தன் உழைப்பை விற்கவேண்டிய சமூகமாக வரையறுத்தார். டிஜிட்டல் காலத்திலும் இந்த வரையறை இன்னும் பொருந்துகிறது. ஆனால், உழைப்பின் வடிவங்கள் மாறியிருக்கின்றன. முன்புபோல் கார்கள் அல்லது துணிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, இன்றைய தொழிலாளர்கள் தரவுத்தொகுப்புகளைப் பலவடிவங்களில் (Dataset) உருவாக்குகின்றனர்.

நாம் இன்று புதிதாகப் பெரும் முதலாளிகளின் சுரண்டலுக்காக ஏற்படுத்தப்பட்டடிஜிட்டல் தொழிலாளர் வர்க்கம் (Digital Proletariat) என்னும் உண்மையை உணரும்போதுதான், நாம் டிஜிட்டல் முதலாளித்துவத்தை எதிர்க்கின்றடிஜிட்டல் கம்யூனிஸ்டுகள்என்ற உணர்வை உருவாக்கிக் கொள்ளவேண்டிய அவசியம் நமக்குப் புரியும்.